நேபாள பிரதமர் மாதவ்குமார் ராஜினாமா

நேபாளத்தில் கடந்த 13 மாதங்களாக மாதவ்குமார் நேபாள், பிரதமர் பதவியில் இருந்து வருகிறார். நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட மாவோயிஸ்டுகள், தங்கள் தலைமையில் அனைத்துக்கட்சி தேசிய அரசு அமைப்பதற்காக, அவரை பதவி விலகும்படி வற்புறுத்தி வந்தனர்.

மாவோயிஸ்டுகளின் தலைமையை ஏற்க பிற கட்சிகள் விதித்த நிபந்தனையை மாவோயிஸ்டுகள் ஏற்கவில்லை.பல பகுதிகளில் மக்கள் போராட்ட அழுத்தங்கள் மாதவ் குமார் அரசிற்குப் பிரயோகிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், பிரதமர் மாதவ்குமார் நேபாள் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

One thought on “நேபாள பிரதமர் மாதவ்குமார் ராஜினாமா”

  1. இரண்டு தரம் மக்களால் நிரகரிக்கப் பட்ட நேபாளைப் பிரதமராக்கியது டில்லி.
    இந்தப் பதவி விலகல் ஒரு மாதம் முன்புநடந்திருக்க வேன்டியது. விலகுவதாக உடன்பட்டு விலக மறுத்த நேபாளை விலகாமல் மறித்ததும் டில்லி.
    மக்கள் எழுச்சி நேபாளைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது .இல்லாவிட்டால் இன்னமும் இந்தியாவின் கையாளகத் தொடர்ந்திருப்பார்.
    இப்போது இந்திய மேலாதிக்கத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது.

Comments are closed.