நிருபமா 30-ஆம் தேதி இலங்கை பயணம்.

இந்தியாவின் நாடகங்கள் இலங்கை விஷயத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்திய பெரு முதலாளிகள் நலனையே சுரண்டல் நலனாகக் கொண்டு இலங்கை தனது காலனியாக மாற்ற நினைக்கும் இந்தியாவுக்கு தீவில் ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்கள் குறித்த அக்கறை எல்லாம் கிடையாது. ஆனால் உலகம் முழுக்கவும், தமிழகத்திலும் இந்திய அரசு தொடர்பாக எழுதுள்ள கசப்பையும் விமர்சனங்களையும் சமாளிக்க மேலும் மேலும் நாடகங்களை அரங்கேற்றி வருகிறது இந்தியா. இந்நிலையில் வருகிற 30ம் தேதி நிரூபமா கொழும்பு செல்கிறார். அங்கு நான்கு நாட்கள் தங்கி யாழ்ப்பாணம், வவுனியா, திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மறுகுடியேற்ற வேலைகள், விரிவாக்கப் பணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளதாக தெரிகிறது.இதேபோல, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வரும் செப்டம்பர் மாதம் இலங்கை செல்ல உள்ளார். இதுதொடர்பான முன்னேற்பாடுகள் குறித்தும் நிரூபமா ராவ் ஆய்வு நடத்துவார் என தெரிகிறது.சமீபத்தில் ராஜபக்சேவின் தம்பியும், அமைச்சருமான பசில் ராஜபக்சே டெல்லி வந்து இந்தியத் தலைவர்களை சந்தித்துப் பேசினார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் நிரூபமா கொழும்பு செல்லவுள்ளார்.இதற்கிடையே, கொழும்பு வரும் நிரூபமாவை சந்திப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் எம்.பி. அரியநேத்திரன் கூறுகையில்,இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், அவர்களுக்கான வீடு கட்டும் திட்டங்கள், விமான மற்றும் துறைமுக விரிவாக்கம் ஆகியவற்றில் இந்தியாவின் பங்கீட்டினை ஆராய்வதற்காக நிரூபமா ராவ் இலங்கை வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவர் இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில் அவரது நிகழ்ச்சிகள் பற்றி எனக்கு தெரியாது. இருப்பினும் மீள் குடியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை நிரூபமா ராவ் பார்வையிடுவது என்பது, தமிழ் மக்களுடன் தொடர்புடையது. இதனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்களின் பிரச்சனைகளை எடுத்துரைப்பதற்காக அவரை சந்திக்க வேண்டியுள்ளது.தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் உள்ளிட்ட எம்.பி.க்கள் சிலர் நாட்டில் இல்லை. 30ஆம் தேதி வரும் நிரூபமா ராவ், மீண்டும் இந்தியா திரும்ப மூன்று நாட்கள் ஆகும் என்பதாலும், தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கும் வாய்ப்பு உள்ளது என்றார். நிருபமாவின் இந்தப் பயணம் வர்த்தக நோக்கிலானது மட்டுமானதும் யாழ்பாணத்தில் இந்தியத் தூதரகம் தொடர்பானதுமே தவிற அரசியல் நோக்கியாலனது அல்ல என்கிறார்கள் டில்லி ஊடகவியலாளர்கள்.