நோக்கியா செல்போன் வெடித்துச் சிதறி ஒருவர் பலி.

பன்னாட்டு நிறுவனமான நோக்கியா செல்போன் நிறுவனம் இந்தியாவில் கடை விரித்துள்ளது. சென்னையில் பிரமாண்ட உற்பத்தி ஆலையை நிறுவியுள்ள நோக்கியாவின் துணை நிறுவனமான பாஸ்கான் ஆலையில் விஷ வாய்வுக் கசிந்து பல நூறு பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ராஜஸ்தான்

 

மாநிலம், கோட்டா மாவட்டத்தில், செல்போன் வெடித்துச் சிதறியதில் மனோஜ் குமார் (24) என்பவர் உயிரிழந்தார். பாந்தா கிராமத்தைச் சேர்ந்த அவர், தனது மாடுகளைத் தேடி வனப் பகுதிக்கு திங்கள்கிழமை சென்றார். செல்போனில் பேசியவாறு அவர் நடந்துச் சென்றபோது, திடீரென செல்போன் வெடித்துச் சிதறியுள்ளது. நிலைகுலைந்து கீழே விழுந்த அவர் அதே இடத்தில் உயிரிழந்தார். இரவில் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், கிராம மக்கள் வனப் பகுதிக்கு தேடிச் சென்றனர். நீண்டநேர தேடுதலுக்குப் பின்னர் அடர்ந்த வனப் பகுதியில் அவரது சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து அப் பகுதி போலீஸôர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் வெடித்துச் சிதறியதாலேயே மனோஜ் குமார் உயிரிழந்துள்ளார் என்பதை போலீஸôரும் உறுதி செய்துள்ளனர். அவரது இடது காது, கழுத்து, தோள் பகுதியில் தீக் காயம் காணப்படுகிறது. சம்பவ இடத்தில் வெடித்துச் சிதறிய நோக்கியா 1209 மாடல் செல்போன் பாகங்களையும் சேகரித்துள்ளோம் என்று போலீஸôர் தெரிவித்தனர். நோக்கியா நிறுவனம் இந்தியாவில் தொழில் தொடங்க சலுகை விலையில் நிலம், தடையற்ற இலவசக் குடிநீர், மிகக்குறைந்த விலையில் தடையற்ற மின்சாரம், மிக மலிவான கூலி அடிமைகள் என இந்திய அரசு தன் சொந்த மக்கள் பற்றிய கவலையற்று செய்து கொடுக்க நோக்கியாவின் தயாரிப்புகளுக்காக மிக மலிவான விலையில் இந்தியச் சந்தையில் கிடைக்கும் கொரியன், சீனா செல்போன்களை தடை செய்திருக்கிறது இந்தியா.