யுத்த நிறுத்தத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது : கோத்தபாய

தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை “ஜெஸ்மின் நியூஸ்” செய்திச்சேவை வெளியிட்டுள்ளது.
 “சார்க்” மாநாட்டை முன்னிட்டு எதிர்வரும் 26 ஆம் திகதிமுதல் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று இரவு பிரகடனப்படுத்தியுள்ளனர்.எனினும் இது தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் சந்திக்கின்ற தோல்வியை மறைக்க மேற்கொள்கின்ற முயற்சி எனக் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்