நாம் செல்லும் திசை தவறானது – புலிகளுள் துளிர்விடும் அதிர்ப்தி – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம் 17) : ஐயர்

கும்பகோணத்தைச் சேர்ந்த மேகநாதன் என்ற திராவிடர் கழக உறுப்பினர் எம்மோடு முழு நேர உறுப்பினராக வேலை செய்கிறார். ஐயர் ஒருவர் இயக்கத்தில் ,அதிலும் மத்திய குழுவில் பணியாற்றுவதாக கேள்விப்பட்டதும், ஐயரையெல்லாம் ஏன் சேர்த்துக்கொண்டீர்கள் எனக் கடிந்து கொண்டிருக்கிறார். பின்னதாக அவர் என்னைச் சந்தித்ததும் தனது அபிப்பிராயத்தை முழுமையாக மாற்றிக்கொண்டதாக என்னிடமே சொன்னார்.

மேகநாதன் உமாமகேஸ்வரனைக் கொலைசெய்ய நாம் தேடியலைந்ததைக் கண்டு மிரண்டுபோனார். அவரும் இதையெல்லாம் விட்டுவிடுங்கள் என்று தனது கருத்தை முன்வைக்கிறார். எமக்குச் சில ஆலோசனைகளும் வழங்குகிறார். என்னிடம் கூடத் தனிப்படப் பேசிப்பார்த்தார். எம்மைப் பொறுத்தவரை நமது வழிமுறை சரியானது என்ற இறுமாப்பில் தான் இருந்தோம்.

பின்னதாகப் சில உறுப்பினர்கள் இதெல்லாம் கலாபதியின் வேலையென்றும் அவர்தான் பிரபாகரனுக்குத் தலைமை ஆசையைத் தூண்டிவிட்டவர் என்றும் உமமகேஸ்வரனின் புறக்கணிக்கத் தக்க பாலியல் பிரச்சனையை முதன்மைப்படுத்தியவர் என்றும் கருத ஆரம்பித்தனர். இது குறித்துப் பலர் என்னிடம் பின்னாளில் அபிப்பிராயம் தெரிவித்தனர்.

கலாபதி குறித்த இந்த அபிப்பிராயம் பின்நாளில் நிகழந்த பல சம்பவங்களிலும் வெளிப்பட்டதாகக் கூறியவர்களும் உண்டு.

இப்போது உமாமகேஸ்வரனோடு எமக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவரைத் தவிர அவருக்காக அன்று இயக்கத்திலிருந்து யாரும் பிரிந்து செல்லவில்லை. இந்தியாவிலேயே எமது கண்களுக்குப் படாமல் தலைமறைவாகிவிடுகிறார். ஊர்மிளாவோடு நாங்கள் எந்தத் தொடர்புகளையும் பேணிக்கொள்ள விரும்பவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் உமாமகேஸ்வரனுக்கும் இடையான தொடர்பு பின்பு ஒரு போதும் ஏற்பட்டதில்லை. ஊர்மிளா சில காலங்களின் பின்னர் நோய்வாய்ப்பட்டு இறந்ததாகக் கூறப்பட்டாலும் வேறுபட்ட கருத்துக்களும் நிலவுகின்றன.

இப்போது ஒவ்வொருவருக்கும் அதிகப்படியான பொறுப்புக்கள் வழங்கப்பட்டு இலங்கைக்கு அனுப்புவதாகத் தீர்மானிக்கப்படுகிறது. இலங்கையில் மத்திய குழுவில் பொறுப்பனாவர்கள் யாரும் இல்லை என்பதாலும் எமது இயக்க நடவடிக்கைகளைக் கவனிக்க வேண்டும் என்பதாலும் நான் முதலில் இலங்கை செல்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது.

உமாமகேஸ்வரனுக்கு தண்டையார்பேட்டை வீட்டு அறியப்பட்டது என்பதால் ஏதாவது பிரச்சனை உருவாகலாம் என எண்ணினோம். இதனால் அந்த வீட்டைக் கைவிட்டு திருவான்மியூரில் ஒரு வீட்டை ஒழுங்குபடுத்தி வாடகைக்கு அமர்த்திக்கொள்கிறோம். பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதீத கவனம் செலுத்தும் பிரபாகரன் உமாமகேஸ்வரனைக் கூடப் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதியமை வியப்புக்குரியதல்ல.

அந்த வீட்டில் நான் இரண்டு நாட்களே தங்கியிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதன் பின்னர் நான் குமரப்பா, சுந்தரம் ஆகியோர் எமது விசைப்படகில் இலங்கை நோக்கிப் பயணமாகிறோம். நான் அங்கு இல்லாத வேளையில் இயக்கத்தின் மீதும் பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்கின் மீதும் வெறுப்பும் விரக்தியும் அதிகரித்த நிலையில் அனைத்துப் போராளிகளும் காணப்படுகின்றனர். பண்ணைகளுக்கு நான் சென்ற போது என்னிடம் இது குறித்து பரவலாகப் பேசப்படுகிறது.

மைக்கல் பற்குணம் போன்றோரின் கொலை தொடர்பாக பிரபாகரன் குமணனிடம் கூறியிருந்தார். குமணன் ஊடாக அந்தச் செய்தி அனைத்துப் பண்ணைகளுக்கும் பரவிவிடுகிறது. இது பின்னதாக மனோ மாஸ்டர், அழகன் போன்றோர் இயக்கத்தின் ஜனநாயகத் தன்மை குறித்தும் அதன் வழிமுறை குறித்தும் போர்க்குரல் எழுப்புகின்றனர். சுந்தரமும் இவர்களோடு இணைந்து கொள்கிறார்.

பயிற்சி முகாம் ஒழுங்கமைக்கப்பட்ட முறை, அதனுள் பிரபாகரனின் தன்னிச்சையான சர்வாதிகாரப் போக்கு, பற்குணம், மைக்கல் கொலைச் சம்பவங்கள்,உமாமகேஸ்வரன் குறித்த பிரச்சனைகள் என்று அனைத்தும் ஒருங்கு சேர பிரபாகரனுக்கு எதிரான போக்கு ஒன்று இயக்கத்தின் அனைத்து மட்டத்திலும் உருவாகி வளர்கிறது.

நான் அங்கு சென்ற முதல் நாளே மனோ மாஸ்டருடன் இன்னும் சிலர் என்னிடம் தமது அதிர்ப்தியை வெளிப்படுத்துகின்றனர். இதற்கெதிரான உட்கட்சிப் போராட்டத்தில் என்னையும் இணைந்துகொள்ளுமாறு கோருகின்றனர். 79 இன் மத்திய பகுதி இவ்வாறு இயக்கத்தில் கொந்தளிப்பு ஏற்பட்ட காலகட்டமாகும். அவ்வேளையில் இவை குறித்து நான் சிந்திக்க ஆரம்பிக்கிறேன்.

எது எவ்வாறாயினும் பதினேழு வயதில் அனைத்தையும் துறந்து தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட பிரபாகரனுக்கு இவைபற்றி இதுவரை யாரும் கூறியதில்லை. பிரபாகரனுடன் தவறுகள் குறித்துப் பேசினால் தனது வழிமுறையை மாற்றிக்கொள்ள வாய்ப்புண்டு என்பதே எனது தனிப்பட்ட கருத்தாக ஆரம்பத்தில் அமைந்தது.

