நேற்று மாவோயிஸ்டுகளிடம் பேசத் தயார் – இன்று தோழர் மகாட்டோவைக் கொலை செய்து விட்டார்கள்.

இந்தியாவில் இதுவரை இருந்த பிரதமர்களிலேயே படு மட்டமான அமெரிக்க அடிவருடி மன்மோகனைப் போல் யாருமில்லை. அடிப்படையில் அரசியல்வாதியல்லாத இந்த மனிதர் அதிகாரியாக இருந்து அமெரிக்காவால் அரசியலுக்குள் நுழைக்கப்பட்டவர். மக்கள் விரோத நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் வல்லவர். மக்களை ஈவிரக்கமின்றி வேட்டையாடி போராட்டங்களை நசுக்குவதில் வல்லவர். ஆனால் இவருக்கு அமைதியானவர். பரமசாது, அஹிம்சைவாதி என்றெல்லாம் அடை மொழி உண்டு. இதுதான் மன்மோகன். நேற்று டில்லியில் நடந்த மாநில காவல்துறைத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மன்மோகன். ’’ நக்ஸலைட்கள் வன்முறையை முதலில் கைவிட வேண்டும். நக்ஸலைட்களும் நமது நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அரசு உணர்ந்துள்ளது. அதனால் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண அரசு முயற்சிக்கிறது. அரசு தனது நிலையிலிருந்து இறங்கி வரும்போது, நக்ஸலைட்களும் வன்முறையைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். நக்ஸலைட் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு சிறப்புக் கவனம் செலுத்துகிறது. இவற்றில் பெரும்பாலானவை பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளாகும். வன்முறை பாதித்த பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். எனவே இங்கு தங்கியிருக்கும் காவல்துறையினருக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. ” என்று பேசினார் மன்மோகன் பேசினார் இவரது பேச்சில் மிக முக்கியமாக போலீசாருக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்கிறார். பதவி உயர்வுக்காக வகை தொகையில்லாத என்கவுண்டர்களை நடத்திய பல காவல்துறை அதிகாரிகள் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் போது. அதே பதவி உயர்வைக் காட்டி என்கவுண்டரை ஊக்கப்படுத்தியிருக்கிறார்.

மன்மோகன் விளைவு. பேசி பத்து மணி நேரம் கூட ஆகவில்லை மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கியத் தலைவரும் லால்கர் இயக்கத்த்தை தலைமை தாங்கியவருமான உமகாண்டோ மகோட்டாவைக் (Umakanto Mahato) சுட்டுக் கொன்று விட்டார்கள். போலீஸ் வன்முறைக்கு எதிரான மக்கள் கமிட்டியின் ( PCAPA ) வின் தலைவரான மகோட்டாவை ஜாஹார்கரன் காட்டுப்பகுதியில் வைத்து சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள். ஆனால் ஜார்ஹரன் பகுதி போலீஸ் மா அதிபர் பிரவீன் திருப்பதியோ ஐந்து மணி நேர துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் மகோட்டாவைக் கொன்றதாகவும் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்படுவதற்காக மகோட்டாவின் உடலை வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறது. சென்ற மாதம் சிதம்பரம் விடுத்த சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பான ஆலோசனைக்காகச் சென்ற தோழர் ஆசாத்தை நாக்பூரில் பிடித்து அடிலாபாத் காட்டிற்குக் கொண்டு சென்று சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது. ஆக பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுட்டுக் கொல்வதுதான் அஹிம்சைவாதிகளின் உண்மை முகம் .

11 thoughts on “நேற்று மாவோயிஸ்டுகளிடம் பேசத் தயார் – இன்று தோழர் மகாட்டோவைக் கொலை செய்து விட்டார்கள்.”

 1. தோழர் கோட்டாவுக்கு எமது வீர வணக்கம்.இப்படி மண்டயப் போடுறவனுக்கு எல்லாம் வீர வண்க்கமாகி அது தொல்காப்பியன் அப்பாவில் வந்து நிற்கிறது,தமிழனின் தல விதி இப்படிப் போனதுக்கு யாரையும் குற சொல்லக் கூடாது,மன்மோகந்தான் இந்தியாவை எழுப்புகிறார் அவரே எல்லாமும் ஆக இருக்கிறார்.இந்தியாவை இரட்சிக்கும் கர்த்தர்.

