நாடோடிகளின் இனிய இசை(1) : T .சௌந்தர்

மனித வாழ்வில் புலம் பெயர்தல் என்பது நீண்ட காலமாக நடைபெற்றுவரும் ஒன்றாகும்.இப்புலம்பெயர்வு ஏதோ ஒரு விதத்தில் சிலருக்கு வழமான எதிர்காலத்தை உருவாக்கவும் சிலருக்கு நிர்ப்பந்தங்கள் நிறைந்த வாழ்க்கைக்கு காரணமாகவும் அமைந்து விடுகிறது.புலம் பெயர்கின்ற மக்கள் தாம் செல்லும் நாடுகளில் தமது சுய அடையாளத்துடன் குறிப்பிட்ட நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் அங்கீகரித்து வாழும் முறைமையையும் ( Intergration ) , முற்று முழுதாக சுய அடையாளத்தையும் ,பண்பாட்டையும் இழந்து குறிப்பிட்ட நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களையும் ,பண்பாடுகளையும் ஏற்றுக் கொண்டு முழுமையாக அவர்களுடன் கலந்து விடும் ( Assimilation ) வாழ்க்கை முறைமையையுமான இரண்டு போக்குகளையுடையவர்கலாக இருக்கின்றார்கள்.

மற்றொரு சமுதாய பண்பாட்டாலும் பழக்க வழக்கங்களாலும் முற்றாக உள்வாங்கப்பட்ட சமுதாயத்திலிருந்து தனது சந்ததியின் வேரைத் தேடி அலைந்து தனது மூலவேரின் சால்பைக் கண்டறிந்த மனிதன் அதுவே தனது வரலாறு எனக் கண்டான்.இதற்க்குச் சான்றாக ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியாளர்கள் ஆபிரிக்க நாடுகளிலிருந்து அடிமைகளாகக் கொண்டு சென்ற ஆபிரிக்க மாக்களின் வரலாற்று ஆவணமாக ” The Roots ” ( வேர்கள் ) என்ற நூல் அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பின எழுத்தாளரான அலெக்ஸ் ஹெலி ( Alex Haley ) என்பவரால் எழுதப்பட்டது.இரு நூறு ஆண்டுகள் மறைந்தும் தனது வேரைத் தேடிச் சாதனை படைத்த மனிதன் அளித்த வரலாற்று ஆவணம் அது.

புலம் பெயர்வுகள் மனிதர்களை பல வழிகளில் மேம்படுத்தவும் அவர்களிடையே கலப்புகளை ஏற்ப்படுத்தவும் வழி செய்ததோடு பலவிதமான படிப்பினைகளையும் கொடுத்துள்ளன.இது ஒரு புறமிருக்க புலம்பெயர்ந்து புதிய கண்டு பிடிப்புகளைச் செய்த சாதனையும் புதிய நாடுகளை வென்றடக்கி ஆக்கிரமிப்புச் செய்த சம்பவங்களும் மனித வரலாற்றுள அடங்குவனவே.

புலம்பெயர்ந்து நாடோடிகளாக தமது வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்கள் இந்த நூற்றாண்டிலும வாழ்ந்து வருகிறார்கள்.இப்படி ஊர் விட்டு ஊரும் ,நாடு விட்டு நாடும் செல்லும் மக்களை நாடோடிகள் என அழைக்கின்றனர்.” ஒவ்வொரு மனிதனும் தனது வீட்டை விட்டு வெளியேறி சிறிது காலமாவது ஊர் சுற்ற வேண்டும் “என மேதை ராகுல சங்கிருத்தியாயன் கூறினார்.” இப்படிப்பட்ட மக்களே புது அனுபவங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்ப்படுத்த வழி செய்தனர் ” என்பது அவரது ஆணித்தரமான கருத்து.இதற்காகவே அவர் தனது “ஊர் சுற்றிப் புராணம் “என்ற புகழ் பெற்ற நூலை எழுதினார்.

ராகுல சங்கிருத்தியாயனின் குறிப்பிட்ட அறிவார்ந்த கருத்துக்கள் வெளிவர பல நூற்றாண்டுகலுக்கு முன்பே மேற்கு நோக்கி புலம் பெயர்ந்த மக்களான ஜிப்சிகள் பற்றியும் அவர்களது இசைபற்றியும் கூறுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உலகெங்கும் பரந்து பட்டு வாழும் இந்நாடோடி மக்கள் ஐரோப்பாவிலும் ,குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ருமேனியா ,ஹங்கேரி ,செக்கோஸ்லாவாக்கிய போன்ற நாட்களிலும் கணிசமான அளவில் வாழ்ந்து வருகிறார்கள்.ஐரோப்பாவில் வாழும் இனங்களில் மிகப் பெருந்த்தொகையான சிறுபான்மையினமாக இவர்கள் கருதப்படுகின்றனர்.உலகில் பெரும்பாலான நாடுகளில் சிறுபான்மையான உள்ள மக்கள் பலவகையான துன்பங்களுக்கு உள்ளாவது போலவே இவர்களும் அரச ஒடுக்குமுறைக்கும் ,புறக்கணிப்புக்கும் ,இனவெறியர்களின் தாக்குதல்களுக்கும் உள்ளாகி வந்திருக்கிறார்கள்.சமீப காலமாக முன்னாள் சோஷலிச நாடுகளாகிய கிழக்கு இர்போப்பிய நாடுகளில் ஏற்ப்பட்ட அரசியல் மாற்றங்களுக்குப் பின் இவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ருமேனியாவில் சீஜெச்கோ என்னும் போலி கம்யுனிச தலைவரின் ஆட்சியில் ” நாம் பல துன்பங்களை அனுபவித்த போதிலும் சில உரிமைகளை அங்கு தான் பெற்றோம்.இன்று ஜனநாயகம் என்ற பெயரில் மாற்றங்கள் ஏற்ப்பட்ட பின்னர் தான் எம்மின மக்கள் மீது பலவித வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.” என்று 1991 நடைபெற்ற உலக ஜிப்சிகள் மாநாட்டு அறிக்கை உண்மையை வெளிப்படுத்தியது.

நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி வாழாமல் தங்கள் கூடார வண்டிகளையே வதிவிடமாகப் பயன் படுத்தி நாடோடிகளாக வாழ்க்கை நடாத்துவது இவர்களின் கடந்த ஆயிரம் வருடகால மரபாக இருக்கிறது.ஆயினும் இன்றைய சமூக மாற்றங்களை அனுசரித்து நாட்டின் ஏனைய மக்களைப் போலவே நிரந்தரமான வதிவிடங்களில் சிறு தொகையினரான ஜிப்சிகள் இன்று வாழ்ந்து வருகிறார்கள்.பலர் மரபுரீதியான தமது நாடோடி வாழ்க்கையை கைவிடாது நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் நகர்த்தக் கூடிய சிறு வீடு போன்ற மூடு வண்டிகளில் ( caravans ) தமது வாழ்க்கையைத் தொடருகின்றனர்.

ஆடல்,பாடல் போன்ற நுண்கலைகளில் மிகவும் அக்கரையுள்ளவராகத் திகழும் இவர்கள் தமக்கே உரிய இசைக்கலையிலும் சிறந்து விளங்குகின்றனர்.சொத்துக்களைச் சேர்ப்பதிலும் ,ச்மபாதித்து வைப்பபதிலும் அக்கறை காட்டாத இவர்கள் கலைகளைத் தங்கள் உயிராகக் கருதுகின்றனர்.வாழ்க்கைத் தேவைகளுக்காக வேலை செய்யும் இவர்கள் குறி சொல்லுதல் ,சாத்திரம் பார்த்தல் ,மாஜிக் வித்தை செய்தல்,பாத்திரம் ஒட்டுதல் போன்ற வேலைகளிலும் ,இக்காலத்தில் சிறு சிறு வியாபாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.ஆயினும் இவர்களில் பலர் இசையையே தமது ஜீவனோபாய தொழிலாகக் கொண்டு வாழின்றனர்.ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவரேனும் பாடவோ,ஆடவோ,வாத்தியக் கருவிகளில் ஏதேனும் ஒன்றை இசைக்கவோ தெரிந்தவராகவே இருப்பர்.பல வர்ண உடைகள் அணிந்து ஆடுகின்ற போது அவர்களது அங்க அசைவுகளில் நளினங்கள் காட்டியும் ,பாடும் போது இசைக்கு மெருகு சேர்க்கும் கமகங்களை வெளிப்படுத்தியும் தங்களை ஐரோப்பிய மக்களிடமிருந்து மிகத் துல்லியமாக வேறுபடுத்திக் காட்டுவதில் வல்லவர்கள்.இசையில் மிகுந்த ஈடுபாடுடைய இவர்கள் ஐரோப்பிய நாடுகளில் தமக்கென சில மரபுகளை பேணி வந்ததன் மூலம் ” இது ஜிப்சிகள் இசை ” என்று இசை ஆராய்ச்சியாளர்கள் விசேடித்துக் கூறுமளவுக்கு தங்கள் இசையை வளர்த்துக் காத்துள்ளார்கள்.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பரவி வாழும் இவர்களை அந்தந்த நாட்டு மக்கள் வெவ்வேறு விதமாகப் பெயரிட்டு அழைக்கின்றனர்.உதாரணமாக நோர்வே ,ஸ்வீடன், டென்மார்க் போன்ற ஸ்கண்டிநேவிய நாடுகளில் சிக்கொயின ( sigojerne ) என்றும்,ஜெர்மனியில் சிக்கூன (zigorne ) என்றும் ,பிரித்தானியாவில் ஜிப்சீஸ் ( gypsies ) என்றும், இத்தாலியில் ரோம் ( rom ) ,துருக்கியில் சிக்கேனா ( Tzigane ) என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

இப்படி பலவிதமாக அழைக்கப்படும் இம்மக்களின் பூர்வீகம் பல் காலமாக புரியாத புதிராகவே இருந்தது.ஆயினும் வரலாற்று ஆய்வாளர்கள் இவர்களது பூர்வீகம் இந்தியா தான் என தெரிவிக்கின்றனர்.கிட்டத்தட்ட 1000 வருடங்களுக்கு முன்பு இவர்கள் வட மேற்கு இந்தியாவிலிருந்து மேற்கு நோக்கிப் புலம் பெயர்ந்ததாகவும் கூறுகின்றார்கள்.இந்தியாவில் ஏற்ப்பட்ட கடும் பஞ்சமோ ,போரோ இதற்க்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.இப்புலம் பெயர்வு ஈரான் ஊடாக இடம் பெற்று ஒரு பகுதியினர் தெற்கு நோக்கி எகிப்த்திற்க்கும், வேறொரு பகுதியினர் துருக்கி ,ரஷ்யாமற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும்இட்டுச் சென்றதாகக் கருதப்படுகிறது.

இவர்களின் புலம் பெயர்வு பல நாடுகளுக்கு ஊடாக நடைபெற்றிருந்தும் இது குறித்த வரலாற்றுப் பதிவுகள் தெளிவாகக் கிடைக்கவில்லை. .அதிர்ஷ்ட வசமாக ஈரானிலிருந்து கிடைத்துள்ள குறிப்பொன்று இவர்களது பூர்வீகம் பற்றி பிரஸ்தாபிக்கிறது. ஈரானில் வாழ்ந்த மகாகவி பாரோடோவ்ஸ்க்கி
( Ferodowski ) என்பவர் கி.பி.1011 ம் ஆண்டு எழுதிய நூலில் கி.மு. 420 ம் ஆண்டளவில் 10 ,000 லூரி இசைக்கலைஞர்கள் ஈரானுக்குக் கொண்டு வரப்படார்கள் ” எனக் குறிப்பிடுள்ளார்.இக் கலைஞர்களின் சந்ததியினராக இவர்கள் இருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறாக்கள்.எயனும் ஐரோப்பாவில் தலை காட்டும் வரை இவர்கள் பற்றிய குறிப்புகள் தெளிவாக இல்லை என்பதும் வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.