திருகோண்மலையிலுள்ள தொடர்புகளைக் கையாளும் பொறுப்பு குமணனிடமே இருந்தது. அங்கிருந்தவர்கள் எல்லாம் மார்க்சிய கம்யூனிசத் தத்துவங்களோடு அறிமுகமானவர்களாக இருந்தனர். பயஸ் மாஸ்டர் என்பர் விடுதலைப் போராட்டத்தில் ஆர்வமுடையவர்களுக்கு மார்க்சிய அரசியலைக் கற்றுத்தந்தார். திருகோணமலைக்குக் குமணன் செல்லும் வேளைகளிலெல்லாம் அங்கிருந்தோர் அவரிடம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்திருந்தனர். அவற்றிற்குப் பதில் சொல்லவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் குமணனும் மார்க்சிய நூல்களைக் கற்க ஆரம்பித்திருந்தார்.

இது தவிர மனோமாஸ்டர். நந்தன் போன்றோர் மார்க்சியக் கல்வியுடன் ஏற்கனவே பரீட்சயமாகியிருந்தனர். இதனால் குமணனில் ஆரம்பித்து விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு பிரிவினர் மார்க்சிய நூல்களை கற்பதில் ஆர்வமுடையோராக முயற்சி மேற் கொண்டனர்.

பின் நாளில் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராகவிருந்து அவர்களாலேயே இந்திய உளவாளி எனக் குற்றம்சாட்டப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட மாத்தையாவை எங்குபார்த்தாலும் சிவப்பு மட்டைகளோடு கூடிய மார்க்சிய நூலகளுடனேயே காணமுடியும். ஒரு தடவை நந்தன் மாத்தையாவைக் நோக்கி நூல்களை உண்மையில் வாசிக்காமல் அவற்றை வாசிப்பது போலப் போலியாக மற்றவர்களுக்குக் காட்டுவதற்காகவே அவற்றுடன் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். மார்க்சிய நூல்களை வாசிப்பது என்பதே எமக்கு மத்தியில் ஒரு அங்கீகாரம் என்கிற அளவிற்கு ஒரு அலைபோல அனைத்து மட்டங்களிலும் அது பரவியிருந்தது. மாத்தையாவும் பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக மிகத் தீவிரமாகக் கருத்துக்களை முன்வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் காலப்பகுதியில் நான் குமணனின் வீட்டில்தான் தங்குவது வழமை.குமணனோ பழைய போராட்ட வரலாறுகள் குறித்த நூல்களைப் படித்துக்கொண்டிருந்தார்.

மிகக் குறுகிய காலத்தில் பல நூல்களை படித்திருந்தார். நிறைய நூல்களையும் வைத்திருந்தார். அவற்றை வாசிக்குமாறு என்னையும் வற்புறுத்தினார். அன்டன் பாலசிங்கத்தின் அரசியல் வகுப்புக்களுக்கு சென்று வந்த வேளைகளில் அவர் கற்பித்த இயக்கவியல் பொருள்முதல்வாதம் போன்ற எதுவுமே விளங்கிக்கொள்ள முடியாத சிதம்பர சக்கரம் போல் இருந்ததால் நான் ஆரம்பத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லை.

அங்கேயே நான் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் தவிர்க்க முடியாதவகையில் சில நூல்களை படிக்க முற்படுகிறேன். லெனினின் வாழ்க்கை வரலாறு, போல்சுவிக் கட்சி வரலாறு, அதிகாலையின் அமைதியில், ரஷ்யாவில் நரோட்னிக்குகள் குறித்த பிரச்சனை, அராஜகவாதம் குறித்த நூல்கள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைத் திட்டம், மவோவின் இராணுவப் படைப்புக்கள் என்று குறிப்பான நூல்களை எனது வாழ்வின் முதல் தடவையாகப் வாசிபிற்கு உட்படுத்தும் வாய்ப்பு ஏற்படுகிறது. எல்லாமே மார்க்சிய நூல்கள் தான். அன்டன் பாலசிங்கம் ஒப்புவித்த வேளையில் புரிந்துகொள்ள முடியாதவற்றை எமது இயக்கத்தின் நடைமுறைகளோடு ஒப்பிட்டுப் படிக்கும் போது அவையெல்லாம் எமக்;காக எழுதப்பட்டவை போன்ற புத்துணர்வு ஏற்பட்டது.

முதலில் நான் படித்த நூல் லெனினின் வாழ்க்கை வரலாறு. யாரோ ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறு என்ற வகையில் தான் நான் ஆரம்பித்தேன். அதில் சொல்லப்பட்ட விடயங்கள் எமது இயக்கத்தில் உருவாகியிருந்த பல பிரச்சனைகளுக்குத் தீர்வை முன்வைப்பதக அமைந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

லெனினுடைய சகோதரர் நரோட்னிக் என்று அழைக்கப்பட்ட அமைப்பில் இருந்தவர். ஸார் குடும்பத்தின் ஆட்சிக்கு எதிராக அவர் போராடுகின்றார். தனிமனிதப் படுகொலைகளை மேற்கொள்வதன் மூலமே விடுதலைப் போராட்டத்தை வளர்க்க முடியும் என்ற கருத்தை முன்வைக்கிறார். இறுதியில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு மரணமடைகிறார். லெனின் அவரது சகோதரரின் வழிமுறை தவறானது என வாதாடுகிறார்.

அராஜகவாத வழிமுறை என்று சொல்லப்பட்ட இந்த வழிமுறைக்கு எதிராக புதிய திசைவழியை முன்வைத்து சமூகத்தில் மக்களை அணிதிரட்டுகிறார். நாடு முழுவதும் சென்று வெகுஜனங்களை அமைப்பாக்குகிறார். அவர்களது நாளாந்தப் பிரச்சனைகளை முன்வைத்தே மக்களை அணியாக்குகிறார். போராட்டத்தை வெற்றியை நோக்கி நகர்த்திச் செல்கிறார்.

விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் தனிமனிதப் படுகொலைகளிலிருந்தே அனைத்தும் ஆரம்பமாகியிருந்தது. மக்களோடு எமக்கு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. மக்கள் போராடுவதற்காக அணிதிரட்டப்படவில்லை. அவர்கள் எமது வீரச் செயல்களை ரசிக்கும் பார்வையாளர்களாகவே தொடர்ந்தனர். அனைத்திற்கும் மேலாக நான் உட்பட பலரும் விடுதலைக்காத் தான் கொலைகளை மேற்கொள்கிறோம் என நம்பியிருந்தோம். ஆனால் எதற்கெடுத்தாலும் கொலை, கொலை என்பது துரையப்பாவில் ஆரம்பித்து தொடர்ந்துகொண்டிருந்து விரக்தியையே தருவதாக அமைந்தது.

நரோட்னிக்குகளின் நடவடிக்கைகள் என்பதுதான் நாம் இராணுவத்தைக் கட்டமைப்பது என்ற பெயரில் முன்னெடுத்துக்கொண்டிருந்தோம் என்பது அப்போது தான் புரிந்துகொள்ள முடிந்தது.