  1. //தோழர் கோட்டாவுக்கு எமது வீர வணக்கம்.இப்படி மண்டயப் போடுறவனுக்கு எல்லாம் வீர வண்க்கமாகி அது தொல்காப்பியன் அப்பாவில் வந்து நிற்கிறது,தமிழனின் தல விதி// என்று வீரவணக்கமும் கண்ணிரஞ்சலியும் செலுத்தியிருக்கிறீஇகளே, ”தமிழ்மாறன்”
   பொருள் ஒன்றும் புரியவில்லையே, நீங்கள் ஒரு புரியாத புதிர் என்பது எனக்கு புரிகிறது,, உஙகளுக்கு ஏதாவது புரிகிறதா,

   1. நான் ஒரு புரியாத புதிர் எனும் பெரிய வார்த்தைகள் வேண்டாம்.உண்மை என்னவென்றால் நினைத்ததை எழுதும்போது எண்ணம் வேகமாகி எழுத்து சிந்தனையைத் தாங்காது விட்டு விடுகிறது.எனது எண்ணம் வீரவணக்கம் என்பது மேலான வார்த்தை.புலிகள் பாலசிங்கத்தை தேசத்தின் குரல் என்றார்கள் இன்றூ தேசத்தில் யாராவது குரல் எழுப்ப முடிகிறது.நாம் உச்சரிக்கும் வார்ததைகளூக்கு சக்தி இருக்கிறது அவை வெறூம் வார்த்தைகள் மட்டும் அல்ல.

    1. இன்றூ தேசத்தில் யாராவது குரல் எழுப்ப முடிகறதா?

   2. முடிகிறது.
    நமது ஊடகங்கள் ஒத்துழைப்பது மிகவும் போதாது.

 2. இந்தியர்கள் என்ற ஒற்றுமை மக்களிடம் இருந்தால்த்தானே இந்தியா வாழமுடியும்,அத்துடன் இந்தியா ஒரு தேசிய இனத்தைக்கொண்ட நாடுமல்ல, இந்தியா என்பது 24 மானிலங்களையும் 02 யூனியன் பிரதேசங்களைக்கொண்ட துணைக்கண்டம்,அங்கு 45 க்குமேற்பட்ட மொழிகள் புழக்கத்திலுள்ளன,ஹிந்தியைத்தவிர வேறு எந்த மொழிக்கும் மதிப்பளிக்கும் பழக்ககும் வட இந்தியர்களிடமில்லை,ஸ்திரமான அரசியலும் அங்கு கிடையாது,ஒவ்வொரு மானிலத்தை ஒவ்வொரு குடும்பங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர்,
  1, டில்லி,நேருகுடும்பம்
  2,தமிழ்நாடு கருணா குடும்பம்,
  3,நவீன் பட்நாயக் குடும்பம்,
  4,உத்தரப்பிரதேசம்,மாயாவதி,
  5,பீகார் லல்லு பாப்ரி குடும்பம்,
  6,ஜார்க்கண்ட் சிபுசோரன்
  7,நரேந்திரமோடி, இப்படி பிரிக்கப்பட்டு மேய்ந்து முடித்து படுமோசமான வறுமையும் ,மக்கள் காட்டுவாசிகள்போல் ஆக்கப்பட்டு அழிவின் விழிம்பில் இந்தியத்துணைக்கண்டம் தள்ளாடுகிறது,ஆப்பிரிக்காவில் உள்ள 26 மிக வறிய நாடுகளில் வசிக்கும் வறியவர்களின் எண்ணிக்கையை விட எட்டு வட இந்திய மாநிலங்களில் இருக்கும் வறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக புதிய ஆய்வு கூறயுள்ளது.

  பிகார், சத்தீஸ்கர், ஜார்காண்ட், மத்தியபிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் தமிழ்நாடு ஆகிய இந்திய மாநிலங்களில் 42 கோடியே பத்து லட்சம் பேர் வறிய நிலையில் இருப்பதாக ஐ நாவின் ஆதரவுடன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு முயற்சியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

  வருமானத்தை மட்டுமல்லாது, கல்வி சுகாதார வசதிகள் போன்றவை எந்த அளவுக்கு கிடைக்கின்றன என்பது போன்ற விடயங்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  பரந்து பட்ட வறுமைக் குறியீடு என்பதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு வறியவர்களின் நிலையை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டியுள்ளதாக இந்த ஆய்வின் இயக்குனர் டாக்டர் சபினா அல்கிரி கூறியுள்ளார். வறுமை பெருமளவில் இருக்கிறது என்று பலரும் கருதிவந்ததை இந்த ஆய்வு உறுதிசெய்துள்ளது.

