பறிபோகும் கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசமும் பிழைப்புவாத தமிழ் அரசியல் தலைமைகளும்! : பி.எஸ்.குமாரன்

பேரின வாதத்தின் இனச் சுத்திகரிப்பு என்பது அந்த இனத்தின் அடையாளங்களை அழிப்பதைப் பிரதான வழிமுறையாகக் கொண்டுள்ளது. வரலாற்று உண்மைகள், தடையங்களை அழித்தும் அவற்றைப் பேரினவாத அடையாளமாக முன்னிறுத்துவதும் இனச்சுத்திகரிப்பின் அடிப்படைகளாக அமைகின்றன. அழிக்கப்படும் வரலாற்றுத் தடயங்களைப் பாதுகாத்தல் என்பது பேரினவாதத்திற்கு எதிரான அரசியலின் முக்கிய கூறாக அமைகிறது.

ஒடுக்கப்படும் இனத்தின் அடையாளங்களை அழித்து அதனை ஒடுக்கும் இனம் பிரதியீடு செய்யும் நிகழ்ச்சிப் போக்கிற்கு எமது கண்முன்னே காணக்கிடைக்கும் உதாரணம் திட்டமிட்டு அழிக்கப்படும் வரலாற்று ஆதாரமான கன்னியா வென்னீரூற்று பிள்ளாயார் கோவிலும் அதன் அருகே நிர்மாணம் பெறும் பௌத்த விகாரையும் இரத்த சாட்சியாய் உறைந்து கிடக்கின்றது..

கடந்த 10 வருட காலத்திற்கும் மேலாக பேரினவாதிகளின் திரிவுபடுத்தப்பட்ட வரலாற்றின் அடிப்படையில் தடுக்கப்பட்ட இப்போது பாழடைந்துவரும் மிக நீண்ட வரலாற்று ஆதாரமான கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோவில் புனர் நிர்மாணப் பணிகள் தொடர்ந்து தடுக்கப்பட்டே வருகிறது. மறுபுறமாக வெந்நீர் ஊற்றுக்களை அண்மித்த மலையடி வாரப்பகுதியில் புதிதாக பௌத்தர்களுக்குரிய வணக்கஸ்தலம் ஒன்று நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் தடுக்கப்பட்டிருப்பது பிள்ளையார் கோவில் புனருத்தாரணம் என்பதைவிட, தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று உரிமை மறுதலிப்பு என்பதே சரியானதாகும். இந்துக்கள் இறந்தோரின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியைகளை செய்வதற்குரிய கோவிலாக பலநூறு வருடங்களாக பயன்படுத்தி வரும் கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசத்தின் பூர்வீக வரலாற்றை திரிபுபடுத்தி,அதனை வில்கம் விகாரையுடன் தொடர்பு படுத்தி ஒன்றிணைக்கும் செயல்திட்டத்தின் தொடர்ச்சியாகவே பிள்ளையார் கோவில் நோக்கப்பட வேண்டும். (‘வில்கம் விகாரை’ பிரதேசம் மன்னராட்சிக் காலத்து சிவன் கோவில் என்பதும்   காலப்போக்கில் அது வில்கம் விகாரையாக மாற்றப்பட்டதாகவும் ஒரு கதை திருக்கோணமலை மூத்த தமிழர்களால் கூறப்படுகிறது.)

தற்போதைய வெந்நீர் ஊற்று வரலாற்று திரிவுபடுத்தலின் படி கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் பெரிய குளம் வில்கம் விகாரையுடன் தொடர்பான வரலாற்று பின்னனியை கொண்டுள்ளதாக கூறிக்கொண்டு பிள்ளையார் கோவில் இருந்த இடத்துக்கு அருகில் கண்ணிய வெந்நீர் ஊற்று பகுதியில் பௌத்த விகாரை ஒன்று அமைப்பதற்காக நிதி சேகரிப்பு நிலையம் ஒன்றை வில்கம் விகாரை பௌத்த பிக்கு ஒருவர் நடாத்தி வந்தார்.
தற்போது வெந்நீர் ஊற்றுப்பகுதியின் பின்பக்கத்தில் அமைந்துள்ள மலை அடிவாரத்தில் பௌத்த விகாரை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக அறியக்கூடியதாக உள்ளது.

