நான் தோற்றதைப் பற்றிக் கவலைப்படவில்லை – இதனால் நாட்டுக்குத் தான் இழப்பு!!!:ஆனந்தசங்கரி

 

 யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தல்-:தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கூறுகையில்;
 

இது பெரிய மோசடியான தேர்தலாக நடந்தேறியிருக்கிறது. பல கோடிக்கணக்கான ரூபாவைச் செலவு செய்து குடாநாட்டிற்கு வருகைதந்த அமைச்சர்கள் மக்களை ஏமாற்றினர்.

இதற்காக இங்கு வந்து சென்ற அமைச்சர்களும் அரசாங்கங்களும் உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும்.

18 வீத வாக்களிப்பே நடைபெற்றிருக்கின்றது. இதற்காக வரும் ஒரு உள்ளூராட்சித் தேர்தலுக்காக அரசு பல கோடிக்கணக்கான ரூபாவைச் செலவு செய்திருக்கின்றது. மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே தேர்தல். களியாட்டங்களுக்காக அல்ல. மிக விரைவில் யாழ்.குடாநாட்டு மக்களை இரத்தக் கண்ணீர் விட வைக்கும் முகமாகவே இந்த அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நான் பதவிக்காகத் தேர்தல் கேட்கவில்லை. நானும் கேட்காமல் விட்டிருந்தால் நிலைமை மிகவும் மோசமாகப் போயிருக்கும். நான் தோற்றதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இதனால் நாட்டுக்குத் தான் இழப்பு என்றார் ஆனந்தசங்கரி.

2 thoughts on “நான் தோற்றதைப் பற்றிக் கவலைப்படவில்லை – இதனால் நாட்டுக்குத் தான் இழப்பு!!!:ஆனந்தசங்கரி”

  1. POLITICIANS ALWAYS THINK OF THEMSELF THEY DOSENT REALY CARE OF PEOPLE ONCE THEY CAUGHT THEN THEY PLAY DRAMA TO CHANGE PEOPLE MIND ITS NOT WILL WORK OUT THIS TIME.PEOPLE KNOW WHAT THEY ARE DOING,SO FORGET ABOUT THIS GUY AND GET ALONG WITH YOUR LIFE.

  2. இவர் ஒரு பதவிப் பித்தர் கிட்டாதபோது பிதற்றுவார்

Comments are closed.