பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்.

பத்திரிகையாளர்களைச் சந்திப்பதற்காக சென்னை அரசினர் தோட்டத்தினுள்ள பிரஸ் கிளப்பிற்கு வந்த சீமானை உள் நுழைய விடாமல் தடுத்துக் கைது செய்தது போலீஸ். இந்நிலையில் அவரிடம் கருத்துக் கேட்பதற்காகச் சென்ற பத்திரிகையாளர்களை கடுமையாகத் தாக்கியது போலீஸ். இதனால் போலீசாரை கண்டித்து பத்திரிûயாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் கருணாநிதிக்கோ அவரது காவல்பட்டாளத்துக்கோ எதிராக எதுவுமே செய்ய முடியாது எனபதைப் புரிந்து கொண்ட ஊடகவியளார்கள் மௌனமாக கலைந்து சென்றனர். இனி சில கண்டன அறிக்கைகள் வெளிவரும். பெரும்பலான தமிழக ஊடகங்கள் கருணாநிதியின் குடும்பத்தினுடையது மீதியுள்ளவைகள். கருணாநிதியின் குடும்பங்களை சார்ந்து வாழும் முதலாளிகளால் நடத்தப்படுபவை என்பது குறிப்பிடத் தக்கது.