முதல் தடவையாக வேறு ஒரு வழிமுறையும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க எமக்கு முன்னால் இருப்பதாக உணர்ந்து கொள்கிறேன்.

எனக்குள்ளே ஒரு புதிய இரத்தம் பாய்ச்சியது போன்ற இனம்புரியாத உணர்வு மேலிட்டது.

நான் கற்றுக்கொண்டவை எமது நடவடிக்கைகள் போன்றவற்றின் அவற்றுடனான தொடர்ச்சி என்பன குறித்து மனோமாஸ்டர், நந்தன், மாத்தையா, குமணன் போன்ற பலரும் விவாதிப்போம்.

மாவோவின் இராணுவப்படைப்புகள் மக்கள் இராணுவத்தை எப்படி வெற்றிகரமாகக் கட்டமைப்பது எனக்க் கற்றுத்தந்தது. அவர்கள் எப்படி மக்கள் மத்தியில் வெகுஜன வேலைகளை முன்னெடுத்தார்கள், மக்களோடு இணைந்து மக்கள் கண்காணிப்பில் போராட்டம் நடக்கின்ற போது தனி நபர் கொலைகள் அவசியமற்ற நிலை உருவாகும் என அறிந்து கொள்கிறேன். மக்கள் பணத்தில் தங்கியிருந்தால் கொள்ளைகளும், திருட்டும் தேவையற்றதாகிவிடும் என நம்பிக்கை தருகின்றன அந்த வரலாறுகள். மக்கள் நடத்துகின்ற வெகுஜனப் போராட்டங்களை ஊக்குவிப்பதும் அந்த வெகுஜனப் போராட்டங்களிற்கு ஆதாரமாக இராணுவத்தை மக்களின் கண்காணிப்பில் கட்டமைப்பதுமே ஒரு புரட்சிகரக் கட்சியின் கடமை என உணர்கிறேன். எமது தேசத்தின் விடுதலைக்கான பாதையை மக்கள் பலத்தோடு, உலக முற்போக்கியக்கங்களின் துணையோடு நாம் வகுத்துக்கொள்ளலாம் என நம்பிக்கை கொள்கிறேன்.

தனி மனிதர்களின் தூய்மைவாதம், அரசியலை விமர்சிப்பதற்கு மாறாக தனிமனித நடவடிக்கைகளை குறை கூறுதல் போன்ற விடயங்களுக்கு எல்லாம் முன்னைய போராட்ட அனுபவங்கள் விடை பகிர்ந்தன. துரோகிகளைத் தீர்மானிக்கும் “அரசியல் பொலீஸ்காரர்களாக” நாம் உலா வந்தமை போன்ற பல விடயங்களை நாம் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்ற முடிவிற்கு வருகிறேன்.

என்னிலும் அதிகமாக மனோ மாஸ்டர், நந்தன், போன்றோர் மார்க்சிய இயக்கங்கள் குறித்தும் சமூகத்தை விஞ்ஞான பூர்வமாக எவ்வாறு அணுகுவது என்பன குறித்து தெரிந்து வைத்திருந்தாலும் நான் இவற்றையெல்லாம் எனது நீண்ட போராட்ட வரலாற்று அனுபவத்திலிருந்து பார்க்க முடிந்ததில் நாம் என்ன செய்யவேண்டும் என்பது குறித்த பார்வை ஏற்படுகிறது.

ஆயுதங்களிலும் அதிகமாக,பணத்தைச் சேகரித்துக் கொள்வதிலும் அதிகமாக, ஆட்பலத்தையும் இயக்கப்பிரச்சாரத்தையும் மேற்கொள்வதிலும் , இயக்கத்திற்கு ஆதரவாக மக்களைத் திரட்டிக்கொள்வதிலும் அதிகமாக மக்களமைப்புக்களை உருவாக்க்க வேண்டும் என்ற ஆர்வம்தான் எனக்கு ஏற்படுகிறது.

இதெல்லாம் குறித்து, மனோ மாஸ்டர், நந்தன், அழகன் போன்றோரோடு அடிக்கடி விவாதம் நடத்துவோம். சுந்தரம் ஏற்கனவே சுப்பிரமணியம் போன்ற இடது அரசியல் வாதிகளுடன் தொடர்பிலிருந்ததால் அவரும் நாம் முன்வைக்கும் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறார். எது எவ்வறாயினும் சுந்தரத்தின் பிரதான பிரச்சனையாக இருந்தது பிரபாகரன் மட்டும்தான். பிரபாகரனை பிரதியிட்டு புதிய சர்வாதிகாரமற்ற தலைமையை உருவாக்கினால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்பதுதான் அவரின் பார்வையாக அமைந்தது.

ஆக அமைப்பினுள் இப்போது இரண்டு வகையான போக்குகள் உருவாகின்றன. முதலாவதாக சுந்தரம் முன்வைத்த பிரபாகரனை நீக்கி இன்னொருவாரால் அவரைப் பிரதியிடுவதனு;டாக மக்கள் அமைப்புகளை உருவாக்குவதோ அல்லது அதுபோன்ற ஏனைய ஜனநாயகப் பணிகளை முன்னெடுத்தல் என்பது. இரண்;டாவதாக நாம் ஒரு அரசியலை முன்வைக்கிறோம் அதனை அமைப்பினுள் பிரச்சாரம் செய்து அதனை ஏற்றுக்கொள்ள வைப்பதென்பது. இரண்டுக்குமே ஒரு பொதுவான இயல்பு இருந்தது எனபது உண்மை.பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிரான போராட்டம் என்பதே. ஆனால் இரண்டுமே அடிப்படையில் வேறுபட்ட நோக்கங்களைக் கொண்டவையாக அமைந்தன.

இன்னொரு எல்லையில் நான் அனுபவ அரசியலையும் தத்துவார்த்தப் பக்கத்தையும் ஒன்றிணைத்துப் பார்த்தது போல தேசியப்பற்றுள்ள பிரபாகரனும் புரிந்துகொள்வாரானால் முழு இயக்கத்திலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நம்பினேன்.

இதே காலப்பகுதியில் கிட்டு வாழ்ந்த பண்ணையில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. கிட்டு மீன்பிடிச் சமூகத்தைச் சேர்ந்தவராயினும் வல்வெட்டித்துறையில் மீன்பிடியைத் தொழிலாகக் கொண்ட பரம்பரையைச் சார்ந்தவரல்ல. வல்வெட்டித்துறையில் மீன்பிடிக்கும் கூலித் தொழிலாளர்களை ஏனைய உயர் சமூகத்தினர் மதிப்பதில்லை. கிட்டுவின் பண்ணையில் யோன் என்ற மூத்த உறுப்பினரின் சகோதரரும் இணைந்திருந்தார். அவர் மீன்பிடியைத் தொழிலாகக் கொண்ட குடும்பத்தைச் சார்ந்தவர். கிட்டு அவரை அவமதிப்பது போலவே பலதடவைகள் நடந்துகொண்டிருக்கிறார். தவிர,இரண்டு தடவைகள் அவரை அடித்துத் துன்புறுத்தியிருந்தார். அவ்வேளைகளில் அவரை எச்சரித்து இனிமேல் அப்படி நடந்துகொள்ள மாட்டார் என்ற உறுதிமொழியை வாங்கியிருந்தேன்.