கி.பி.1322 ம் ஆண்டு கிரேக்க நாட்டைச் சேர்ந்த பாதிரியாரான சைமியோன் சைமிஜோனிஸ்( Simeon Simeonis ) எழுதிய குறிப்புகளே ஐரோப்பாவில் கிடைக்கின்ற தொன்மையான ஆதாரமாகக் கணிக்கப்படுகின்றன.புகழ் பெற்ற ஓவியரும் ,விஞ்ஞானியுமான லியோனார்டோ டாவின்சி ( Leonardo davinci ) வரைந்த கோட்டோவியங்களும் ஜிப்சிகளின் உருவ அமைப்பைச் சித்தரிக்கின்ற வரலாற்று ஆவணமாகக் கருதப்படுகின்றன.எனினும் ஈரானிய பாரோடோவ்ஸ்க்கி எழுதிய குறிப்புகளே மிகத் தொன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வரை தங்களது மொழியைப் பேசித் தமது தனித்துவத்தைப் பேணி வரும் ஜிப்சிகள் தமது மொழியை ரோம் ( Rom ) எனப் பொதுவாகக் கூறுகின்றனர்.இந்த மொழிக்கு எழுத்து வடிவம் இல்லாத காரணத்தால் இவர்களது பூர்வீகம் அல்லது தாயகம் தொடர்பான குறிப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்கவில்ல.பேச்சு மொழியாக இது இன்றும் விளங்குவதால் அதனை வைத்து இவர்களது பூர்வீகம் எது என்பதை மொழியியல் வல்லுனர்கர் கணித்திருக்கிறார்கள்.1780 ம் ஆண்டு ஜெர்மன் தத்துவ வாதியான ஹைன்றிச் மோர்றிச் ( Heinrich Moritz ) நடாத்திய ஆய்வுகளிலிருந்து ஜிப்சிகள் பேசும் ரோம் மொழிக்கும் இந்தியாவில் இன்று வழக்கொழிந்து போன சம்ஸ்கிருதத்திர்க்கும் நெருக்கம் உண்டு என்ற முடிவுக்கு வந்தார். அவரது ஆய்வுகளை பிற்கால வரலாற்று அறிஞர்களும் ஒப்புக் கொண்டனர்.

தமது மொழியை ரோம் ( Rom ) எனக் குறிப்படும் இவர்கள் தங்களை ரோமனிஷாள் ( Romanizal )என அழைக்கின்றனர்.ரோமனிஷாள் என்பதின் அர்த்தம் மனிதர்கள் என ஜிப்சிகள் கூறுவர்.மனுஷாள் என்ற சொல் வட மொழியில் மனுஷ் என்பதற்கு இணையானது எனவும் அதன் அர்த்தம் மனிதர் என ஜிப்சிகள் கூறுவர்.இந்தியப் பெயர்களுடன் இவர்களது பெயருக்குமுள்ள நெருக்கமும் ஆதாரமாகக் காட்டக்கூடியவைகளாக உள்ளன.உதாரணமாக சில : மாலா ( Mala ), பிபிஷ் ( pipish ),நனோஷ் (nanosh ), சுர்க்கா ( Zurka ),பூலிகா ( Pulika ),ரஞ்சிக் (Ranjik ).

கி.பி.13 ம் நூற்றாண்டளவில் கிரேக்கத்தில் இவர்கள் குடியேறிய பின் கி.பி.14 ம் நூற்றாண்டளவிலேயே ஏனைய வட ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி ,டென்மார்க், நோர்வே ,ஸ்வீடன் போன்ற நாடுகளிலும் தென்பட்டனர்.ஆரம்ப நாட்களில் நல்ல வரவேற்பைப் பெற்ற இவர்கள் நாளடைவில் வெறுத்து ஒதுக்கப் பட்டனர்.நம்பத் தகுந்த நடவேடிக்கைகளைக் கொண்டவர்களல்ல என்றும் நாட்டை விட்டே துரத்தப்பட வேண்டியவர்கள் எனவும் அன்றைய கிறிஸ்தவ மத பீடம் பிரச்சாரம் செய்தது. அதற்க்குக் அவர்களது கல்வியின்மையும் ,அறியாமையும், பழக்க வழக்கங்களைச் சிறிதும் விட்டுக் கொடுக்காமையும் காரணமாக அமைந்தது.
கி.பி.1400 களின் இறுதியில் இவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் கொடூரமானவையாக நடந்தேறின.ஜிப்சி இன ஆண்கள் படுகொலை செய்யப்படனர்.பெண்கள்,குழந்தைகள் நாட்டைவிட்டே துரத்தியடிக்கப்பட்டனர்.

பலர் பண்ணைமார்களின் பண்ணைகளில் பலவந்தமாக வேலைக்கு அமர்த்தப்பட்டனர். குறி ,சோதிடம் ,வைத்தியம் பார்த்த பெண்கள் மோகினிபேய் ( Witch ) எனப் பழி சுமத்தப்பட்டு எரியும் நெருப்பில் உயிருடன் வீசப்பட்டனர். மத்திய காலத்திலிருந்து 18 ம் நூற்றாண்டின் இறுதிவரையிலும் மோகினிப்பேய் என அழைக்கப்பட்டு அறிவுக்கூர்மை உடைய பெண்கள் உயிருடன் கட்டப்பட்ட நிலையில் நெருப்பில் கொழுத்தப்பட்டனர். இந்தக் கொடுமைகளை முன் நின்று நடாத்தியவர்கள் அன்றைய கிறிஸ்தவ மதபீடத்தினரே என்பது ஐரோப்பாவின் இருண்ட வரலாறு.இப்படிபட்ட சூழ்நிலையில் ஐரோப்பிய பெண்களே கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்றால் ஜிப்சிகள் பற்றி கூறத்தேவையில்லை.

ஜிப்சிகள் மீதான வன்முறையின் உச்சமாக அடோல்ப் ஹிட்லரின் ( Adolf Hitler ) வருகை அமைந்தது.ஹிட்லரின் நாஜிக்கட்சியின் உத்தியோகபூர்வமான இனவாதக் கொள்கைகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டன.ஹிட்லரின் தூய ஜெர்மன் ஆரிய இனக் கொள்,அந்த இனத்தை ஏனைய தூய்மையற்ற இனங்களிலிருந்து காக்க மற்ற இனங்களை அழித்தொழிக்கும் நடவெடிக்கைகளும் செயற்ப்படுதப்பட்டன.இந்த அடிப்படையில் யூதர்கள்,ஜிப்சிகள் பலவிதமான சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பபட்டனர்.பெண்கள் ,குழந்தைகள் தனியாகவும் ஆண்கள் தனியாகவும் பிரிக்கப்பட்டு அடைக்கப்பட்டனர்.வேலை செய்யும் வலிமை வாய்ந்த ஆண்கள் ,பெண்கள் தவிர்ந்த ஏனையோர்கள் விஷ வாயு பொருத்தப்பட்ட அறைகளில் அடைத்து படுகொலை செய்யப்பட்டனர்.இவ்விதம் படுகொலை செய்யும் தனது திட்டத்தை ஹிட்லர் சிறுபான்மை இனம் மீதான ” இறுதித் தீர்வு ” ( Final Solution) என கௌரவமாக அழைத்தான்.

