நளினியை சித்திரவதை செய்கிறது தமிழக அரசு.

தமிழக அரசாலும் நீதிமன்றத்தாலும் நன்னடத்தை விதிகளின் கீழ் விடுதலை கோரிய நளினியின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தனக்கு விடுதலை கோரி நீதிமன்றத்தை நாடினார். இந்நிலையில் நளினிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பான நன்னடத்தை என்னும் விதியைக் குலைக்கும் வேலையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. போலீசை ஏவி அவரது அறைக்குள் செல்போனை வைத்து எடுத்து விட்டு அதையே காரணம் காட்டி அவரது விடுதலையை தள்ளிப் போட நினைக்கிறது தமிழக அரசு. இதற்கு பக்க துணையாக காங்கிரஸ் எம்.எல். ஏக்களையே சட்டமன்றத்திலும் தூண்டி விட்டு நளினிக்கு எதிராக கேள்விகளை எழுப்பச் செய்கிற கருணாநிதியின் ஆதரவாளர்கள். இவ்விதமாய் ஒரு பெண்ணின் வாழ்வில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

One thought on “நளினியை சித்திரவதை செய்கிறது தமிழக அரசு.”

Comments are closed.