பௌத்த விகாரை அமைப்பது தவறான செய்கையோ அல்லது விகாரை அமைக்க கூடாதென்பதோ அல்ல இங்கு பிரச்சினை. இன்னமும் பிள்ளையார் கோவிலை புணர்நிர்மானம் செய்ய அனுமதி மறுப்பதேன்? ஏன்பது தான் பிரச்சினை. இதிலிருந்து விளங்கிக்கொள்ளக்கூடிய தொன்றுதான் கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசத்தில் தமிழர்களின் பாரம்பரியத்தை முற்றாக மறுதலிக்கும் விதத்திலும் திரிபுபடுத்திய வரலாற்றை நிலைநிறுத்தும் நோக்கிலும் கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோவிலை இல்லாமல் செய்துவிடும் முயற்ச்சி மேலோங்கி நிற்பது தெட்டத்தெளிவாகத் தெரிகிறது.

இன்று திருக்கோணமலையை மையப்படுத்திய தமிழ் அரசியல் கட்சிகளும் அதன் உறுப்பினர்களும் தமிழர் குடியேற்றம் என்ற போர்வையில் இந்து கோவில் நிலங்களையும் பொதுசொத்துக்களை மறைமுகமாக விற்பனை செய்து தமது சொந்த கஜானாக்களை நிரப்புவதில் அக்கறை கொண்டுள்ளார்களே தவிர திருக்கோணமலையில் தமிழர்களின் பாரம்பரிய உரிமைகளையும் வரலாற்று அடையாளங்களையும் பாதுகாத்து தமிழர்களின் இருப்பை பாதுகாக்கும் நோக்கிலான எந்த செயல்திட்டங்களையும் முன்னெடுப்பதில் அக்கறை கொள்பவர்களாக இல்லை என்பதே உண்மை. கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் பேரினவாதம் முன்னெடுத்து வரும் வரலாற்று திரிபுபடுத்தல்களை சட்டபூர்வமாவதை தடுப்பதற்கான முயற்ச்சிகளை இனியாவது காலதாமதமின்றி மேற்க்கொள்ள தவறின் கன்னியா வெந்நீர் ஊற்றுக்களும் அந்த பிரதேசமும் வில்கம் விகாரையின் ஒரு பகுதியாக பிரகடனப்படுத்துவது நிட்சயம் நடந்தேறும்.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்கும் பேரினவாதத்தின் செயற்திட்டங்கள் ஆர்ப்பாட்டம எதுவுமின்றி அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அதேவேளை தமிழர் தாயகத்தின் வரலாற்று உரிமைகளையும் அவற்றின் அடையாளங்களையும் பாதுகாக்கவேண்டிய கடைப்பாடு உடையவர்களும் தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்து தமது பிரதி நிதிகளாக பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்களான தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமது கடமை பொறுப்புக்களில் இருந்து விலகி வெகு தூரம் நிற்பதையே கன்னியா வெந்நீர்ஊற்று  விகாரை விவகாரம் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றது.

 கடந்த பாராளுமன்றத்தில் 22 உறுப்பினர்களைக் கொண்ட த.தே.கூட்டமைப்பு தமது 6 வருட பதவிக் காலத்தில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் வெந்நீர்ஊற்று விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தின் கவனத்தைஈர்க்க முயலாமையானது வேதனைக்குரியதும் வெட்கப்படவேண்டியதும் கண்டனத்துக்குரியதுமான விடயமாகும். பாராளுமன்றத்தின் மூலம் தமழ் மக்களுக்கு நியாயமான தீர்வுஒன்றினை பெறமுடியாதென்றாலும் தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான குரல்களும் செல்லாகாசென்பதை இதன் மூலம் முழு உலகுக்கும் வெளிப்படுத்தியிருக்கமுடியும்.

