நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய முடியாது!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி ஆயுள் தண்டனையும், அவருடைய கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மரண தண்டனையும் அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் 4 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி என்பவர் மனுதாக்கல் செய்தார். அம்மனுவை கடந்த ஆண்டு ஏப்ரல் 28ஆ‌ம் தேதி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌ம் ‌நிராக‌‌ரி‌த்ததுட‌ன், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.

இதையடுத்து, வழ‌க்க‌‌றிஞ‌ர் கருப்பன் என்பவர் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனுதாக்கல் செய்தார். அ‌ந்த மனுவில், ராஜீவ் காந்தி கொலையின் சதி அம்சங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் தனது இறுதி அறிக்கையை 1998ஆம் ஆண்டு மார்ச் 7ஆ‌ம் தேதி சமர்ப்பித்தது.

அதில், ராஜீவ் கொலையில் சந்திராசாமியின் பங்கு, சி.ஐ.ஏ., மொசாத் போன்ற அய‌ல்நாட்டு உளவு அமைப்புகளின் தொடர்பு ஆகியவை குறித்தும், சந்தேகத்துக்குரிய மேலும் 21 பேரின் தொடர்பு குறித்தும் மேற்கொண்டு விசாரணை நடத்துமாறு ஜெயின் கமிஷன் சிபாரிசு செய்திருந்தது.

அதன் அடிப்படையில், 1998ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆ‌ம் தேதி, சி.பி.ஐ.யின் கீழ், பல்நோக்கு கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. அது, ஜெயின் கமிஷன் குற்றச்சா‌ற்றுகளை விசாரிக்க தொடங்கியது. ஆணையம் விசாரணையை தொடங்கிய தகவலை, விசாரணை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் சி.பி.ஐ. தெரிவித்திருக்க வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டோரின் மே‌ல்முறை‌யீ‌ட்டு மனுக்களை விசாரித்து வந்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌திலு‌ம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அந்த தகவல்களை ‌நீ‌திம‌ன்ற‌‌த்து‌க்கு தெரிவிக்காமல் சி.பி.ஐ. மறைத்ததால், நளினி, முருகன் உள்ளிட்ட 4 பேரும் தண்டிக்கப்பட்டனர்.

சந்திராசாமி மற்றும் 21 பேரின் தொடர்பு பற்றி விசாரிக்கப்படவில்லை. எனவே, குறைபாடுள்ள விசாரணையின் அடிப்படையில் தண்டிக்கப்பட்ட நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எ‌ன்று மனுவில் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இம்மனுவை ‌விசா‌ரி‌த்து‌ ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்த நீதிபதிகள் வி.எஸ்.சிர்புர்கர், முகுந்தன் சர்மா ஆகியோர் கொ‌ண்ட அம‌ர்வு, மனுதாரரின் வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை.

சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட விரும்பவில்லை என்று கூறி, நளினி உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்ய மறுத்து விட்டனர். மனுவை ‌திரு‌ம்ப பெற்றுக்கொள்ள மனுதாரருக்கு அவர்கள் அனுமதி அளித்தனர்.

One thought on “நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய முடியாது!”

  1. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்றூ அண்ணா கேட்ட திராவிட நாடு கோரிக்கையை தொடர்ந்து இருந்தால் தமிழனுக்கு இந்த வாழ்வு வருமோ அய்யா.

Comments are closed.