நெடுமாறன் கோஷ்டியினரின் உள்நோக்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது:கருணாநிதி

karuuஈழத் தமிழர்கள் பிரச்சினையில் முதலமைச்சர் கருணாநிதியின் செயல்பாடுகள் குறித்து அயல் நாடு வாழ் தமிழர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகப் பழ. நெடுமாறனின் பேசியிருப்பது பற்றிக் கண்டனம் தெரிவித்த கருணாநிதி, அவரது அறிக்கையில் உண்மைக்கு மாறான தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.

“அந்தச் செய்தித் தொகுப்பிலிருந்து நெடுமாறன் கோஷ்டியினரின் உள்நோக்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

ஏதோ எனக்கு ஒரு முடிவு கட்ட திட்டமிட்டு அந்தப் பழியை உலகத் தமிழர்கள் யார் மீதாவது போட்டுவிட்டு தாங்கள் தப்பித்துக் கொள்ள, அந்தக் கோஷ்டியினர் திட்டமிட்டு முன்கூட்டியே செய்யும் – தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சாமர்த்தியமான பிரச்சாரம் இது என்றே நான் திட்டவட்டமாகக் கருத வேண்டியிருக்கின்றது.

பழ.நெடுமாறன் போன்றவர்களுக்கெல்லாம் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் தான் பிடிக்கும். ஜெயலலிதாவைப் போல அவரைப் பிடித்து ‘குண்டர்கள்’ சட்டத்திலோ, ‘பொடா’ சட்டத்திலோ மாதக்கணக்கில் சிறையில் போட்டால், அதுதான் சிறந்த நடவடிக்கை என்பார்கள். எது எப்படியிருப்பினும் ‘வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்