நாசி ஆதரவாளர்கள் அதனை தலையில் வைத்துக் கொண்டாடினர்.ஹிட்லரின் இந்த “இறுதித்தீர்வு ” 5 மில்லியன் யூதர்களையும் , 5லட்சம் ஜிப்சிகளையும் பலி கொண்டது.

இன்னும்வரும்..

32 thoughts on “நாடோடிகளின் இனிய இசை(1) : T .சௌந்தர்”

 1. தம்மை இழந்து போன ரோமாக்கள் போல தம்மை இழந்து போன சைவத்தமிழரில் அனேகமானோர் இஸ்லாமியர் ஆனால் தம்மை தொடர்ந்தும் சோனகராக்கி அதில் பெருமையடைகிறார்கள்.எதிர்காலத்தில் புலம் பெயர்ந்த தமிழரை நினைத்துப் பாருங்கள்?பரதேசியாகிப் போன இனம் தன்னை அரைவாசி ஆங்கிலம் அரைவாசி தமிழ் என பொய் சொல்லத் தொடங்கி உள்ளது, போலி அடையாளங்களீல் தன்னை சிதைத்து, போலிக் கெளரவங்களால் தன்னை அழித்துக் கொண்டிருக்கிறது.கள்ள மட்டைக்காரர் பேரைச் சுமப்பது மட்டுமல்ல, வன்முறக் கலாச்சாரத்தையும் வைத்திருக்கும் நம் இனம் எதிர்காலச் சவால்களூக்காக தன்னைத் தயார் படுத்தவில்லை என்றால் நாமக்கும் ரோமாக்கள் நிலமை ஏற்படலாம்.

  1. உங்கள் கருத்துக்கு எனது பாராட்டுக்கள் தமிழ்மாறன்.

   1. தங்கள் அன்பிற்கு நன்றீ.ஆகாயத்தில் இருந்து யாரும் குதித்து வரவில்லை தம்மை மாற்றீக் கொண்ட தமிழர் தமது மதத்திற்கு விசுவாசமாக கதை விடுகிறார்கள்.வேதத்தில் நாம் பார்க்கும் தேவர்கள் மாதிரி தம்மை தமிழரில்லை எனும் தமிழரை நினைத்தி இவர்கள் எத்தனை காலம் ஏமாற்றூவார் எனும் பரிதாபமே ஏற்படுகிறது.இந்த ரோமாக்கள போலந்தோ,ரோமானியாவோ தமது நாட்டுக் குடிகளாக ஏற்றூக் கொள்ளவே மறூக்கிறது நாடக மாடும் தமிழரை நினைத்துப் பாருங்கள்?

    1. தமிழர்கள், உங்கள் மொழியில் சைவத் தமிழர்கள் [அதென்னவோ} தங்கள் கையில் ஆங்கிலத்தையும் , ஐ டி தொழில்நுடபத்தையும் வைதிருக்கும் வரை பல்நாடுகளும் அவர்களுக்கு அடைக்களம் கொடுக்கும். தமது குடி மக்களாகக் கூட எற்றுக் கொள்ளும் ஆனால் புலம் பெயர முடியாத முள்வேலித் தமிழனனின்நிலை என்ன? கொஞச்ம் சிந்தியுங்களேன்

     1. தமிழர்கள் சைவர்களாக இருந்தவர்கள பின்னர் முஸ்லீமாகவும்,கிறீஸ்தவராகவும் மாறீ கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.முள்வேலிகள் ஆடு,மாடு போகாமல் என அரசியல்வாதிகள் சொல்கிறார் அதில் ஒரு உண்மையும் உண்டு ஆமி ஓநாய்கள்.கே.பி மரம் நடுகிறார் இப்படியேவா இருந்து விடப் போகிறது எல்லாம்.மகிந்த நல்ல மனுசன் போலவே தெரிகிறது,ஓபாமாவும் வந்து விட்டு போயிருக்கிறார்.காலம் மாறூம் நம் கவலைகள் எல்லாம் தீரும்.

 2. உலகில் வாழும் மக்களில் பெரும்பான்மையானவகள் கலப்பின மக்களே.கலப்பின மக்கள் அழகானவர்கலாகவும் இருப்பதை நாம் காணலாம். இனவாதம் என்பது அறியாமையே.(இதில்சாதியை சேர்த்தால் நமது விஞ்ஞானிகள் ஒத்துகொள்ளுவார்களா என்பது வேறு விடயம்.)
  வெள்ளை இனத் தூய்மை பேசிய ஹிட்லர் வட ஆபிரிக்காவில் இருந்து யேர்மனியில் குடியேறிய வம்சாவழி இனத்தவர் என்பதை சமீபத்திய D .N . A ஆய்வுகள் நிரூபித்துள்ளன.அவரது சித்தி ,மற்றும் ஹிட்லரின் 39 உறவினர்களின் எச்சிலிருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏக்களை பரிசோதனை செய்ததில் அவர்கள் யூத இனத்தோடும், வடக்கு ஆப்பிரிக்காவின் மொராக்கோ பகுதியைச் சேர்ந்த பெர்பர்ஸ் இனத்தினரோடும் உயிரியல்ரீதியில் தொடர்புள்ளவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

  தமிழ்மாறன் கருத்துக்களில் தெளிவு தெரிகிறது.

 3. உலகில் வாழும் மக்களில் பெரும்பான்மையானவகள் கலப்பின மக்களே.கலப்பின மக்கள் அழகானவர்கலாகவும் இருப்பதை நாம் காணலாம். இனவாதம் என்பது அறியாமையே.(இதில்சாதியை சேர்த்தால் நமது விஞ்ஞானிகள் ஒத்துகொள்ளுவார்களா என்பது வேறு விடயம்.)
  வெள்ளை இனத் தூய்மை பேசிய ஹிட்லர் வட ஆபிரிக்காவில் இருந்து யேர்மனியில் குடியேறிய வம்சாவழி இனத்தவர் என்பதை சமீபத்திய D .N . A ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

  ஹிட்லரின் 39 உறவினர்களின் எச்சிலிருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏக்களை பரிசோதனை செய்ததில் அவர்கள் யூத இனத்தோடும், வடக்கு ஆப்பிரிக்காவின் மொராக்கோ பகுதியைச் சேர்ந்த பெர்பர்ஸ் இனத்தினரோடும் உயிரியல்ரீதியில் தொடர்புள்ளவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

  தமிழ்மாறன் கருத்துக்களில் தெளிவு தெரிகிறது.