ஆனால் மூன்றாவது தடவையாகவும் கிட்டு அவருக்கு அடித்திருக்கிறார். இதனைக் கட்டுப்படுத்த முடியாது என்ற நிலை உருவான போது,கிட்டுவை பண்ணையை விட்டு வீட்டில் போய் இருக்குமாறு அனுப்பிவிடுகிறேன். அவர் வல்வெட்டித்துறைக்குச் சென்றுவிடுகிறார்.
போராட்டத்திற்கான எமது திசைவழி தவறானது என்ற முடிபிற்கு நான் உட்பட பெரும்பாலோனோர் வந்தடைகிறோம். மக்கள் சார்ந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்துப் பரவலாக நிலவுகிறது. இந்த அடிப்படையில் மக்கள் அமைப்புக்களை உருவாக்கி அவர்களைப் போராடாப் பயிற்றுவிக்க வேண்டும் என்பதில் அனைவரும் உடன்பாட்டிற்கு வருகிறோம். ஆக, எமது திடீர் இராணுவ நடவடிக்கைகளையும், கொலைகளையும் நிறுத்திவிட்டு வெகுஜன வேலைகளை முன்னெடுத்து மக்களைப் போராட்டத்திற்கும் தற்காப்பு யுத்ததிற்கும் தயார்படுத்த வேண்டும் என்று பலரும் கருத ஆரம்பித்தனர்.

இப்போது இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய போக்கை பிரபாகரன்,நாகராஜா ஆகியோருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில் அவர்களுக்குக் கடிதம் எழுதுவதாகத் தீர்மானிக்கிறேன். அதற்கு முன்பதாக இயக்கத்தில் உருவாகியிருந்த இரண்டு போக்குகளுக்கு இடையிலான சமரச முயற்சியாக அனைவரிடமும் ஒரு பொதுவான கருத்தை முன்வைக்கிறேன். பற்குணம்,மைக்கல் கொலை குறித்த பிரச்சனைகளை எல்லாம் இப்போதைக்குப் பேசாமல்,வெகுஜன வேலைகளையும் தத்துவார்த்தக் கல்வியையும் அதனோடிணைந்த மக்கள் அமைப்பைக் கட்டமைக்கும் திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்பதே அது. சுந்தரம் ஆரம்பத்தில் எதிர்ப்புத்தெரிவித்த போதும் இறுதியில் ஒரு இணக்கத்திற்கு வருகிறார்.

ஆக அந்தக் கடிதத்தில் ஒன்றை மட்டும் தான் குறிப்பிடுகிறேன். நாங்கள் முன்னெடுக்கும் போராட்ட வழிமுறை தவறானது.அழிவுகளை ஏற்படுத்த வல்லது. இது குறித்து நாங்கள் அவசரமாகப் பேச வேண்டியுள்ளது.அனைவரையும் உடனடியாக நாட்டுக்குத் திரும்பி வருமாறு அழைப்புவிடுக்கிறேன். கடித்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட பிரபாகரன், நாகராஜா,பேபிசுப்பிரமணியம் உட்பட அனைவரும் உடனடியாகவே நாடுதிரும்புகின்றனர். இந்தியாவில் ரவியும் பாலாவும் மட்டுமே தங்கியிருக்கின்றனர்.

இன்னும் வரும்..

பகுதி பதினாறைப் படிக்க., பாகம் பதினைந்தைப் படிக்க.., பாகம் பதின்நான்கை வாசிக்க.. , பாகம் பதின்மூன்றை வாசிக்க..  பாகம் பன்னிரண்டை வாசிக்க.. பாகம் பதினொன்றை வாசிக்க.. பாகம் பத்தை  வாசிக்க.. பாகம்  ஒன்பதை வாசிக்க.. பாகம் எட்டை வாசிக்க.. பாகம்  ஏழை வாசிக்க.. பகுதி  ஆறை  வாசிக்க… பகுதி ஐந்தை  வாசிக்க… பகுதி நான்கை வாசிக்க.. பகுதி மூன்றை வாசிக்க.. பகுதி இரண்டை வாசிக்க..  பகுதி ஒன்றை வாசிக்க..

42 thoughts on “நாம் செல்லும் திசை தவறானது – புலிகளுள் துளிர்விடும் அதிர்ப்தி – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம் 17) : ஐயர்”

 1. ஆரம்பித்ததே அடக்குமுறைக்கு எதிராக ….ஆனால் ஆரம்பித்தவர்களே அடக்குமுறையாளர்களாக இருத்ததினால் தான் என்னவோ எப்படியோ இருக்கவேண்டிய ஈழத்தமிழினம் இன்று நாதியற்று போய் விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது!!!

 2. ……………பின்நாளில் நடந்தவற்றை வைத்து அனுமானிக்கும் போது சுந்தரம் தான் உமா மகேஸ்வரனுக்கு கொலைத்

  திட்டமிடல் குறித்த தகவல்களை வழங்கியிருக்க வேண்டும் என்பது சற்று வெளிப்படையானதாகவே தெரியவந்தது…………….பாகம் 16

  ……………தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் உமாமகேஸ்வரனுக்கும் இடையான தொடர்பு பின்பு ஒரு போதும் ஏற்பட்டதில்லை. ………….

  ………….எது எவ்வறாயினும் சுந்தரத்தின் பிரதான பிரச்சனையாக இருந்தது பிரபாகரன் மட்டும்தான்…………………………………………………………………………….பாகம் 17

  அய்யர் உண்மைகளுக்கு வேறு மை போட்டு புனைய முயல்கிறீர்களா!!!!!!!!?

 3. ஐயா இவளவு அறிவு உள்ள நீங்கள் இனி எஆன் நாடுகடந்த தமிழ் ஈழம் அமைப்புகளுடன்
  சார்ந்து உங்கள் இலச்சியத்தை அடைய உதவி செய்யலாம்
  ?

  1. Iya is old Tiger, he knows every thing now , he never go for pice of meet like tamils who living in west. he had been through lots of experience and learn lots. I price him.

 4. பாடசாலையில் படிக்கும் காலங்களில் ஆசிரியர்கள் எவ்வளவுதான் வடிவாக விளங்கப்படுத்தினாலும் சில மாணவர்கள் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.அது அவர்களுக்கு ஒருவித மனநோய்
  .வாதத்திற்கும் அதுதான் போலிருக்கின்றது.

  1. ரதன் அண்ணே! வடிவாய் விளங்கப்படுத்திற டீச்சரிட்டை படிக்கைக்கிள்ள, மனநோய் நிபுணராகவும் இருந்திருக்கிறிங்க போல. இருந்த தலையாட்டிகளெல்லாம்,இப்ப எங்கெல்லாம் தலையாட்டுகினம் எண்டு தெரியுந்தானே.கதை தெரிஞ்சவனுக்கு,விடுகதை விடப்பிடாது.புள்ளிகளைப் பார்த்து புளகாங்கிதம் அடையாமல்,வரிகளில் விடைகளைத் தேடுங்கள்.

   1. வாதத்திற்கு வாதம் போலும்.

