நேர்மையான அதிகாரி உமாசங்கர் ஐ.ஏ.எஸ். சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கருணாநிதியின் குடும்ப சர்வாதிகார ஆட்சியில் சிக்கி தமிழக மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களை மீறி எவரும் தமிழகத்தில் தொழில் செய்யவோ சுதந்திரமான கருத்துச் சொல்லவோ எழுதவோ முடியாத நிலையில் உமசாங்கர் என்னும் நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியை கருணாநிதியின் குடும்பத்தினர் தொடர்ந்து பழிவாங்கிக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஜெயலலிதா ஆட்சியில் சுடுகாட்டு ஊழலை வெளியில் கொண்டு வந்தவர் இந்த உமாசங்கர். ஆனால் கடந்த ஜெயலலிதா ஆட்சியில் சுடுகாட்டு ஊழலைச் செய்த செல்வகணபதி என்னும் ஊழல் பெருச்சாளி இப்போது கருணாநிதியின் கட்சியில் இணைந்து விட்டது. இந்நிலையில் கருணாநிதி குடும்பத்தில் ஏற்பட்ட பிளவில் அரசு கேபிள் தொலைக்காட்சியை தொடங்க கருணாநிதி உத்தரவிட்டு அதற்கு பொறுப்பாக உமாசங்கர் நியமிக்கபப்ட்டார். இப்போது சண்டையிட்ட கருணாவின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து விட நேர்மையான அதிகாரியான உமாசங்கரோ கருணாந்தி குடும்பத்தினரால் பழிவாங்கப்படுகிறார். தான் பழிவாங்கப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்த நிலையில் நேற்று திடீரென அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு ஒன்றை பிரபித்துள்ளார் கருணாநிதி. இது பற்றிய விரிவான கட்டுரை

கருணாநிதி குடும்பத்தால் பழிவாங்கப்படும் நேர்மையான அதிகாரிஆகாஷ்.

http://inioru.com/?p=13989

4 thoughts on “நேர்மையான அதிகாரி உமாசங்கர் ஐ.ஏ.எஸ். சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.”

  1. நேரெமை எனற வட்டத்துள் சிக்கிக் கொண்டு விட்டால் பின்னர் எவருக்காகவேனும் அதை விட்டுக் கொடுக்க கூடாது நேர்மை வட்டம் நம் வாழ்க்கை தோறூம் வர வேண்டும் இல்லை என்றால் எதோ ஒரு கட்டதில் பலியாடு ஆவது தவிர்க்க முடியாது.

  2. இது போன்ற நேர்மையான அதிகாரிகளை இப்படி பந்தாடுவதாலேயே பலரின் நேர்மை கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.

  3. சம்பந்தனும் கருணாநிதியும் மாதிரி “நேரெமை எனற வட்டத்துள் சிக்கிக்” கொள்ளாமல் இருக்கத் தெரிய வேண்டும். என்ன சொல்லுகிறீர்கள் TM?

  4. நேர்மையே உன் விலை என்று கேட்கும் கருணாநிதியிடம் இவர் ஏன் நேர்மையாய் வேலை பார்க்க நினைத்தார்.இறையன்பு மாதிரி கனிமோழி வகையறாக்களுக்கு முதுகு சோறியும் சொறியம்பு மாதிரி இவரும் உமா சங்கராக இல்லாமல் சும்மா வெறும் சங்கராக இருந்துவுட்டு போக வேண்டியதுதானே.?

Comments are closed.