நிறவெறி பொலிஸ் படையால் கொலைசெய்யப்பட்ட மைக்கல் பிரவுணின் இறுதிச்சடங்கு இன்று

michaelbrownஅமெரிக்காவில் பேர்குசன் நகரில் வெள்ளியின போலிசால் நடுத்தெருவில் ஆறு துப்பாக்கிக் குண்டுகளால் கொன்றுபோடப்பட்ட கறுப்பினச் சிறுவன் மைக்கல் பிரவுணின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது. அதே வேளை அமெரிக்காவின் மேற்தட்டு வெள்ளை நிறவெறியர்கள் மற்றொரு ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர். நீலத் தொப்பி ஆர்ப்பாட்டம் நிறவெறி போலிசிற்கு ஆதரவாக நடைபெறுகிறது. அதே வேளை பிரேசிலில் பேர்குசன் கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவான போராட்டம் நடைபெற்றது.
நேற்றைய தினம் அமெரிக்காவின் நியூ பிளேட்சில் ஆயிரக்கணக்கான மக்கள் பேர்குசன் மக்களுக்கு ஆதரவான போராட்டம் ஒன்றை நடத்தினர். 16 புலம்பெயர் குழுக்கள் பிரவுணின் கொலைக்கு எதிராக அறிக்கை விடுத்துள்ளனர்.
பேர்குசன் மக்கள் தொடர்ந்து அமைதிவழியில் போராடுகின்றனர்.

One thought on “நிறவெறி பொலிஸ் படையால் கொலைசெய்யப்பட்ட மைக்கல் பிரவுணின் இறுதிச்சடங்கு இன்று”

Comments are closed.