நீதிபதி பி.டி.தினகரனை உச்ச நீதிமன்றத்தில் அமர்த்துவதற்கான பரிந்துரையை இந்திய சட்ட அமைச்சகம் நிராகரிப்பு!

dinakaranpdjusticeஅமர்த்துவதற்கான பரிந்துரையை இந்திய அரசு நிராகரித்துள்ளது.
கர்நாடக மாநில தலைமை நீதிபதியாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவரான நீதிபதி பி.டி.தினகரனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கான பரிந்துரையை இந்திய சட்ட அமைச்சகம் நிராகரித்துள்ளது.

சட்டத்துக்கு புறம்பாக அரசு நிலங்களை ஆக்கிரமித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நீதிபதி பி.டி.தினகரன் மீது சுமத்தப்படும் நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு அவருக்கு வழங்கியிருந்த பரிந்துரையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இந்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.

நீதிபதி தினகரனுக்கு எதிராக வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.

அவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்திருந்தார் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரும் அறிக்கை அளித்திருந்தார்.
BBC