நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் முன்னாள் சிறார் போராளிகளுக்கு மறுவாழ்வுப் பணிகள் துவக்கம்!

நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் அமைப்பின் சார்பில் போராடிய ஆயிரக்கணக்கான முன்னாள் சிறார்போராளிகளை படையணிகளிலிருந்து கலைக்கும் நடவடிக்கையை நேபாள அரசாங்கம் துவங்கியிருக்கிறது.

நேபாளத்தின் மத்திய பகுதியில் இன்று வியாழக்கிழமை நடந்த ஒரு வைபவத்தில் இருநூறு இளம் போராளிகள் இன்று படையணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படும் அல்லது பள்ளிகளில் படிப்பதற்கான வாய்ப்புகள் அளிக்கப்படும்.

2006 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட சமாதான ஒப்பந்தப்படி, பத்தொன்பதாயிரம் முன்னாள் மாவோயிய போராளிகளில் ஒரு தொகுதியினர் நேபாள ராணுவத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும்.

ஆனால் இது எப்படி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் உருவான கருத்து மோதல்கள் காரணமாக நேபாள அரசியலில் மோதல்களும் தேக்கநிலையும் உருவாகியுள்ளது.

BBC.

One thought on “நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் முன்னாள் சிறார் போராளிகளுக்கு மறுவாழ்வுப் பணிகள் துவக்கம்!”

  1. இவ்வாறான தகவல்களின் தோற்றுவாயையும் கூறுவது நல்லது.

Comments are closed.