நேபாளத்தைச் சீர்குலைக்க முனையும் இந்தியத் தலையீடு

மக்கள் ஆதரவுடன் தெரிவாகியுள்ள மாவோயிஸ்டுக்கள் கால வரையறையற்ற வேலை நிறுத்தம் ஒன்றை அறிவித்துள்ளனர்.
இதனைச் சமாளிக்க தற்போதைய  அரசாங்கத்திற்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது.
தற்போதைய நேப்பாளியப் பிரதமர் மாதவ குமார் தலைமையத்துவத்தின் மீது புதுடில்லிக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவரிடம் தெரிவித்துள்ளார்.
பூட்டான், திம்புவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சார்க் மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கிடையில் இந்தியப் பிரதமர் இந்த ஆதரவை நேப்பாளப் பிரதமரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பிரசன்டா பிரதான வேட்பாளாரக நிறுத்தப்படக் கூடாது என இந்தியா வற்புறுத்துவதாகத் தெரியவருகிறது.