  2. எம் சமூகத்தை நந்திக்கடலருகில் கோவணத்துடன் நிறுத்தியது உம் போன்ற கனவான்களின் கோவிந்தா அல்லது மவுனம்

 5. வதாதுக்கு மட்டுமல்ல இங்கு நிறைய பேருக்கு இதே மனனோய் தான் . ஐயரின் நேர்மை பற்றிப் பிரபாகரனே பல தடவை பலரிடம் சொல்லியுள்ளார்.

 6. பிரபாகரனுக்கு பக்கத்திலிருக்கும் போது அவருக்கு ஆமாம் போட்டீர்கள். அதிர்ப்தியாளரின் அருகிலிருக்கும் போது அவர்களுக்கு ஒத்து ஊதினீர்கள். கருத்துக்களை ஒன்றிணைத்தீர்களா? அல்லது எரி(கின்ற)ந்த தீயில் குளிர் காய்ந்தீரகளா? காய்கிறீர்களா?

 7. ஐயரை அவன் தட்டாமல் விட்டதே பெரிய விசயம்.

  1. உடுத்த உடுப்பு எல்லாம் கழட்டி போட்டு கோவனத்துடன் அனுப்பினான் சிங்கலவன். கோவனத்தையும் உருவி விட்டார் பிரபாகரன்.

 8. Iya is old Tiger, he knows every thing now , he never go for pice of meet like tamils who living in west. he had been through lots of experience and learn lots. I price him.

 9. ஐயா

  இந்த போராட்டம் அழிந்து போனதுக்கு நீங்களும் ஒரு காரணம். உருப்படியாக
  இனி எதாவது சையபர்கவும் .

 10. அறிவாளிகளை எங்கள் சமூகத்தில் இருந்து களைஎடுத்தார் உலகில் தனக்கென ஒரு நாட்டைதானும் வென்றெடுக்க முடியாதவர்
  இவரும் இவரை தேசியத் தலைவர் என்று கொண்டாடி கொடி பிடித்தவர்களும் மாற்று கருத்துடையவர்களை
  எல்லாம் துரோகி என்று கூறிக்கொண்டு திரிந்தவர்களும் கொஞ்சமாவது திரிந்தினால் தான் தமிழ் மக்களுக்கு
  எதாவது ஆக்கபுர்வமாக செய்ய முடியும் வீரத்தை விட விவேகமே சிறந்தது.

 11. அய்யர் வரலாற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் உங்கள் பணி அளப்பரியது. தற்பெருமையற்று அருவருப்பான சாடல்கள் இன்றி, முழுத் தமிழினத்திற்கும் முன் உதாரணமாக நீங்கள் ஆற்றும் பணி இன்று தேவையானது. ஒரு இயக்கத்தை எவ்வறு மறு மதிபீடு செய்வதென்பதை உங்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். உங்கள் சேவை இன்னுமொரு நூறாண்டுகளுக்கு வாழும்.

 12. பிரபாகரனுக்கு தேசியப் பற்றிருந்ததா? வெறியிருந்ததா? ஐயர் தொடர்ந்தும் பிரபாகரனுக்கு தேசியப் பற்றிருந்தது என்றே எழுதுகிறார். அந்த பற்றா முள்ளிவாய்க்காலில் மண்டியிட்டது? பிரபாகரனுக்கு இருந்ததெல்லாம் வெறியும் பேராசையும் தான். கொலையில் தொடங்கி கொலையிலே வளர்ந்து கொலையுண்டுபோன பிரபாகரனுக்கு மனிதத் தன்மை எங்கியருந்தது எதிலிருந்தது? ஒரு கொலைகாரனை அவர் / அவர்கள் / மனிதன் என்றெல்லாம் எழுதுவது கேவலம்!

 13. மானிப்பாய் சந்தையடியில் இருவர் சண்டை பிடித்துக்கொண்டு இருந்திருக்கும் போது அவ்வழியாக வந்துகொண்டிருந்த சுந்தரம்
  இருவரையும் விலக்கு பிடிக்க அவர்கள் இருவரும் சுந்தரத்துக்கு எதிராய் திரும்ப ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சாரத்து
  மடிப்பில் இருந்த பிஸ்டல் கீழ விழவும் பவ்வியமாக குனிந்து பிஸ்டலை எடுத்து மடிப்பில் மீண்டும் சொருகிக்கொண்டு
  அங்கிருந்து அகன்றராம் இதுவே கிட்டு என்றால் யோசித்து பாருங்கள். கண்ணாடி ஈஸ்வரன் தன் பல்கலைகழக படிப்பை
  முடித்து விட்டு தான் சார்திருந்த அமைப்பில் இருந்து விலகி பூநகரியில் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக படிப்பித்து
  கொண்டு இருந்தவரை சந்தைக்கு பொருட்கள் வேண்டப்போன இடத்தில் சுட்டுப்போட்டு துரோகி பட்டமும் சுட்டினார்கள்
  புலிகள் தன் ஒரே மகனை இழந்த அந்த வயோதிப தாய் என்ன பாடு பட்டிருப்பார்கள் என்பதை நினைத்து பார்த்தல் வேண்டும். தயவு செய்து புலிகளை விட்டு வெளியில் வாருங்கள் எல்லா இயக்கத்தில் இருந்தவர்களும் ஒன்றிணையுங்கள்
  பலமான அமைப்பொன்றை உருவாக்கி அறிவு பூர்வமாக அரசியல் விவாதங்களை மேற்கொண்டு எம் மக்களுக்கு ஓர் விடிவை பெற்று கொடுப்போம் டெலோ plote eprlf ltte ஈரோஸ் என எல்லா இயக்கங்களில் இருந்த முற்போக்கு சக்திகளே
  ஓரணியில் திரள்வோம் மகிந்தவின் கொலை பிடியில் இருந்து எம் மக்களை விடுவிப்போம்.

  1. மறைந்நிருந்து சுட்டவிட்டு வீரம் என்று கதைப்பவர்களும் அதைப் பெருமையாகப் பேசுபவர்களும் கொஞ்சம் சும்மாஇருந்தால் நல்லது. கிட்டவைக்கூட காட்டிக்கொடுத்தது பிரபா தான் என்று அரசல்புரசலாக அப்போது கதைத்தார்கள். ஏனென்றால் கிட்டுவிற்கு அப்போது யாழ் மாவட்டத்தில் நல்ல செல்வாக்கு இருந்ததாம். அவன் வந்தால் தலைவற்றை மவுசு குறைந்துவிடும் எண்டு தலைவர் அவரைத் துலைக்க வேண்டும்என்று பிளான் பண்ணி காட்டிக்கொடுத்ததாக கதை ஒன்று அந்தநேரம் வந்தது.

  2. பிரபாகரனிடம் இருந்து தமிழ் மக்களை காக்க சிங்கள இளைனைர்கள் செய்த தியாகம் போற்றுதற்குரியது , பிரபாகரன் உயுருடன் இருக்கும் போது ஒவ்வொரு நாளும் இலங்கையில் உயிர்கள் அழிந்தன , , அப்படி பட்ட நிலை இன்று இல்லை.

