படை முகாம்களுக்குள் தடுப்பு முகாம்கள்:அடிப்படை உரிமை மீறல் என்று வழக்கு

அவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களைத் தடுத்துவைப்பதற்கு இராணுவ முகாம்களுக்குள் தடுப்பு முகாம் களை அமைத்துள்ளதன் மூலம் அடிப் படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது எனக் கூறி நேற்றுமுன்தினம் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்தத் தடுப்பு முகாம்களை அமைப்ப தற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அமுல்படுத்தப்படுவதை இடைநிறுத்துமாறு இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை மனித உரிமை செயற்பாட்டாளரான பயாகல அமிதா பிரியந்தி தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.