நல்லூர் கந்தனை வழிபட பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு பிற்போக்குவாதம்.

நல்லூர் கந்தன் ஆலைய வருடாந்த உற்சவம் விரைவில் வர இருக்கிறது. இவ்விழா தொடர்பான சில முக்கிய முடிவுகள் யாழ் மேயர் யோ.பற்குணராசா தலையில் நேற்று நடந்தது. அக்கூட்டத்தில் தென் பகுதியிலிருந்து வரும் பக்தர்களுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்வது குறித்தும் இன்னும் பல விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டது. அதில் முக்கியமான விஷயமாக தமிழ் பெண்களின் மரபான உடையென்று ஆண்களால் தீர்மானிக்கப்பட்ட சேலை, தாவணி,நீளப்பாவாடை சட்டை மட்டுமே அணிந்து நல்லூர் கந்தன் உற்சவத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று இதை மீறி ஜீன்ஸ், சுடிதார், அரைக்கால் சட்டை அணிந்து வந்து தமிழ் பெண்களின் பாரம்பரீயத்தையே இழிவு செய்பவர்களை அனுமதிக்க முடியாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை நாடெங்கிலும் உள்ள நாளிதழ்களில் விளம்பரமாக வெளியிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போரால் பாதிக்கபப்ட்டு ஒரு இனமே தூண்டாடப்பட்டு கிடக்கிற நிலையிலும் இந்த பிற்போக்கு வாதிகளின் இரக்கமாற்ற கோட்பாடுகள் தமிழ் பெண்களை இழிவாக நடத்தவே துணை போகும் என்பது உறுதி.

11 thoughts on “நல்லூர் கந்தனை வழிபட பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு பிற்போக்குவாதம்.”

 1. ஆடை என்பது என்ன? நாகரீகத்தின் அடையாளமே. உடம்பை திறந்து காட்டிக் கொண்டு இந்த ஆணாதிக்க சமூகத்தில் ஆண்களின் வக்கிர உணர்வுக்கு இரையாவதை விட உடலை மூடிய உடைகள் வரவேற்கத்தக்கதே. ஆடை அணிவதில் தான் பெண் சுதந்திரமா? பெண்ணின் உடல் பற்றிய கீழான எண்ணங்களை துடைத்தெறியாமல் முற்போக்கு பிற்போக்கு பற்றி பேசமுடியாது. அதற்கு தேவை ஒரு புரட்சிகரமான சமூக மாற்றமே!

 2. இந்தத்திருவிழாவில் ஆண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆடைக்கட்டுப்பாடுகள் எவை, ஆண்கள் வேட்டியும் வெறும் மேலுமாக மட்டும்தான் வரலாமா என்பதை அறிந்து சொல்லவும்.

  1. ஆமாம் வேட்டியும் சால்வையும் தான்.

   1. சால்வையைத் தோளில் போட முடியாதே!

 3. பெண் மேயர்> அவ சொல்கிறா> குறிப்பாக பெண்கள் தமிழர் கலாசாரத்தைப் பேணும் ஆடைகளை அணிந்து வரவேண்டுமாம்.  மக்கள் நெருக்கமாகக் கூடும் பொது இடம்> வக்கிர உணர்வுகளுக்கு இ.டம் கொடுக்கக்கூடாது என்ற அடிப்படையில் பெண்கள் முழு ஆடைகளை அணிந்து வருவது தற்போதைக்கு அவசியமானதுதான். ஆயினும் ஆண்கள் உடம்பைக் காட்டிக்கொண்டு நிற்பது அசிங்கமாகவே இருக்கிறது. இந்துக் கோயில்களிற்கு வரும் ஆண்களும் முழு ஆடை அணிவது கட்டாயமாக்கினால் நல்லது.   பெண்கள் சேலை கட்ட வேண்டும் என்ற ஒ ன்றை மட்டும் தமிழர் கலாசாரம் என்று கடுமையாகக் கடைப்பிடிக்கிறாவாம் மேயர். தனது அலுவலகத்தில் அனைவரும் சேலைதான் அணிய வேண்டும் என்ற கட்டளையையும் பிறப்பித்திருக்கிறா.  எங்கட கலாசாரம் இவ்வளவு சுருங்கிவிட்டதா?