  1. ஆதிகாலத்தில் நிற்பதால்தான் செளந்தர் தமிழர் வந்தாரை வாழ்வித்துக் கொண்டிருக்கிறார்கள்? இனம் மீது பற்றூ வையுங்கள் என்றால் இனவெறீ என்பதும் சைவமே வாழ்க்கை முற என்றால் மத வெறீ என்றூம் நடுநிலமை பேசி நாசமாகிறதே எனது தமிழ் இனம்.என்ன செய்வேன் நான் தமிழன் தன்னை தமிழனாய்ச் சிந்திக்காமல் திராவிடனாகி தன் மண்ணீல் தமிழனல்லாதவனுக்கு தொண்டு செய்கிறான், தனது தமிழ் இசையான கர்நாடக இசையை தெலுங்கில் கேட்டுக் கொண்டிருக்கிறான்.கோயில்களீல் சமஸ்கிருதம் கேட்டு தலையை,தலையை ஆட்டுகிறான்.புலம் பெயர்ந்த தமிழன் தான் ஆபிரிக்கன் என் ஆராய்ந்து கொண்டிருக்கிறான்.என்ன செய்வேன் நான்?யாரைநோவேன்?

 4. இன்று புலம் பெயர்ந்த தமிஅர்கள் உலகம் முழுவதும் பரவி ஒரள்வுக்கு அந்தநாடுகளில் ஒப்புக் கொள்ளப்படுவட்கற்கு காரணம் அவர்கள் அறிவியல் முறயில் சிறந்து விலண்க்குவது தான் ஆலது உடல் உழைப்புக்கு அஞ்சாமல் இருப்பதுதான் . இதை அப்படியே வளர்த்து கொள்ள வேண்டும் தைழை மற்ற்க்க வேண்டும் என்பதல்ல அதை அறிவியல் படுத்த வேண்டும் ப்ழமையை களைய வேண்டும் இன்னும் கருநாடக இசைதிர்ரவிஅடன் தமிழன் என்று குண்டு சட்டிக்க்குள் குதிரை ஒட்டி மகிழக் கூடது. இதே இனப் பற்றுடன் நீங்கள் குடியேறியநாட்டு மக்கள் இருந்த்தால் நீங்கள் அங்கு நிம்மதியாக் வாழமுடியுமா? சென்ரதினிது மீளாது என்ற பாரதி வார்த்தையை மனதில் வையுங்கள்
  கொன்றோழிக்கும் கவலையை விடுங்கள்

 5. பயன் தருகின்ற ஆய்வு. தினமும் நடைபாதையில் ஐரோப்பிய,வீதிகளில் நாங்கள் சந்திக்கின்ற மனிதர்களின் கதை. கள்வர்கள்,குருவித்தலைக்காரர்,பிச்சைக்காரர் என்றெல்லாம் எம்மால் வர்ணிக்கப்பட்ட அவர்கள் ஒருபோதும் எம்மால் கௌரவமக எண்ணப்பட்டவர்களல்ல. அந்தக்குற்ற உணர்வினை இக்கட்டுரை எமக்கு வழங்கியிருக்கிறது.உண்மையில் இவர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்களா என்பது இன்னமும் ஆய்விற்குரியதே.”வால்காவிலிருந்து கங்கைவரை” மானிடம் எப்படி உயிர்த்தது என்பதனை அற்புத்மாகத் தந்த ராகுல சங்கிருத்தியாயனின் ஆய்வுகள் அற்புதமானவை.தாடி வளர்த்த அந்தச் சர்தாரியின் சிந்தனைகள் மகத்தானவை.
  உலகத்தில் தூய இனம் என்று எதுவுமேயில்லை என்கின்ற வாதம் அடிப்படையில் சரியாயினும் நடைமுறையில் அதைச்சொன்னால் ஏற்றுக்கொள்பவர்கள் எத்தனை பேர்?????. இனத்தின்பெயராலும், மொழியின் பெயராலும்,மதத்தின் பெயராலும் எத்தனை சாம்ராட்சியங்கள் சிதறுண்டு போயின. தன் இனம் மொழி கலாச்சாரம் பேணுவதில் ஜிப்சிகளும் கூடச் சளைத்தவர்களல்ல.இனம் மொழி மதம் கலாச்சாரம் எதையுமே பெரிதென்றெண்ணாத ஒரு சமூகம் என்பது உண்மையில் மிக அற்புதமானது தான். ஆனால் கருப்பும்,வெள்ளையுமாய் மலினப்பபட்ட கருத்துகளுக்குள் உலகை அடைத்து வைத்துப்பார்க்கின்ற எமக்கு அந்தக் கனவு நனவாகுமா???????

 6. மறுபடியும் பின்னூட்டங்கள் எங்கெங்கோ போகத் தலைபடுகின்றன.
  நாடோடிகள் தமது இடையறத இடப் பெயர்வுகளின் மூலம் பண்பாட்டுக் கலப்பிற்கும் அதன் மூலம் பண்பாட்டுச் செழுமைக்கும் எவ்வாறு பங்களித்தனர் என்பதை ஆசிரியர் இனி விளக்குவார் என எதிர்வருங் கட்டுரைகளில் எதிர்பார்க்கிறேன்.

 7. முதலில் லெமூரியா மட்டும் தான்உலகம். அது கடற்கோளான போது கண்டங்களாகின்றன. மனிதன் பிளவாகின்றான்.அதனால் எல்லோரின் d.n.a. யும் லெமூரியா என்றே காட்டும். கிட்லரும்,பிரபாகரனும், மகிந்தவும், எல்லோரின் D .N . A ஆய்வுகளும் ஒன்றில்தான் மூலம். உண்மையில் ஜிப்சிகள் என்றொரு இனம் இந்தியாவில் இருந்து வந்தது என்பது அப்பட்டமான தவறு. அந்தந்த நாடுகளில் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படாமல் இருக்கிற மனிதரே ஜிப்சிகள். துருக்கி ஜிப்சிகள் குர்டிஸ் ஜிப்சிகள்,அல்பானிய ஜிப்சிகள்,ஜெர்மானிய ஜிப்சிகள் இவர்கள் எல்லாம் சட்டதிட்டத்தீற்கு கட்டுப்படாமல் அலைபவர்கள். எம் நாட்டுக்குறவர்களைபோல….ஜிப்சிகளின் மூதாதையர்தான் குறவர்என்று சௌந்தர் சொல்லிவைக்க மறந்து விட்டார்.ஈரானியக் குறிப்பில் இவர்கள் இந்திய ஆட்கள் தான் என்று எங்கே குறிப்பிடுகிறது.

