நாடு முழுவதும் நிலத்திற்கான போராட்டம் தீவிர மடையட்டும்!:எஸ்.ராமச்சந்திரன்பிள்ளை

நாடு முழுவதும் நிலத்திற்கான போராட்டம் தீவிரமடையட்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.ராமச்சந்திரன்பிள்ளை அழைப்புவிடுத்தார்.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 32ஆவது தேசிய மாநாடு, ஆந்திர மாநிலம் குண்டூரில், ஹர்கி சன்சிங் சுர்ஜித் நகரில் வியாழன் அன்று தொடங்கியது.

மாநாட்டிற்கு தலைமை யேற்று உரையாற்றிய எஸ். ராமச்சந்திரன்பிள்ளை கூறிய தாவது:

இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள், விவசாயிகளை ஏற்றுமதிக் காகவும், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக் காகவும் விவசாய உற்பத் தியைச் செய்திடுமாறு நிர்ப்பந்தித்துக் கொண்டிருக்கின்றன. உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நிதியம், உலக வங்கி மற்றும் சுதந்திர வர்த் தக ஒப்பந்தங்கள் (குசநந கூசயனந ஹபசநநஅநவேள) ஆகியவை விவ சாயிகளை நவீன தாராள மயப் பொருளாதாரக் கொள்கைகளின் படி உற் பத்தியைச் செய்திடுமாறு கட்டாயப்படுத்துகின்றன. இவ்வாறு நவீன தாராள மயப் பொருளாதாரக் கொள்கையானது விவசாயி கள் சார்பான விவசாயத் தை, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் சார்பான விவசாயமாக மாற்றி யிருக் கிறது. இதன் விளைவாக கடந்த பத்தாண்டுகளில் பல நாடுகளில் ஏழை, எளிய விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேற்றப்பட்டு, அந்த நிலங்களை பன் னாட்டு நிறுவனங்கள் ஆக் கிரமித்துக் கொண்டுள்ளன. உணவு உற்பத்தியையும், விவசாய உற்பத்தியையும், விதைகள் உற்பத்தி முதல் பல்வேறு விதமான விவசா யம் சார்ந்த பொருள்களின் உற்பத்தியையும் தங்கள் கட் டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன.

உலகம் இன்று நிதி, பரு வநிலை மாற்றம், எரிசக்தி, உணவு முதலிய பல்வேறு நெருக்கடிகளில் சிக்கிக் கொண்டுள்ளது.

இந்நெருக்கடிகளிலிருந்து உலகம் மீள வேண்டுமானால், அது, தான் பின்பற் றும் நவீன தாராளமயக் கொள்கைகளைக் கைவிட்டாக வேண்டும்.

இப்போது ஏற்பட்டுள்ள உலகப் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு, நாட்டில் உள்ள மக்களின் வாங்கும் சக்தியை அதிகப் படுத்தி, உற்பத்திப் பொருள் களை அவர்கள் மூலம் வாங்க வைப்பதன் மூலமே சாத்தியமாகும். ஆனால் அதனைத் செய்திட முதலாளித்துவ வளர்ச்சியடைந்த நாடுகள் மறுக்கின்றன.

உழவர் பெருமக்கள் தாங்கள் உற்பத்தி செய்த உணவுப் பொருட்களை அவர்களால் உண்ண முடிய வில்லை. உலகில் சுமார் 84 கோடி மக்கள் பட்டினிக் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஐந்து வயதுக்குக் குறைவான 6 0 லட்சம் குழந்தைகள் ஊட்டச் சத்து உணவு இல்லாமை யால் ஒவ்வோராண்டும் மடிந்து கொண்டிருக்கின்றன. உலகில் பட்டினியா லும் ஊட்டச்சத்தின்மையா லும் மடிந்து கொண்டிருப்பவர்களில் 50 சதவீதத் தினர் சிறுகுறு விவசாயிகள், 22 சதவீதத்தினர் நிலமற்ற கிராமப்புற ஏழைமக்கள்.

இதன் காரணம் என்ன? நிலம், நீர், விதைகள் விவசாயிகளுக்குத்தான் சொந் தமாக இருக்க வேண்டும். ஆனால் மாறாக, அவை நிலப்பிரபுக்கள் மற்றும் பன் னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக் கின்றன.

எனவேதான் நிலம் உல கம் முழுவதும் உள்ள விவசா யிகளின் அடிப்படைப் பிரச் சனையாக இன்று மாறி யிருக்கிறது. உலகம் முழுவ தும் விவசாயிகள் நிலத்திற் காகப் போராடிக் கொண்டி ருக்கிறார்கள்.

நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள் கைகளை எதிர்த்தும், விவ சாயிகளை நிலங்களிலி ருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை எதிர்த் தும், வேளாண் உற்பத்திப் பொருட்களையே சுரண் டும் வடிவமாக மாற்றியிருப் பதை எதிர்த்தும், விவசா யத்தை கார்ப்பரேட் மய மாக்கியிருப்பதை எதிர்த் தும், உலகம் முழுவதும் உள்ள விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.