பயங்கரவாதத்தைக் காரணம் காட்டி வாக்குக் கொள்ளை : UNP

பயங்கரவாதம் என்ற போர்வையில் அரசாங்கம் வாக்கு கொள்ளையில் ஈடுபட முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாணசபை தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் பாரியளவில் அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்கின்ற போதிலும் தேர்தல் ஆணையாளர் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் நடைபெறும் பிரதேசங்களுக்கு ஆளும் கட்சி பல்வேறு குண்டர் குழுக்களை அனுப்பி வைத்துள்தாகவும், அவர்கள் பல்வேறு அடக்குமுறைகளை வலிந்து மேற்கொள்வதகாவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில்; நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளார். இலக்கத் தகடுகள் அற்ற வாகனங்களை அரசாங்க ஆதரவாளர்கள் பயன்படுத்தி வருகின்றமை தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியின் முதலாமைச்சர் வேட்பாளரான பேர்டி பிரேமலால் திஸநாயக்கவிற்கு சுமார் 71 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதிக பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவும் மேஜர் ஜானக்க பெரேராவிற்கு 4 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதகாவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.