பணத்​துக்கு வாக்​க​ளிக்​கும் நிலை தொடர்ந்​தால் ஜன​நா​ய​கம் அல்​லாத பாதை பற்றி சிந்​திக்க வேண்டி வரும்!: தா.பாண்​டி​யன்

t_pandiyan மக்​கள் பணம் வாங்கி கொண்டு வாக்​க​ளிக்​கும் நிலை தொடர்ந்​தால் கம்​யூ​னிஸ்ட் கட்சி ஜன​நா​ய​கம் அல்​லாத பாதை பற்றி சிந்​திக்க வேண்டி வரும் என்று இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்சி மாநில செய​லா​ளர் தா.பாண்​டி​யன் கூறி​னார்.

வந்​த​வாசி தொகுதி அதி​முக வேட்​பா​ளர் பி.முனு​சா​மியை ஆத​ரித்து இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்சி சார்​பில் வந்​த​வாசி கோட்டை மூலை​யில் ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்ற தேர்​தல் பிர​சார கூட்​டத்​தில் அவர் பேசி​யது:​

இந்​திரா காந்தி,​ ராஜீவ் காந்தி,​ எம்​ஜி​ஆர் ஆகி​யோர் இலங்கை தமி​ழர்​க​ளுக்கு உத​வி​னர். அப்​போது திமுக மத்​திய அர​சில் இல்லை. ஆனால் திமுக பங்​கேற்​றுள்ள இப்​போ​தைய மத்​திய அரசு இலங்​கை​யில் தமி​ழர்​களை சுடப்​போ​னது ஏன்?​.

இலங்கை தமி​ழர் பிரச்​னை​யில் நான் உண்​மையை சொன்​ன​தற்​காக எனது காருக்கு தீவைக்​கப்​பட்​டது. திமு​க​வுக்கு தமி​ழர்​களை பற்றி கவலை இல்லை. ஆகவே இலங்கை தமி​ழர்​க​ளுக்கு ஏற்​பட்ட அநி​யா​யத்​துக்கு தீர்ப்​பாக வந்​த​வாசி தொகு​தி​யில் அதி​முக வெற்​றி​பெற வேண்​டும்.

மக்​கள் பணம்​தான் முக்​கி​யம் என்று நினைத்​தால் நாங்​கள் எந்த ஆயு​தத்தை ஏந்த வேண்​டுமோ அந்த ஆயு​தத்தை ஏந்​து​வோம். தமி​ழ​கத்​தில் இப்​போது ஜன​நா​யக படு​கொலை நடக்​கி​றது. மக்​கள் பணத்​துக்கு விலை​போய் விடக்​கூ​டாது என்​றார் அவர்.

மாவட்​டச் செய​லா​ளர் கு.ஜோதி தலைமை வகித்​தார். வந்​த​வாசி தொகுதி தேர்​தல் பணிக்​கு​ழுத் தலை​வர் எம்பி தம்​பி​துரை,​ அதி​முக வேட்​பா​ளர் பி.முனு​சாமி,​ மாவட்​டச் செய​லா​ளர் முக்​கூர் சுப்​பி​ர​ம​ணி​யன்,​ உழ​வர் உழைப்​பா​ளர் கட்சி மாநி​லத் தலை​வர் வேட்​ட​வ​லம் மணி​கண்​டன்,​ இந்​திய கம்​யூ​னிஸ்ட் மாவட்ட பொரு​ளா​ளர் நாரா​ய​ண​சாமி,​ நக​ரச் செய​லா​ளர் சாதிக்​பாட்சா உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.

2 thoughts on “பணத்​துக்கு வாக்​க​ளிக்​கும் நிலை தொடர்ந்​தால் ஜன​நா​ய​கம் அல்​லாத பாதை பற்றி சிந்​திக்க வேண்டி வரும்!: தா.பாண்​டி​யன்”

 1. பாண்டியன் புதிர் போடுகிறாரா?
  “அதென்ன “ஜன​நா​ய​கம் அல்​லாத பாதை” ?
  புரட்சி ஜனநாயகமில்லாததா? போராட்டங்கள் ஜனநாயகமில்லாதனவா?
  இப்போ இருப்பன ஜன​நா​ய​க ஆட்சிகளா?
  அதிமுக வெற்றி எப்படி ஜனநாயகத்தை மீட்டுத் தரும்?

 2. “இந்​திரா காந்தி ராஜீவ் காந்தி எம்​ஜி​ஆர் ஆகி​யோர் இலங்கை தமி​ழர்​க​ளுக்கு உத​வி​னர்.”
  இந்திரா விசயமே சந்தேகம். அதில் ராஜீவ் வேறே!

  “அப்​போது திமுக மத்​திய அர​சில் இல்லை. ஆனால் திமுக பங்​கேற்​றுள்ள இப்​போ​தைய மத்​திய அரசு இலங்​கை​யில் தமி​ழர்​களை சுடப்​போ​னது ஏன்?”
  தோழியர் ஜெயலலிதா இலங்​கை​யில் தமி​ழர்​களை ஆதரித்தவரா?

  சி.பி.எம் சிபிஐ நிலைப்பாடு மாறியது நல்ல விசயம். ஆனால் இன்னமும் இந்திய மேலாதிக்க வேலைத்திட்டம் தான் மனதில் உள்ளது.

  பாண்டியன் யாரை முட்டாளாக்கப் பார்க்கிறார்?

Comments are closed.