நேர்வழி : இலங்கை அரசிற்கு எதிராகப் புதிய சிங்களப் போராட்ட அமைப்பு

ராஜபக்ச அரசு சொந்த நாட்டு மக்களைப் படுகொலை செய்து சிங்கள மக்களை மிருக சிந்தனைக்குள் மாற்றி வருகிறது. சரத் பொன்சேகா இந்தச் சிந்தனைகளை நிறைவேற்றிய இன்னுமொரு பாசிஸ்ட். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் கட்சிகள் எல்லாமே ஒன்றிணைந்து இலங்கை மக்களைக் வேட்டையாடி வருகின்றனர். இந்த நிலையில் விரக்தியடைந்துள்ள இலங்கை மக்களை ஒன்றிணைத்து இலங்கை அரச இயந்திரத்திற்கு எதிரான போராட்டம் ஒன்றை மார்க்சிய, மாவோயிச சிந்தனைகள் அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும். தமிழ் பேசும் சிறுபான்மை இனங்களின் தேசிய சுய நிர்ணய உரிமையைப் பிரிந்து போகும் உரிமையுடன் இணைத்து அங்கீகரிக்க வேண்டும். தேவையானால் இலங்கைப் பாசிச அரசிற்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். கிழக்கில் உருவானதாகக் கூறப்படும் இயக்கதில் எமக்குச் சந்தேகம் உள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் நாம் வேலை செய்ய ஆரம்பித்துள்ளோம். எதிர் வரும் காலங்களில் தமிழ் மார்க்சிய இயக்கங்களுடன் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்வோம்.
இந்திய மாவோயிஸ்டுக்கள் தொடர்பாக எமக்கு விமர்சனங்கள் இருந்தாலும் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சிக்கிறோம். கடந்த நான்கு மாதங்களாக பாசிசக் கட்டமைப்புக்கு மத்தியில் நாம் வேலை செய்ய ஆரம்ப்பித்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து எந்த உறுப்பினர்களும் எமக்கு இல்லை. ஜே.வி.பி ஆல் சீரழிக்கப்பட்ட போராட்டத்தால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். ஜேவிபி இனவாதக் கட்சியாக மாற்றம் அடைந்ததைத் தொடர்ந்து மக்கள் அவர்கள் மீது வெறுப்படைந்து போயுள்ளனர். இப்போது புதிய சக்திகளை இணைத்துக் கொண்டு எமது போராட்டம் முன்னேறும். இவ்வாறு “நேர்வழி” என்ற சிங்கள மார்க்சிய அமைப்பு இனியொருவிற்குத் தெரிவித்தனர். ஊவா மற்றும் வலப்பனைப் பகுதிகளில் சிங்கள மக்கள் மத்தியில் புதிய வேலைத் திட்டங்களை மேற்கொள்வதாக மேலும் தெரிவிக்கும் இவர்கள் புலம் பெயர் தமிழர்களின் ஆதரவுடன் தமிழ் பேசும் மக்களின் புதிய போராட்டம் உருவாகும் என்றும் அவ்வேளையில் அவர்களுடன் தாம் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்து இணைந்து marxistவேலைகளை மேற்கொள்வோம் என்றும், தமிழர்கள் மத்தியில் அவர்கள் மட்டுமே புரட்சி வேலைகளை முன்னெடுக்க முடியும் என்றும் தாம் அதற்கு ஆதரவு மட்டுமே வழங்க முடியும் என்று நேர்வழியின் உறுப்பினரான தோழர் ரங்க என்பவர் இனியொருவிற்குத் தெரிவித்த்தார்.

2 thoughts on “நேர்வழி : இலங்கை அரசிற்கு எதிராகப் புதிய சிங்களப் போராட்ட அமைப்பு”

  1. இவ்வமைப்புக்களின் உருவாக்கத்திற்கு – வளர்ச்சிக்கு ஆக்க ஊக்கம் கொடுக்கவேண்டும. தமிழ்மக்கள் இன்று போராடும் சக்தியை இழந்துள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் இவ்வமைப்புக்களின் வளர்சியின் ஊடே தமிழ்மக்களின் சுய நிர்னய உரிமைப்போரை தொடர முடியும்.

  2. அரசியலில் மா/லெ/மா சிந்தனையில் அறிவில் பின்தங்கிய நிலையில் தான் உள்ளார்கள். புதிய பார்வையாளர்களுக்கு அல்லது போராட்டத்தை புதிய யுக்தியில் கையாள நினைப்பவர்களுக்கு மா/லெ/மா கல்வித்திட்டம் மிகவும் முக்கியமானது என்பதை உணர்கிற நாம் அதனை ஆழ்ந்து கற்பதற்கும் அதனை இலகுவான முறையில் கற்றுணர்வதற்கும் ஏற்பாடுகளை இணையம் மூலமாக ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    -புதிய ரத்தம்

Comments are closed.