ஆக ஈழத்தமிழரை பொறுத்தவரை உருப்படியான அரசியல் தலைமைத்துவம் ஒன்று இல்லாத நிலைமைக்குள்ளாகியுள்ளனர் என்பதே உண்மை நிலவரமாகும். இந்த நிலைமை உடனடியாக நிவர்த்திசெய்யப்படவேண்டிய விடயமாகும் இவ் இவிடயத்தில் புலம்பெயர் உறவுகளும்,  உள்நாட்டு புத்திஜீவிகளும் சமூகபற்றாளர்களும் அக்கறையுடன் செயல்படவேண்டிய அவசியத்தை கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோவில் – பௌத்த விகாரை விவகாரம் வலியுறுத்தி நிற்கிறது.

19 thoughts on “பறிபோகும் கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசமும் பிழைப்புவாத தமிழ் அரசியல் தலைமைகளும்! : பி.எஸ்.குமாரன்”

 1. திருக்கோணாமலை களவு போய் கன நாளாயிற்றூ இன்றூ வென்னீர் ஊற்றீற்கும் வினை வந்தாயிற்றூ.எங்கே இந்தக் கருணா?நம் அடையாளங்கள வேரோடு புடுங்கப் பார்க்கிறார்கள் நீங்கள் இன்னும் என்னதான் செய்கிறீர்கள்?

 2. கருணாவிடம் கேட்டு பிரயோசனமில்லை ஏனென்றால் அது பற்றி கருணாவிற்கு கவலையில்லை. இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான தமிழருக்கு அதுபற்றி கவலையில்லை அவர்களிற்கு இருக்கும் வாழ்வாதார பிரச்சனை வேறு சிந்திக்க இடம்கொடாது. ஆனால் அது பற்றியே பேசிக்கொண்டிருந்தவர்கள் இன்று அமெரிக்க, ஐரோப்பிய சொத்து சம்பந்தமாக அடிபட்டு கொண்டிருக்கிறார்கள்.

 3. கருணா அய்யாவுக்கு சம்பந்தம் இல்லை என்றால் அரசியல்வாதியாய் அவர் என்னதான் செய்கிறார்.

  1. கருணா அய்யாவை விடுங்கோ தமிழ். ஊராள், உங்கடை சம்பந்தர் ஐயா என்ன செய்யிறார் எண்டு எற்பன் விசாரித்துச் சொல்லுங்கோவன்.

   1. சம்பந்தர கேஞங்கோ என்பதே நியாயம்.
    வாக்குகளை வாங்கும் மட்டும் பல்லிளிக்கும் எங்கள் அரசியல்வாதிகளை மக்கள் இனம் கண்டுகொள்ள வேண்டும். இந்தப் பிரச்சனை பற்றி கதைத்தால் அரசாங்கத்தின் பகைமையை சம்பாதிக்க வேண்டிவரும், தனது அளவற்ற சொத்துக்களுக்கு அரசாங்கம் பிரச்சனைதரும் என்ற பயம் தான் அய்யாவுக்கு…

 4. அனுமதியின்றி நாட்டின் எப்பகுதியிலும் சட்ட விரோதமாக வணக்கஸ்தலங்கள் அமைக்க இடமளிக்கப்படமாட்டாது எனவும் .

  இனங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் பிளவுகள் மற்றும் மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்குமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பிரதமர்
  குறிப்பிட்டுள்ளாராமே!! .?

  1. இல்ங்கையில் பிரதமர் என்றால் பிற மதர், பிறத்தியாள கல்யாணம் கட்டி வந்தால் தன் பிள்ள விளங்கான் என் கிராமத்தில் பேசப்படுவதுண்டு அது போலத்தான் கருணா அம்மான் கிழ்க்கு மகாணத்திற்கு பிடிச்ச சனியன்.ஊரைப்பார்க்காமல் ஊரை மேயுது.

   1. கருணா அம்மானை விடுங்கோ தமிழ். ஊராள், உங்கடை சம்பந்தர் அம்மான் என்ன செய்யிறார் எண்டு சொல்லுங்கோவன்.