  இவர்களின் புதிய அட்டவணையின் படி உலகில் மொத்தம் 170 கோடி பேர் வறியவர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிபேர் தெற்காசியாவில்தான் வாழ்கின்றனர். ஆப்ரிக்காவில் கால்வாசிபேர் வாழ்கின்றனர்.கணிசமான மக்கள் வெளிநாடுகளில் கீழ்மட்டத்திழிலாழிகளாக தொழில்புரிவதால் ஓரளவு மக்கள் வாழமுடிந்தாலும் ,இன்னும் 50 ஆண்டுகளில் இந்தியா உடைந்து பல துண்டுகளாவதற்கான ஆயத்தங்களை அரசியல் வாதிகளே உண்டுபண்ணிக்கொண்டிருக்கின்றனர் முதலாவது வெடிப்பி தமிழ்நாட்டில் ஆரம்பமாகலாம்

 3. காஸ்மீர் எல்லையில் சீன இராணுவம் நிற்க்கின்றதாக் செய்தி , வெகு விரைவில் வட இந்தியன் மீது தாக்குதல் ஒன்று நடத்தி பூன்டோடு அழித்தால் , முதல் சந்தோசப்படுவது ஈழத்தமிழர்கள் தான்.

  1. அந்த மகிழ்ச்சியை அவர்களுக்கு வழங்கும் அளவுக்குச் சீன அரசு முட்டாள்த்தனமாக எதுவும் செய்யாது.
   அமெரிக்கத் தூண்டுதலில் இந்தியா எதையும் செய்தாலொழிய மோதலுக்கு வாய்ப்பு மிகக் குறைவு.

 4. 1962 இல் சீனாவிடம் வாங்கிய அடி இந்தியாவுக்கு மறந்தா போகும்.?

  1. 1962ஆம். ஆண்டுப் போர் ஏற்பட முக்கியமான காரணம் நேரு தலைமையின் அலட்சியமான அணுகுமுறை. திபெத் விடயத்தி இந்தியா அமெரிக்க சி.ஐ.ஏ.நடவடிக்கைகட்கு உடன்பாடாக நடந்தது என்றதும் தலாய் லாமாவுக்கு திபெத் மாகாண எல்லைக்கு நெருக்கமாக முகாம் அமைத்துக்கொடுத்ததும் உறவுகளைப் பாதித்தன. இவை பற்றி Frontlineஇல் AG Noorani எழுதிய கட்டுரைகள் பயனுள்ளவை.

   இப்போது நிலைமை வேறு.
   இரண்டு நாடுகளுமே மோதலை விரும்பவில்லை. ஏனினும் இந்தியாவினுள் சில விஷமிகள் செயற்படுகின்றனர். அவர்கட்குப் பின்னால் அமெரிக்கத் தூண்டுதல் உண்டு என்று நம்ப இடமுண்டு.

 5. சீன-இந்திய பொருளாதார வளர்ச்சியில் மிரண்டு போயிருக்கும் மேற்கத்தைய தேசங்கள், எந்த வழியிலேனும் இந்த இரு நாடுகளையும் தங்கள் காலடியில் கொண்டு வர முயற்சிக்கிறார்கள்.அத்தகைய நடவடிக்கைகளுக்கு உதவியாக,தூக்கிப் பிடிக்கிற அகமுரண்பாடுகளுக்கு பின்பலமும்,சர்வதேச பிரச்சாரப்படுத்தலும் மிகைப்படுத்தப்படும்.
  உண்மையான,நேர்மையான,அறிவுமயப்படுத்தப்பட்ட போராட்டங்கள் எளிதில் வெல்லக்கூடியதாக அமையும்.இல்லையெனின் ஈழப் போராட்டம் போன்று,அப்பாவி மக்களை பறிகொடுத்து,பல தமிழ் முதலாளிகளை உருவாக்கும் பாக்கியம் கிடைக்கும்.

Comments are closed.