  1. “தனது அலுவலகத்தில் அனைவரும் சேலைதான் அணிய வேண்டும் என்ற கட்டளையையும் பிறப்பித்திருக்கிறா.”
   மேயரின் கட்டளை சட்ட விரோதமானது. அடற்கெதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தொடர இடமுண்டு. (நீதி மன்றம் சாதகமாகத் தீர்ப்பளித்தாலும் நாட்டை ஆளுகிற அநீதி மன்றங்கள் பற்றி ஒரு உத்தரவாதமும் இல்லை).

   1. எடுத்த எடுப்பிலே நல்ல முடிவுகளை உதாசீனம் செய்தபடியால் தான் இன்று தமிழனுக்கு இக்கதி

 4. நாம் அனைவரும் யாழ்நகரமுதல்வரின் இந்த கட்டுபாடுகளை நிட்சயம் பின்பற்றியேயாகவேண்டும். ஈழத்தில் மழுங்கடிக்கபட்டுவரும் தமிழரின் பாரம்பரியங்களை இப்படியான நல்ல பண்பான உடை நடைகள் மூலம் சிறிதளவேனும் காப்பாற்றமுடியும்.எடுத்த எடுப்பிலே நல்ல முடிவுகளை உதாசீனம் செய்தபடியால் தான் இன்று தமிழனுக்கு இக்கதி.இதே நகரமுதல்வர் தான் கௌரவ.டக்லஸ் அவர்களோடு இணைந்து நல்லூர் கோவிலுக்கு மிக அருகில் அதுவும் தமிழ் மன்னன் சங்கிலியனின் இடத்தில கட்டுபடவிருந்த ஆடம்பர கேளிக்கை ஹோட்டல் ஒன்றை தடுத்து உதவினார் என்பதனை எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும்.

 5. பண்பாடு ..கலாச்சாரம் இந்துவத்துடன் இணைந்ததது ..வெளிநாடில் இருந்து வந்து “டூ  மச் ஹாட்..” என்று கூத்து காட்டுபவர்களின் வசதிக்கு மாட்டர்முடியாது…மாற்றவும் கூடாது.. கடுபாடுகளுடன் கூடியதுதான் மத சடங்குகளும் ..தாய்வ  வழிபாடும்…

  1. பண்பாடு கலாச்சாரம் வர்க்கத்துடன் கலந்தது.சாறத்துடன் சயிக்கிள் ஓடுவோர் அந்தக் காலத்தில் காவாலிகள்.பின்னர் இயக்க காலத்தில் பெண்கள் ஜீன்ஸ் போடத்தொடங்கினர்,இப்போது பாவாடைத் தாவணீக்கு கட்டள போடும் நிலயில் யாழ்ப்பாணம் வந்து விட்டது.காலம் இன்னும் என்னென்ன நடக்குமோ அந்த நல்லூரானுக்கே வெளீச்சம்.

 6. ஊர்மிளா, நக்கீரன் போன்றோர் கூறும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னைய கலாசாரத்தை பற்றி பேசுவதானால் இவர்கள் மரவுரிதான் அணிய வேண்டும், ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியானது அவர்களின் பழக்க் வழக்கங்கள் காலத்திற்கேற்ப மாறுவதிலிருந்துதான் ஆரம்பிக்கிறது, கால மாற்றங்களுக்கேற்றபடி பரிணாமம் அடையாத சமுதாயமாக தமிழ் சமுதாயம் உள்ளபடியாலேயேதான் சாதிக் கலவரங்கள் இனக் கலவரங்கள் முதலியன தலைவிரித்தாடுகிறது, அத்துடன் இறை நம்பிக்கைகளில் ஊறிப் போயுள்ள எமது மக்களை அதை வைத்தே ஒரு கூட்டம் ஏய்த்து பிழைக்கிறது. தமிழருக்கு நல்லைக் கந்தன் இருக்கும்போது எப்படி மகிந்தாவினால் இவ்வளவு மக்களை அழிக்க முடிந்தது, செம்மறியாடுகள் போல் இருக்காமல் சிந்தித்து நடக்க் கற்று கொள்ளுங்கள்,

Comments are closed.