 5. சம்பந்தர் அய்யா செயலாற்றூபவர் என்பதால் திட்டமிடுபவராக இருந்து கொண்டிருக்கிறார் xxxx .நமது குறகள கோரிக்கையாக்கி இந்தியாவில் வைத்திருக்கிறார்.புலம் பெயர்ந்த தமிழராகிய அனைத்து தமிழரும் சம்பந்தர் அய்யா அவர்களது அணீயாவதே தமிழ் மக்களது சனநாயக குரலை உயர்த்தவும் நம் மக்களது அடிப்படை உரிமைகள் காக்கப்படவும் உதவும்.

  1. சம்பந்தன் திருகோணமலைப் பரளுமன்ற உறுப்பினராக வந்தது 1977ஆம் ஆண்டு.
   இது வரை பா.உவாகப் பதவியில் இருந்த 15 ஆண்டுகளில் தமிழ் மக்களின் –திருகோணமலை மக்களின்– நலனுக்காக என்ன செய்திருக்கிறார்? பட்டியலிடுங்கள்.

   மணியரசனுக்கு நீங்கள் அனுப்பிய பின்னூட்டம்:
   “THAMILMARAN
   Posted on 07/09/2010 at 2:53 pm
   மண்டைக்குள் என்ன களீமண்ணே வைத்திருக்கிறீர்கள் மணீயரசன்?”

   1. கரம்பொன் வசந்தா பேக்கரியும் வேளாங்கன்னி மாதா கோயிலை மோதும் கரம்பொன் கடற்கரையும் மீன் வாங்கப் போகும் சுருவில் கடற்கரையும் ஊர்காவற்றூறயும் காரைதீவை பிரிக்கும் கடலயும் பார்த்துப் பெருமூச்சு விட்டு தமிழ் ஈழக் கன்வு கண்டு வளர்ந்து இன்ற திருக்கோணாமலை நம் மண்ணீன் தலைநகராகும் என நினைக்கவே முடியவில்லை.தமிழர் எல்லோருமே தமது ஊரை, கிராமத்தை இழந்துதான் நிற்கிறோம்.இன் நிலயில் புதிய திசைநோக்கிப் பயணீக்க சம்பந்தர் அய்யா வழி காட்டுவார் என்ற நம்பிக்கை நம்மில் பலருக்கு உள்ளது.

    1. thamilmaran..சுயநலமற்ற அரசியல்வாதிகள் எம்மிடையே உருவாகும் வரை விடிவே இல்லை எமக்கு. சம்பந்தரின் சொத்து விபரத்தை பார்த்தால் அவரின் அரசியல் சுத்தம் விளங்கும்.

     அவர் மட்டுமல்ல.. கன தமிழ் அரசியல்வாதிகள் இப்படித்தான்..

 6. (‘வில்கம் விகாரை’ பிரதேசம் மன்னராட்சிக் காலத்து சிவன் கோவில் என்பதும்   காலப்போக்கில் அது வில்கம் விகாரையாக மாற்றப்பட்டதாகவும் ஒரு கதை திருக்கோணமலை மூத்த தமிழர்களால் கூறப்படுகிறது.) இந்தத் தகவல் தவறானது வெல்கம் விகாரையென இப்போது வழங்கிவரும் விகாரையானது தமிழ் பெளத்தர்களின் ஓரேயொரு எஞ்சி இருக்கும் விகாரையாகும் இதற்கு சோழர் ஆட்சிக்காலத்தில் மானியம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான கல்வெட்டுக்கள் தற்போதும் தமிழில் அங்கு உள்ளன. சோழர் ஆட்சிக் காலத்தில் அதன் பெயர் ராசராசப் பெரும்பள்ளி என்ற வராலாற்றாளர்கள் பேராசிரியர். க.இந்திரபாலா,  பேராசியர் சி. பத்மநாதன் ஆகியேர் ஆதரங்களோடு நிறுவியுள்ள்னர். இதுபற்றிய தகவல்கள் க.இந்திரபாலாவின் “இலங்கைத்தமிழர்: ஓர் இனக்குழுமம் ஆக்கம் பெற்ற வராலாறு” என்ற நூலிலும் சி. பத்மநாதனின் “இலங்கைத் தமிழ் கல்வெட்டுக்கள்” என்ற நூலிலும்  தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. தவிரவும் இந்தப் பிரதேசத்தின் முன்னைய பெயர் வெல்காமம் என்றும் இதனை வெல்காமப் பள்ளி என்று அழைத்திருந்தனர் என்றும்தான் வரலாற்று சான்றுகள் உள்ளள. அதுவே பின்னர் வெல்கம் விகாரையாயிற்று. கட:டுரையின் பேசுபொருளில் எந்த ஆட்சேபனையும் இல்லை ஆனால் வரலாற்றுத் திரிபுபற்றி பேசும் போது நாம் கவனமாக இருக்கவேண்டும்.  நாம் தமிழ் பெளத்தர்கள் இலங்கையில் இருந்ததையே கவனத்தில் எடுப்பதில்லை. அதனை கருத்தில் கொள்ளாமல் தமிழர் பகுதியில் கிடைக்கும் பெளத்த எச்சங்களுக்கு சரியான எமது நியாயப்பாடுகளை முன்வைக்க முடியாது என்பதே என் கருத்து 

