நீதிமன்றத்திற்குப் பூட்டு தேடித் தேடி கைது- கருணாநிதியின் அடக்குமுறை

தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி போராடிய இரவோடு இரவாக கைது செய்து சிறைக்கு அனுப்பிய கருணாநிதி. இரவே நீதிபதிகளின் உதவியோடு ஏராளமான போலீசைக் கொண்டு நீதிமன்றத்தை கைப்பற்றி விட்டார். இன்று காலை முதல் சென்னை உயர்நீதிமன்றத்தின் எல்லா வாயிகளும் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது, மேலும் வழக்கறிஞர்கள் எங்காவது இரண்டு மூன்று பேர் கூடி நின்றாலே உடனடியாக கைது செய்து சிறையிலடைக்கிறார்கள். தமிழகம் முழுக்க இன்று காலையில் தொடங்கி வழக்கறிஞர்களை வேட்டையாடி வருகிறது. கருணாநிதி அரசு. செம்மொழி மாநாட்டிர்கு ஏற்பட்டுள்ள அவமானத்தை தாங்க முடியாத கருணாநிதி எதிர்பார்த்தது போலவே போலீஸை ஏவுகிறார்.