 14. ஆரம்பிச்சு வைத்துவிட்டு விரக்தியில் வெளியேறியவர்கள் வெளியேட்டபட்டவர்கள் எல்லோரும் பழைய வேறுபாடுகளை
  மறந்து இணையுங்கள் புலிகள் அமைப்பில் இருந்தவர்களையும் இணையுங்கள் எப்படியோ மகிந்தவின் ஆட்கள் ஊடுருவாமல்
  பார்த்துகொள்ளுங்கள் சுரேசின் கருத்து நல்ல கருத்துதான் எனினும் தயவுசெய்து நாடுகடந்த அரசாங்கத்தை ஒரு வருடத்துக்கு
  ஒன்றும் சொல்லாமல் விடுங்கள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதயும் பார்ப்போம் கை எடுத்து கேட்கிறேன் ஒன்று படுங்கள்
  புலிகளையும் பிரபாவையும் குத்தம் சொல்வதையும் விடுங்கள்.

 15. நாடுகடந்த தமிழீழ அரசில் நல்லவர்கள் வல்லவர்க்ள் முன்னெடுத்தால் பரவாயில்லை பக்கா போக்கிரிகளும் பச்சோந்திகளும் அல்லவா முன்னிற்கிறார்கள் எப்படி சும்மா இருப்பது. உருத்திரகுமாரன்/ சாம் சிவதாசன்/ கவிஞர் சேரன்/ ஏதோவொரு பொன் இவர்களெல்லாம் உத்தமர்தானா சொல்லுங்கள்? நா.த.அரசின் திறைசேரி என்ன? இவர்களெல்லாம் வேலைவெட்டியில்லாமல் எப்படி குடும்பம் குட்டி யை நடத்துகிறார்கள்? இதற்கு எங்கிருந்து பணம் வருகிறது? நா.த. அரசாங்கம் வெளிநாட்டு கடன்களை வாங்குகிறதா? அது எவ்வளவு இன்னோரன்ன ஆயிரம் கேள்விகள் இருக்கப்பா? முதலில் மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொன்னால் ஒரு வருடம் 3 மாதங்களும் ஒன்றும் சொல்லாலமல் விடுகிறோம்?

  1. நா. க. அரசாங்கம் நடத்த மில்லியன் டொலர் நிதித்திட்டம் தேவையில்லை இது ஒரு மக்கள் போராட்ட முன்னெடுப்பு அமைப்புத்தான். விளங்குதா?

   1. இங்கு மக்கள் என்று யாரைக்குறிப்பிடுகிறீர்கள்? வெளிநாட்டு தமிழர்களையா? அல்லது தற்போது இலங்கையிலுள்ள தமிழர்களையா?

   2. பிறகேன் காசு காசு என்று சாகினம். உந்த ரி.ஆர்.ஆர்.ஓ எல்லாம் தமிழ்மக்களுக்க என்று காசு சேத்திச்சினம் ஆனால் யாழ்ப்பணத்திலையும் கிளிநொச்சியிலையும் போய்க்கேட்டால் அவையள் யார் எண்டல்லோகேக்கினம். அதால பயன் அடைஞ்சது எல்லாம் வெளிநட்டிலை இருந்த போராட்டக்காரர்களோ என்று கேட்டகத்தோண்டுது. பாவம் அவையளுக்கும் என்ன கஷ்டமோ!!!!. காசைச்சேத்துப் பழகிட்டினம் கைசும்மாவோ இருக்கும்.

  2. சுதேவுன் அல்லது ஏதோ பெயரே பச்சோந்தித்தனம்தானே. பின்னர், அதனால் பச்சோந்திகள் என்பதையும் விட்டுவிடலாம்.

   இவ்வாறு பச்சோந்திப் பெயர்களில் சிலரது பெயர்களைக்குறிப்பிட்டு (உண்மையான அறியப்பட்ட பெயர்களைச் சொல்லித்) தேவையில்லாத கற்றச்சாட்டுக்களைச் சுமத்த
   முடிகிறது.
   இதுபோன்றவைதொடர்பாக விரிவாகவம் எழுதலாம். ஆனால் சொந்தப்பெயரில் இவ்வாறான வம்புகளுக்குப் பதில் சொல்வது தேவையற்றது என்பதனால் நானும் அதே பச்சோந்தித்தனத்தைக் கையாள்கிறேன், இனியொரு அனுமதிக்கும் என்று நம்புகின்றேன்.

   பொதுவாக கனடாவில் இருக்கும் உண்மையான பிரச்சினைகளை மறைக்கும் வகையில் பொய்யான வேறு சிலவற்றைச் சிலர் இணையங்களில் எழுதிவருகின்றனர். கனடாவில் நாடு கடந்த அரசிற்கு எதிராக செயற்பட்டு அதற்குள்ளே நுழைந்துள்ள பல முன்னாள் புலிகளுக்கு(கனடாவின் தடைசெய்யப்பட்ட உலகத்தமிழர் இன்) பல்வேறுபட்ட வடிவங்களுக்கு ஆதரவுக்குரலாகவே இருக்கிறது இந்த சுதேவுன் குரல்.

   இங்கு குறிப்பிட்டுள்ள நான்கு பெயர்களும்நாடுகடந்த அரசின் செயற்பாடுகளில் ‘ஸோ கோள்ட்’ கனடாப்புலிகளின் கோட்டைக்குள் இல்லாதவர்கள். அவர்களால் விரும்பப்படாதவர்கள். அதனால் புலிகளுக்கு எதிரானவர்கள் என்றும் பொருளல்ல.

   இவர்களோடு அவர்கள் கருத்துக்களில் நடைமுறை முரண்களில் எனக்கு 1000 முரண்பாடுகள் உண்டு. ஆனாலும் பொய்யாக மேற்குறிப்பிட்டவர்களைப்பற்றி எழுதப்படும் பொருளாதாரக் குற்றச்சாட்டு, வன்னிப்புலிகளின் பெயரால் சேர்த்த காசுகளில் 5-6 வீடுகள் கடைகள் என்று வாழும் பல நிறுவனங்களை நடத்தி சுகபோகத்தில் வாழும் ‘மற்றப் புலிகளை’ மறைக்கும் திட்டமாகவே படுகிறது.

   முதலில் எனக்குத் தெரிந்தவரைசொல்லப்பட்ட நான்குபோரும் மிகுந்த வருவாய் வரும் தொழில்பார்ப்பவர்கள். அவர்கள் புலிகளுக்கு முன்னாலேயே பணத்தேவை இல்லாத நிலையிலிருக்கலாம் என்றே எண்ணுகின்றேன்.

   அவரவர்களின் மற்றைய தவறுகளை சுட்டியிருந்தால் நான் இங்கு தலையிட்டிருக்கமாட்டேன். இது – பொருளாதாரக் குற்றச்சாட்டு வெறும் குணவியல்சார்ந்து தாக்குவது மட்டுமே. (ஊhயசயஉவநச யளளயளளiயெவழைn) இதனால் பயனில்லை. ஆக்கபூர்வமான விமர்சனங்களை அவர்கள்மேல் வைக்கலாம். அதற்கு நிறைய இடமிருக்கிறது. சுதேவுன் இதைச் செய்யுங்கள் முதலில்.