  1. மெத்தச் சரியான கருத்து: “நாம் தமிழ் பெளத்தர்கள் இலங்கையில் இருந்ததையே கவனத்தில் எடுப்பதில்லை.”
   தமிழரின் பெரிய சாபக்கேடு இந்த “சைவமும் தமிழும்” மாயை என்பேன். இலங்கையில் தமிழ்ப் பெளத்தர்கள் மாணிக்கவாசகர் காலம் வரையாவது வளமுடன் இருந்தனர்.
   தமிழரிடையே மகாயான பவுத்தமும் வலுவுடன் இருந்ததா என்பதும் ஆராய வேன்டியது.

   1. சைவமும் ஆணவம், கன்மம், மாயை எனகிறதே சிவா, தாங்கள் அடிப்படை உண்மையை அறீந்துதான் பேசுகிறீர்கள்.

  2. தமிழ் பெளத்தர்களூக்கு என்னாயிற்றூ?தமிழ் நாட்டில் பெளத்தம் இருந்ததாகப் பேசுகையில் இல்ங்கையில் இருந்ததற்கும் வாய்ப்புண்டு சத்தியன் இது பற்றீ விளக்க முடியுமா?

   1. இலங்கையில் பெளத்தம் இருந்தது. நான் குறிப்பிட் இரண்டு நூல்கிலும் அதற்கான தொல்லியல் சான்றுகள் மிக ஆணித்தரமாக உள்ளன. தவிரவும் மிகத்தீவீர இந்து மதத்தினராக இருந்த சோழ ஆட்காலத்தின் உச்சக்கட்டத்திலேயே தட்சிண கையாலய கோணேச பூமியில் ஒரு சொழ மண்ணன் இந்த வெல்கம் விகாரையை பாரமரிக்க வேண்டிய அவசியம் இருந்துள்ளது இதனூடு இலங்கையில் தமிழ் பெளத்தாக்களின் இருப்பு நிச்சயமானது வலுவானது. ஆனால் அது நிச்சயமாக தற்போதைய சிங்கள பெளத்தம் அல்ல தவில இலங்கையின் பெளத்தத்தின் சிதைவு குறித்து காரணங்கள் எனக்கு தெரிந்தவரையில் குறைவு அது பற்றித் தெடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன். இலங்கையில் தமிழ பெளத்தர்கள் பற்றிய பதிவு ஒன்றினை எழுத முயற்சி பண்ணிக்கொண்டிருக்கிறேன் முடிவடைநததும் வெளியீடுகிறேன் 

    1. சத்தியன் அவர்களது முயற்சிகளூக்கு நன்றீ.

   2. இதுபற்றிய தகவல்கள் க.இந்திரபாலாவின் “இலங்கைத்தமிழர்: ஓர் இனக்குழுமம் ஆக்கம் பெற்ற வராலாறு” என்ற நூலிலும் சி. பத்மநாதனின் “இலங்கைத் தமிழ் கல்வெட்டுக்கள்” என்ற நூலிலும்  தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. 

Comments are closed.