  1. நல்ல வேளை தமிழில் எளுதியுள்ளீகள். இல்லையென்றால் சிந்தி ரோமா மக்கள் சங்கம் உங்கள்மேல் வழக்குப் போட்டு இருப்பார்கள். 
   “அந்தந்த நாடுகளில் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படாமல் இருக்கிற மனிதரே ஜிப்சிகள். இவர்கள் எல்லாம் சட்டதிட்டதிற்கு கட்டுப்படாமல் அலைபவர்கள்.”  இது ஒருவிதத்தில் அவர்கள்பற்றிய காற்புணர்ச்சி. ஜெர்மன் நாசிகளால் யூதருக்கு அடுத்ததாக மிகமோசமாக அழிக்கப்பட்ட இனம் இவர்கள். அவர்கள் ஒருநாட்டில் வாழ்பவர்கலென்றால் அல்லோ அந்த அந்த நாட்டின் சட்டங்களுக்கு அமைந்து வாழமுடியும்.  
   முன்புபோல் அல்லாமல் இவர்களில் பலர் கூடுதலாக அந்தந்த நாடுகளில் சட்டத்தை மதித்துத்தான் வாழ்கிறார்கள். ஒருசிலர் குற்றம் செய்வதால் முழு இனத்தையுமே இழிவு படுத்தக்கூடாது. 
   ஜிப்சிகள் என்றொரு இனம் இந்தியாவில் இருந்து வந்தது என்பது அப்பட்டமான தவறு என்று நீங்களா சொல்கிறீர்கள்? இதற்கு ஏதாவது ஆதாரம் முன்வைக்க முடியுமா?

 8. ஜெயபாலன்:
  “முதலில் லெமூரியா மட்டும் தானுலகம். அது கடற்கோளான போது கண்டங்களாகின்றன.”
  இதற்கான ஆதாரங்களைச் சொல்லுங்கள்.

 9. இந்தியாவிலிருந்து தோன்றினர் என்ற கருத்துக்கு ஆதாரங்கள் பல கூறப்பட்டுள்ளன. உங்கள் நிலைப்பாட்டுக்கான சான்றுகளைக் கூறின் ஒப்பிட்டு உண்மையை உய்த்தறிய இயலும்.
  A few spotted at random:
  “These were the Gypsies, and they did not really come from Egypt as their name suggests. They probably came from the Indus River valley and were first heard of in Persia in about 900. They entered Europe in the 14th century and since then have spread throughout the world. Real Gypsies are Romany, a distinct Oriental people. They have their own language (the word “Dad” was originally from Romany), their own customs, and even their own laws.” — http://www.associatedcontent.com/article/2044813/history_and_origins_of_the_gypsies.html

  “Deep in the heart of India around 400 AD, work wasn’t as plentiful as it once was in the small villages. This dilemma forced a handful of Indians to become traveling craftsmen and entertainers. They moved along the countryside entertaining villagers at night and using their skills with wood and/or metal during the day. This subtle start to the nomadic life worked well from this point forward. The handful of wandering people grew in numbers as others embraced the nomadic lifestyle, yet they were still able to stay below the Persian radar until 440 – 443. This is when, rumor has it, the great Persian Shah Bahram Gur persuaded ever so forcefully that the Indian King Shangul should send him 10,000 Luri musicians so that they can run around Persia entertaining the hard-working people. The name Luri is used as opposed to Roma or Gypsy because before the 10th Century, gypsies did not exist by the name of Gypsy or Roma. They were known by various names tribal names including Zott, Jat, Luri, Nuri, Dom, Sinti, Domarai and Athengani.

  Around 820, long after the Luri entertained the countryside of Persia, the Zott arrived and set up state on the banks of the Tigris River. The Zott enjoyed life there until the Byzantines attacked Syria in 855. After the war, the Byzantines took huge numbers of Zotts as prisoners. Partly because of they were known for their excellent craftsmanship with wood, metal and construction, the Zotts were used as slave labor to shore up and expand upon the empire. In addition to manual labor, their entertainment skills were also of high value as well as their gift of foretelling the future. — http://www.gypsyadvice.com/gypsy_lore.htm

  1. செயபாலன் சொன்னதில் பாதி உண்மை உலகில் உள்ள மாந்தர்கள் டி என் ஏ 99.5 விழுக்காடு ஒரே தன்மையத்தான் கொண்டுள்ளது . 0.5 விழுக்கடு தான் வேறுபாடு ஆனால் மரபணுக்கலின் எண்ணீக்காய் பல கோடி என்பதால் 0,5 % வேறுபடும் ஒப்பீட்டு அள்வில் பெரியாதாகிறது அதை விடும் லெமுரியாக் கண்டம் , குமரிககண்டம் என்பதெல்லாம் அறிவியியல் எற்றுக் கொண்ட உண்மைகள் அல்ல. செய பாலன் குட்டிக்கரணம் போட்டாலும் அதற்கு அறிவியல் சன்றுகள் தர இயலாது

 10. ஜெயபாலன்
  ஈரானிய மகாகவி என்று போற்றப்படும் பெரோடேசி என்பர் குறிப்புக்கள் தான் கிப்சிகள் பற்றிய குறிப்புக்களில் ஆதியானது என்றே எழுதயுள்ளேன்.ஜிப்சிகள் இந்தியர்கள் என்று அவர் குறித்ததாக நான் எழுதவில்லை.
  அவர் எழுதிய குறிப்புக்களை நீங்கள் வாசித்திருந்தால் நமக்கும் விளக்குங்கள்.பயனடைவோம்.