   இலங்கை அரசிடம் காசுவேண்டிச் செயற்படுவபவர்கள் பலர் இருக்கிறார்கள். புலிகளின் காசில் இன்று சுகபோக வாழ்க்கையில் பலர் இருக்கிறார்கள். கள்ள மட்டைபோட்டவர்கள், போதைப்பொருள் கடத்தியவர்கள், ஆட்கடத்தியவர்கள் என்ற பலர் உண்டு. கொள்ளைக்கூடாரமாகக் கோயில் நடத்துபவர்களும் இருக்கிறார்கள். சுதேவுன் அவர்களைப்பற்றி எழுதுங்கள்.

   கனடாவில் இருக்கும் எனக்கு தெரிந்தவரை

   1.உருத்திரகுமாரன் ஓர் வக்கீல். இந்த நாடுகளில் வக்கீல் தொழிலின் வருமானம் சொல்லித் தெரிய வேண்டிதில்லை. இவர் அமெரிக்க வாசி.

   2.கவிஞர் சேரன் என்பவர் தற்போது ஓர் பல்கலைக்கழக விரிவுரையாளர். இலங்கையில் இந்தப் பணியில் இருப்பவருக்கு இலங்கையில் ஒரு லட்சம் மாதம் வரும். கனடாவில் என்ன என்பதை கணக்குப்போடுங்கள்.

   3. சாம் சிவதாசன் என்பவர் ஓர் வீடு விற்பனை முகவர். ஓர் நிறுவனத்தை நடத்துவபவர் இவருக்கு ஒரு வீடு விற்றால் அதன் 2.5 வீதம் சராசரியாக வருவாயாக வரும். கனடாவில் 3 அறைகொண்ட ஓர் வீட்டின் விலை என்ன என்பதை யோசித்துப் பாருங்கள். அல்லது விசாரித்துப் பாருங்கள். மேலும் வீட்டைச் சொந்தமாக்குவதற்கு தமிழர்களுக்குள்ள வெறியார்வத்தையும் Nசுர்த்து யோசியுங்கள். மீதி தெரியவரும். மேலும் அண்மைக்காலம் வரையிலும் இவர் ஓர் எந்திரவியலாளராகப் பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்.

   4. பொன் பாலராசன். (பொன் என்று அன்பாகக் குறிப்பிட்டபடியால் இந்த சுதேவுன் மிக நெருங்கியவர் போலத்தான் இருக்கிறார்.) பொன் பாலராசன் என்பவர் தற்போது நாடுகடந்தை மக்கள் அவையின் அவை முதல்வராக தேர்வாகியிருப்பவர். இவர் ஓர் தொமழில் நுட்பபவிலாளர். கணினி தொடர்பான மேலாளுகைப் பணியில் இருக்கிறார். குறைந்தது 80 ஆயிரம் முதல் 1லட்சத்து 50 வரை அவருக்கு ஊதியம் வரலாம்.

   அவை தவிர இவர்களின் மனைவி மக்களும் உழைப்பவர்களதானே!

   சுதேவுன் போன்றவர்கள் செய்யும் எழுத்துச் சாற்றுதல்கள் சிலவேளைகளில் நல்லதையே செய்கின்றன.

   சுதேவுன் போன்றவர்கள் மெதுவாக ‘கள்ளப்’புலிகளுக்கு அல்லது ‘கொள்ளைப்’புலிகளுக்கு சார்பானதை கருத்தை எழுதுவதாகவே படுகிறது.

   —-
   உத்தமர்களா என்ற கேள்விக்கு பதில் சொல்ல இயலாது.உத்தமர் என்பதன் பொருள் எனக்கு புரியாததால்.
   —-
   நாடுகடந்த அரசு பற்றிய கருத்தில் எனக்கு பலவாறான மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அதை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதாகவும் எடுக்கவேண்டாம்.

   கனடாவில் இருக்கிறேன். இங்கிருப்பவர்கள் சிலரைப் பற்றி ஒருவர் பொய்ப் பெயரில் எழுதுகிறார். அதனால் உலகம் மழுதும் இருந்து வாசிக்கம் பலருக்கும் உண்மை தெரியட்டும் என்று இதை எழுதுகிறேன். மற்றப்படி இந்த விவாதத்தில் எனக்குச் சார்பு நிலை இல்லை. இந்த விவாத எல்லைக்குள்ளம் நான் இல்லை.

   1. கள்ள மட்டைபோட்டவர்கள், போதைப்பொருள் கடத்தியவர்கள், ஆட்கடத்தியவர்கள், கொள்ளைக்கூடாரமாகக் கோயில் நடத்துபவர்கள் போன்றவர்களை வழிநடத்திய பக்கா போக்கிரிககள், பச்சோந்திகள் என்பவர்களில் (உருத்திரகுமாரன்/ சாம் சிவதாசன்/ கவிஞர் சேரன்/ ஏதோவொரு பொன்) இவர்களுந்தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.கோட்டைக்கு உள்ளும்,வெள்யேயும் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததல்ல புனிதம்.இவர்கள் வடம் பிடித்தவர்கள்,பங்காளிகள்,பேரழிவின் பிதாமகர்கள்.

    1. உங்களுக்கு இனியொருவில்தான் இதுமாதிரி இடத்தில்தான் இடம்கிடைக்கும்

     1. ஏமாற்றுகாரர்களிற்கு நாடு கடந்த அரசில் சிம்மாசனம். ஈழத்தமிழர்கள்ற்கு முள்ளிவாய்க்கால்.. இதனைக்கூறும் எங்களிற்கு

      இனியொரு. இதுவரை ஈழத்தில்நடந்தது
      விடுதலைப்போராட்டமல்ல் பயங்கரவாத்மே
      என்பத்ற்கு இனியொருவும் சாட்சியாகின்றது இன்னமும் புரியவில்லையா?

      துரை

    2. கள்ள மட்டைபோட்டவர்கள்இ போதைப்பொருள் கடத்தியவர்கள்இ ஆட்கடத்தியவர்கள்இ கொள்ளைக்கூடாரமாகக் கோயில் நடத்துபவர்கள் போன்றவர்களை வழிநடத்திய பக்கா போக்கிரிககள்இ பச்சோந்திகள் என்பவர்களில் பொய்ப்பேரில் எழுதும் நீங்களும் அதை ஆதரிக்கும் இனியொருவும் இந்த மனோநிலையும்தான் சேரும் என்பதை மறுக்கிறீர்கள்?

   2. ஐயா இவர்கள் எல்லாரும் தமிழீழத்தை நாடு கடத்திப்போட்டினமோ. எங்கட தலைவர் செத்ததும் தான் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தையே நாடுகடத்திப்போட்டினம். அப்ப இலங்கையில இருக்கிற தமிழ்ச்சனத்தின்ர கதி அம்போதான். இப்ப தமிழீழம் இலங்கையிலோ அல்லது கன்hவிலோ என்று பலபேர் என்னட்ட கேட்கினம். எனக்கென்றால் பதில்தெரியாமல் மண்டை விறைக்குது. உங்களுக்கு ஏதும் தெரிஞசால் சொல்லுங்கோ. அதிண்டை மப்பையும் எனக்கு தாங்கோ. என்ரை வீட்டில கொளுவவேணும்.

