நோர்வே அனுசரணை : பிலிப்பைன்ஸ் சமாதானப் பேச்சுவார்த்தை

நோர்வேயின் அனுசரணையுடன் பிலிப்பைன்ஸ் அரசு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சமாதானப் பேசுவார்த்தை நடாத்துவதற்குச் சம்மதித்துள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கெரில்லாப் படையைக் கொண்ட பிலிப்பைன்ஸ் புதிய மக்கள் இராணுவம் ஆசியாவின் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட கம்யூனிச இராணுவமாகக் கருதப்படுகிறது.
அரசாங்கத்தால் தேடப்படும் மிக முக்கிய தலைவர்கள் நெதர்லாந்திலேயே வாழ்கிறார்கள். ஆகஸ்ட் நடுப்பகுதியில் ஒஸ்லோவில் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் என லூயிஸ் ஜலன்டோனி என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர் நெதர்லாந்திலிருந்து தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸ் அரச அதிபரின் செயலாளர் ஏர்மிதா இப்பேச்சுக்கள் இன்றைய சூழலில் அவசியமானது எனத் தெரிவித்தார்.