 11. ஜிப்ஸிகள் என்ப்படும் நாடோடிகும்பல் பற்றி நல்லதொரு கட்டுரையை திரு சவு ந்தர் எழுதியுள்ளர் அதைப் பற்றி மேலும் சில கருத்துகள்
  1 அவர் ஒரு காதல் வயப்பட்ட நோக்கில் எழுதியுள்ளார் ரொமண்டிக் என்று ஆங்க்கில வார்த்தைக்கு நிகரானது இந்த் வார்த்தை. நேர்மையான ஆய்வு இல்லை என்று நான் நினைக்கிறேன்
  1 ஜிப்ஸிகள் ஒரு ஒட்டுண்ணி கூட்டமாகும் பரசிடிக் அவர்கள் ஒரு நிலயான குமுகயாத்தை அண்டியே வாழ இயலும் அவர்கள் மக்கள் வாழ்க்கைக்கு என்று, மனிதகுல முன்னேற்றத்திற்கு என்று அளித்த கொடை யாது? என்று கேட்டல் பதில் அளிப்பது கடினம் ஒரு தத்துவதை, கலையை அளிப்பதற்கு முதல் தேவை நிலையானா வசிக்ககும் இடம் . அடிப்படைதேவைகளை நிறைவு செய்துகொள்ளுவத்ற்கு யாரையும் சாராதிருத்தல் இவை இர்ண்டும் அவர்களிடம் இல்லை எனவே அவ்ர்களால் மனித குல வளர்ச்சிக்கு என்றுஎதுவும் ஈக முடியவில்லை .
  2 உலக அமைப்பில் எப்பொழுதெல்லாம் அமைதி இன்றிக் காணப்பட்டதோ அப்பொது எல்லாம் அவர்கள் துன்புறுத்தப் பட்டிருக்கின்றனர் உடலுக்கு தீங்க்கு நெரும் போது அதில் வசிக்கும் ஒட்டுண்ணிகள் பாதிகப் படுவது முதலில் நடக்கும் .இட்லர் ஜிப்ஸிகளை பெருமளவில் கொன்று குவித்தத்ற்கு இது ஒரு காரணமாகும் அவர்கள் சிற்ந்த்த போர்வீரர்கள் நிறைந்த்த குழுவாக இருப்பின் [ கசாகியர் போல் ] அவர்களபோரில் இற்க்கிவிடப்படிருப்பர்கள் .
  இட்லர் மட்டும் அல்ல அதற்குப் பின்னர் வந்த பொதுவுடமை கட்சிக்களின் ஆட்சியின் போதும் அவர்கள் துன்புறுத்தப் பட்டனர் கொல்லப் படவில்லை ஆனால் அவர்கள் இனப் பெரூக்கத்திற்கு கட்டுப் பாடு விதிக்கப் பட்டது .
  3 அ வ்ர்கள் இந்தியாவிலிரு ந்து புலம் பெயர் ந்திருக்ககூடும் என்பது பெரூம்பன்மை வ்ரலற்று ஆய்வளர்களின் கருத்து ஆகும் . அத்ற்கான சான்றுகள் 2 வகைப் படும் 1 மரபணு ஆய்வுகள் –இவற்றை நம்புவ்து சற்று சிக்க்கலான செய்தி.
  2 மொழியியல் ஆய்வுகள் . ஜிப்ஸிகள் மொழியை ஏதாவது ஒரு மொழியுடன் ஒப்பியட் முடியும் என்றால் அது வடமொழி என்று அழைக்கப் படும் சமஸ்கிருதம்தான் . பிற்கால வடமொழி வார்த்தைகள் பெயர்ச்சசொற்கலள் அதில் மிகுதி மன்ஸ்ய என்ற விகுதி பெரும்பாலன ஜிப்ஸிகள் பெயர்களில் காணபடு கின்றன் என்பது ஆய்வாளர்களின் கருத்து ஆகும் என்வே அவர்கள் இந்தியாவிலிரு ந்தே குறிப்பாக் ராசஸ்தான் மானிலத்தில் இரு ந்து 11 நூற்றண்டு வாக்கில் புலம் பெய்ர்ந்திருக்கலாம் என்பது ஒரு கருத்து. அதற்கு காரணம் ஆப்கானிஸ்தனிலிரு ந்த் முகப்பதியர் படை யெடுப்பே . அப்போரில் தோல்வி அடைந்த வீரர்கள் கைதிகள் ஆஃப்கான் வழியாக ஈரான் சென்று இரண்ட்டாகப் பிரி ந்து எகிப்து நோக்கி ஒருபிரிவும் அய்ரொப்ப நோக்கி ஒரு பிரிவும் சென்றது அவர்கள் பின்னர் அய்ரொப்பிய மக்களுடன் கல்ந்து [ஒரு வரையரைக்குள் ] பெருகி விட்டனர் குறிப்பகாக் அவர்கள் இ ந்தியாவில் இன்று கணப்படும் ஜாட் இனத்தை சேர்ந்த்வர்களாய் இருக்க்லாம் என்று கருதப் டு கிறது, ஜிப்ஸி இறுக்கமான சாதி அமைப்பு முறயைக நோக்கீன் இது உண்மை என்றே தொன்று கிறது
  4 மார்க்சிய நோக்கில் இத்தகைய விளிம்பு நிலை மனிதர்கள் [ விலை மாதர்கள், ஓரினசேர்க்கை யாளர்கள் , ஹிப்பிகள்]இவர்கள் கலக் க் காரர்கள் என்று கருதப் படு கிறார்கள் புரட்சியார்கள் என்று கருதப் பட முடியாது சமுக வளர்ச்சிக்கு இவர்கள் ப்ங்க்களிப்பு மிக்க குறைவு ஆனால் இவர்கள் எந்த சமூகத்தில் வசித்தாலும் அதற்கு எதிராகவோ அல்லது புறம்பாகவோதான் இருப்பார்கள் அது பொதுவுடமை சமூகமாக இருந்தாலும் கூட.
  தமிழ் நட்டில் வசிக்க்கு நரிக் குறவர்கள் பற்றி ; அவர்க்ளை ஜிப்ஸிகள் அமைப்புடன் ஒப்பிடுவது சரியன்று இன்று எங்கும் அவர்கள் கோவணத்துடனோ அல்லது தகர் டப்பிகளுடனோ காணப்படுவதில்லை[[நாகரீகம் அண்டாத நாட்டுப்புற்ங்களில் காணப்படலாம் ] அரசு அவர்களுக்கு தங்கு வதற்கு நிலையான் வீடுகளை அமைத்து கொடுததிருக்கிறது அதில் பெரும்பாலோர் வசிக்கின்ற்னர். நல் ல கல்வி ,உடை பெற்றிருகின்ற்னர் . இத்தைகய அமைப்பை ஜிப்ஸிகளுக்கு கொடுத்தால் அவர்கள் மறக்கூடும் . அல்லதுஅதை நிராகரிது நடோடிக்ளாக வழவே விரும்பக் கூடும்
  வெளியில் சுதந்திரர் போலத் தோன்றும் அக் கூட்டம் உண்மமையில் மிகுந்த கட்டுப்பாடுகள் நிறைந்த்தது ஆணாதிக்கம் மிக்கது . கற்பு ப்ற்றி நிறையவே கவலைப் படுகிறவர்கள் ஒரு இறுக்கமான சாதி அமைப்பாக அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்
  நாடோடி வாழ்க்கையில் பெருமை இல்லை

  1. தூஆரெக், பெடுயீன், மொங்கோல் போன்ற பல இன மக்கள் தமது நாடோடி வாழ்க்கையில் மிகவும் பெருமையாகதான் வாழ்கிறார்கள்.  