 16. Dear Sudaevoun

  please note last 20 years we did not lost any land or fundamental right’s because of LTTE
  now SL goverment start doing this because no LTTE

 17. ஒரு தமிழனை சிங்கள இராணுவம் கொல்வதை ஒரு சிங்களவன் (இராணுவசிப்பாய்) படம்படித்து உலகத்துக்கு காட்டினான். சிங்களவர்களில் மனித நேயமுள்ளவர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. ஒரு தமிழனாவது புலிகளால் சிறைபிடிக்கப்பட்டு ஈவிரக்கமின்றி சித்திரவதைசெய்து கொலை செய்யப்பட்ட சம்பவங்களை சொல்வதற்கு முன்வருவானா? ஒரு சாட்சியாவது இருக்கா? இருக்கிற சாட்சிகளாவது முன்வருவார்களா? கேவலம் கேவலம் தமிழன் என்று சொல்வது மகாகேவலம்!

  1. Why not?
   even in the final war there was a Youtube clip where LTTE mowed down a truck full of injured soldiers (looks like that truck got into a trap or came wrongway)
   but the difference is we used that clip to show ltte was winning 🙂 🙂 and it is a good lesson for invaders…this and that

  2. //கேவலம் கேவலம் தமிழன் என்று சொல்வது மகாகேவலம்!//
   சரிதான்….
   தமிழர் என்று சொல்லலாம்.
   விளங்கினாச் சரிதான்.

  3. அது சமூகசேவைபாருங்கோ. எங்களை நாங்கள் கொல்லுறதை பார்த்து ரசிப்போம். ஆனால் படமெடுத்து மீண்டும் பாக்கமாட்டம். அப்படி மீண்டும் பாக்கவேண்டும் எண்டால் மீண்டு பிறஸ் ஆய் ஒராளைப்போட்டு ரசிப்பம். அதுக்குத்தான் தமிழீpத்தில கனபேர் இருக்கினம். நீங்கள் ஏன் சாட்சியைக்கேட்ட தேசத்துரோகமாய் நடக்கிறீங்கள்.

 18. யாம் அனைவரும் கனடாதமிழ்போயின் கருத்துகளை ஆதரிப்பதோடு அதன் யதார்த்தமான தன்மைகளையும் புரிந்து கொண்டு இனியும் ஏமாளிகளாபோகாமல் மிக்க யாக்கிரதையுடன் ஈழத்தமிழர் துயர் நீக்க ஒன்றாக பாடுபடுவோம்! கனடாதமிழ்போயின்,உங்களுக்கு தெரிந்த இன்னும் உண்மைகளை இனியொரு இணையத்திற்கு வெளிக்கொண்டு வருமாறு தாழ்மையுடன் கனடா வாழ் அப்பாவிதமிழ் மக்கள் சார்பாக கேட்டுகொள்கிறேன்.

 19. ஐயர் அவர்களே உங்களுடைய 17 வது தொடரில் ஊர்மிளாவின் இறப்பு சம்பந்தமாக நீங்கள் எழுதியதில் சந்தேகம் உள்ளது. சாதாரணமாக ஒரு இளைஞர் கூட புலி இயக்கத்தில் இணைய பயந்திருந்த அக்காலத்தில் கொழும்பில் உத்தியோகம் பார்த்து வந்த ஊர்மிளா துணிச்சலுடன் புலி இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட முதலாவது பெண் போராளியாவார்.
  புலி இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை முதல் முறையாக உரிமை கோரி வெளியிட்ட துண்டு பிரசுரத்தை தட்டச்சு இயந்திரத்தில் தட்டச்சு செய்து வெளியிட்ட உதவியது ஊர்மிளாவின் பங்களிப்பு குறிப்பிடதக்கது.
  இலங்கை பொலீசாரால் ஊர்மிளா தேடப்பட்ட போது உங்களுடன் தோணியேறி இந்தியாவுக்கு சென்ற முதல் பெண் போராளியும் அவரே. அவவுடைய மரணத்தை சர்வசாதாரணமாக எழுதியதுடன் மரணத்தில் வேறுபட்ட கருத்துக்களும் நிலவியதாகவும் எழுதியுள்ளீர்கள்.
  83 களில் ஜரோப்பிய நாடு ஒன்றில் சோட் பாலாவை சந்தித்து உரையாடிவர்களில் நானும் ஓருவன் என்ற வகையில் இதை எழுதுகிறேன் புலி இயக்கத்தின் ஆரம்பகட்ட செயற்பாடுகளை பற்றி அவருடன் கலந்துரையாடலின் போது பிரபாகரனை இணுவில் சந்தியில் வைத்து இன்ஸ்பெக்டர் சண்முகதாசனால் கட்டிப்பிடித்து இழுத்து செல்ல முற்பட்ட போது தான் சண்முகநாதனை சுட்டு எப்படி பிரபாகரனை காப்பாற்றியது உட்பட ஊர்மிளாவின் இறப்பைபற்றி கூறியபோது ஊர்மிளா கடும் சுகயீனமுற்றிருந்த போது அவவுக்கு எந்தவித மருந்துவ உதவியும் செய்யவிடாமல் பிரபாகரனால் தடுக்கப்பட்டதால் தான் ஊர்மிளா இறக்க நேர்ந்ததாகவும் கூறியிருந்தார் இவ்விடயம் உங்களுக்கு தெரியாமல் இருப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை இதைப்பற்றிய உண்மையை எழுதுவீர்கள் என எதிர்பார்கிறோம்.

  வசந்தன்

  1. பிரபாகரன் என்றால் கருணை. கருணை என்றால் பிரபாகரன்தான் என்று உம்மட ரீச்சர் சொல்லிதரலையோ. கிணறுகிண்ட பூதம் வந்த கதையாத்தான் இப்ப எல்லா நியூசும் இருக்குது. இந்தளவு அசிங்கமாக் நடந்த பிரபாகரன் மதிவதனி அக்காவை!!!!!!!!! எப்படிதான் நடத்தினார் என்று தெரியவில்லை.

 20. எடப்பாவிகளா!!!!!!!!!!! எவ்வளவு உண்மைகள் மறைக்கப்டிருக்கின்றது என்று இப்போது தான் மக்களுக்கு தெரியவருகின்றது. ஐயரின் சுயவிமர்சனம் கூட காலம் தாழ்த்தித்தான் வந்திருக்கின்றது. இருந்தாலும் இவைபோன்ற அருவருப்பான சம்பவங்கள் யாவும் வரலாற்றில் பதியப்படவேண்டும். அப்பபோது தான் இம்முடைய சந்ததியினரும் இந்ததத்தவறை விடமாட்டார்கள். அதிலும் பாருங்கள் 17 வயதில் கொலைசெய்த பிரபாகரனை தலைக்குமேல் வைத்து கொண்டாடிய யாழ்ப்பாணத்தவரது கல்லி அறிவும் முற்போக்குச் சிந்தனையும் எவ்வாறு அழைப்பது. இப்பவே கண்ணைக்கட்டுது. ஆனால் ஐயரால் சொல்லப்பட்ட சில விடயங்களும் தினமுரசு பத்திரிகையில் அற்புதன் அவர்களால் எழுதப்பட்ட சில விடயங்களும் ஒத்துப்போகின்றன.

Comments are closed.