நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்த கருணாநிதி.

மக்கள விரோத ஜெயலலிதா ஆட்சியில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால் அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த கருணாநிதி அதை தன் வாக்கு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டார். இந்நிலையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட சில நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுக்க போராடி வருகிறார்கள். சத்துணவு ஊழியர்கள் மிகவும் ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்த சத்துணவுப் பணியாளர்களின் போராட்டத்தை கொடூரமாக போலீசை ஏவி ஒடுக்கிய கருணாநிதி தமிழகமெங்கிலும் பல நூறு சத்துணவுப் பணியாளர்களை வேலை நீக்கம் செய்துள்ளார். சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தால் ஆத்திரத் தின் உச்சிக்கு சென்றுள்ள தமிழக அரசு, நோட்டீஸ் கொடுக்காமல் போராட்டம் நடத்தியதாக கூறி சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், ஊழியர்களை நிரந்தர பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக மாநில சமூக நலத்துறை இயக்குநர் வாசுகி, சத்துணவு ஊழியர்கள் தங்களது போராட்டத் திற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதிபெறவில்லை என்றும், முன்னதாக நோட்டீஸ் கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதற்காக, போராட்டத்தை முன்னின்று நடத்திய சங்க நிர்வாகிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களை பணியிலிருந்து நீக்கம் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என் றும், இந்த நடவடிக்கையை அந்தந்த மாவட்ட ஆட்சியர் கள் எடுத்துள்ளனர் என்றும் நடவடிக்கை எடுக்கப்பட்ட வர்களுக்கு அதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

One thought on “நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்த கருணாநிதி.”

Comments are closed.