   1. அது எப்படி உங்களுக்கு தெரியும்?நகரத்து வாழ்க்கையைவிட் நாட்டுபுற வழ்க்கையை மிகவும் சிலாகிப்ப்வர்கள் மேர்குநாட்டில் வாழும்குடிகளாயிருப்பர்.நிலய்யன இடமும் உண்ண உணவு உறுதிசெய்யபடாதநிலையும் பெருமைக் குறியது என்றால்நீங்கள் அகதி முகாம்களில் தங்கிய்ருக்கலாமே? புலம் பெயர தேவை என்ன?

    1. அகதி முகாம் வாழ்க்கையை நீங்கள் இன்னமும் உருசிக்கவில்லையா?நாடோடிகளின் வாழ்கை முறையை அகதிகளுடன் ஒப்பிடும் உங்கள் விரவிய அறிவுத்திறனையிட்டு எனக்கு மேலும் வார்த்தைகள் வரமறுக்கின்றன.

     1. அகதிகள் வழகையையும் உறுதிசெய்ய்படாதத விடயங்க்கள் உண்டு நாடொடி வாழகையிலும் அது உண்டு ஒற்றுமை அதில் மட்டும் தான் தனக்கென்று ஒரு நிலயான வாழக்கை முறையை அமைததுக் கொண்டவர்கள் அவ்வறு அமைதுக் கொள்ளவிரும்பாதவர்களைக் கண்டு காதல்வயப் படுவது போன்ற நிலையில் இக்கட்டுரை எழுதப் பட்டிருக்கிறது இதை சிலாகிக்கிற யாராவது அத்தகைய வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாயிருக்கிறிற்களா? நிலயான் வழவிடம் தேடிதானே புலம் பெயர்ந்தீர்கள் பிறகு நாடோடி வாழவை சிலாகிப்பாணேன் யூதர்களுக்கும் நாடூடிகளுக்கும் மிக்க வேறுபாடு உண்டு நிலயானவாழ்வை நட்டொடிகள் விரும்பியுருந்தால் ஆப்ப்ரிக்க பக்கம் போயிருக்கலாமே அய்ரொப்பவை ஏன் நாட வேண்டும் அங்குதான் மனித உரிமைகள் அதிகம்.நட்டொடிகள் நிலையான வாழ்வு கிடைத்தும் வாழ மறுப்பவர்கள். சமூகப் பொறுப்பின்றி வெரும் சர்க்கஸ் காட்டியேவாழ நினப்பவர்கள். சர்க்கசை கண்டு ரசிக்கலம் அதிலேயே சமுகம் முழுவது வாழ்ந்துவிடமுடியாது.

   2. சூர்யா
    சவுந்தருக்கான எனது எச்சரிக்கை உங்களுக்கும் செல்லும்.

    1980 அளவில் விதண்டாவாதங்களை முடிவுக்குக் கொண்டுவர யாழ்ப்பாண வளாக மாணவர்கள் பயன்படுத்திய ஒரு வாசகம்: “நீ சொன்னால் காவியம்!”

    அது இங்கும் பயன்படலாம்.

    1. ஜயோ, நீங்க சொன்னீங்க, நான் கேட்டேனா? நாயைப்பிடி, ஆளை விடு!

 12. என்னே மனிதாபிமானம்!!!
  எந்தரோ மஹானுபாவலு அந்தரிகி வந்தனமு.
  யூதர்களைப் பற்றியும் இவ்வாறான கருணை மொழிகளை ஐரோப்பாவில் மானுடம் கஏட்டுள்ளது.

  சவுந்தர் ஒரு எச்சரிக்கை:
  தயவு செய்து இந்த விழல் விவாதத்தில் தலையை நீட்டாதீர்கள். பிறகு இசை கிடையாது, எல்லாமே வசையாகிவிடும்.

 13. வசையும் இல்லை ஒன்றும் இல்லை நாடொடிகள் அளித்த கொடைகள் பற்றி xxx விளக்கலாமே?
  மனிதாபினம் இல்லத பகுதியை சுட்டிக் காட்டினால் நல்லது. அவர்களது இயல்பை சுட்டிக்காட்டீயுள்ளேனவர்கள் மீது தீர்ப்பு எதையும் சொல்லவில்லையே?

  1. உங்களுக்குகாக விளக்கம் எழுதுவது என் தொழிலல்ல!
   உண்மையாகவே அறிய வேண்டின், இணையத்தளங்களில் தேடுங்கள்.
   நூல்களிலும் தேடலாம்.

   சவுந்தருக்கான எச்சரிக்கை எனக்கும் தான்.

 14. மனிதன் வாழ்வை மனிதன் பறிக்கும் இழிந்த நிலை.
  தமிழரை பற்றி வெள்ளைக்காரனும் ” நம்பமுடியாதவர்கள்,ஒழுக்கக் கேடானவர்கள் ,ஏமாற்றுக் காரர்கள் “என்று எழுதியதை ( எங்கோ) படித்த ஞாபகம். இப்படி யூதர்கள் பற்றியும், ஜிப்சிகள் பற்றியும் அவநம்பிக்கையான வசை பாடல்கள் விரவிக்க் கிடக்கின்றன.உங்கள் கட்டுரைகள் மூலம் பறிகொடுத்தவன் ,இழந்தவன் பக்கம் நிற்கும் உங்கள் உளப்பாங்கை அறியமுடிகிறது.வம்புக்கு இழுக்கிற அதிகபிரசங்கிதனமான விவாதங்களை புறம் தள்ளுங்கள்.
  அருமையான தகவல்களை இங்கே அள்ளி வீசியிருக்கிறீர்கள்.பரடோசி பற்றி அறிய நெற்றில் தேடினேன்.அதன் உச்சரிப்பை ஆங்கிலத்தில் அதை தந்தால் நாமும் அறியலாம்.
  சௌந்தர் தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள்.

 15. செல்வன்

  Ferdowsi என்று எழுதவும்.

 16. சௌந்தர்
  அடுத்த பகுதி எப்போ?

 17. தமிழர்கள் அகதிகளாய் அலைவது மிகவும் வேதனையை தருகிறது.

Comments are closed.