நல்லிணக்க ஆணைக்குழுவும் ஈழ மக்களின் அவலங்களும் : விஜய்

இன்றைய செய்திவலம்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் கிளிநொச்சி மக்கள் சாட்சியமளப்பு

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளிகளில் தமது அமர்வுகளை மேற்கொண்டது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமர்வு 18.09.2010 சனிக்கிழமை கரச்சிப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றபோது அங்கு சாட்சியமளித்த மக்கள், தடுத்த வைக்கப்பட்டுள்ள தங்களது பிள்ளைகளின் விடுதலை துரிதமாக்கப்பட வேண்டும், காணமல்போன உறவினர்கள் பற்றிய விபரங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனக்கோரியிருக்கிறார்கள். தடுத்து வைக்கப்பட்டுள்ள, காணமல் போன தமது பிள்ளைகள், உறவினர்கள் இருக்கிறார்களா இல்லையா என்ற தகவல்கள் தெரியாத நிலையில் வெறும் நம்பிக்கயோடு மட்டும் தாம் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்த மக்கள்,மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள தமக்கு எந்தவிதமான வசதிகளும் செய்து தரப்படவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்கள.

இடம்பெயர்ந்து உடுத்த உடுக்கை கூட இல்லாமல் முகாம்களுக்குச் சென்ற நிலையிலேயே இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் மக்கள் அடையாளப்படுத்தப் படலாம் என்ற நிலையிலும் தமது அவலத்தை ஓரளவேனும் முன்வைத்திருக்கிறார்கள். மரணத்த்தின் விழிம்பில் வாழும் மக்கள் வன்னியிலும் கிழக்கிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது பேரினவாதம் தனது கோரக்கரங்களை அழுத்தி வருகிறது.

உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில் மக்களை மீளக்குடியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவினர், மக்களிடம் தடுத்து வைக்கப்பட்டேர் தொடர்பாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் தாம் பேசவுள்ளதாகக் கூறியுள்ளனர். அதே வேளை பொன்னகர் கிராமம் தொடர்பாக பேசிய குழுவினர் புலிகளால் அல்லது புலிகள் சார்ந்த நிறுவனங்களால் வழங்கப்பட்ட காணிகளில் மக்கள் சென்று வாழவோ உரிமை கோரவோ முடியாது எனத்தெரிவித்துள்ளனர்.

பிரகடனப்படுத்தப்படாத ராஜபக்ச இராணுவ ஆட்சி என்பதன் அங்கங்கள் இவர்கள் மீது போர்ப் பிரகடனம் செய்துள்ளது.

கண்டாவளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வரும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த மக்கள், வட்டுவாகலில் கடந்தவருடம் மே மாதம் இராணுத்தினரிடம் சரணடைந்த தங்களுடைய பிள்ளைகள், உறவினர்களின் நிலை பற்றித் தெரிய முடியாமலுள்ளதாக தெரிவித்திருப்பதுடன், தமது உறவினனர்களுடன் புதுவை இரத்தினதுரை மற்றும் யோகி ஆகியோர் இராணுவத்தினரால் பஸ்சில் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

போர்க் குற்றவாளிகளே குற்றத்தை முறையிடும் அவலம் உலகத்தின் ஒரு பகுதி மக்களுக்கு ஏற்படுள்ளதை உலகிற்கு சொல்லவேண்டிய வரலாற்றுக் கடமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு.

ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த ஒருவர், தாம் 2009 மாசி மாதம் இராணுவதத்தினரிடம் சரணடைந்ததாகவும் அப்போது தனது வீடு மற்றும் வாகனங்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பாதுகாப்பாக இருந்ததாகவும் ஆனால் தற்போது வீடு முற்றாகச் சேதமடைந்தும் வாகனம் காணமல் போயுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பிரமுகர் ஒருவர், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு எட்டப்படவேண்டும் எனத்தெரிவித்திருக்கிறார். அவர், மீளக்குடியேற்றம் என்ற பெயரில் மக்கள் தமது சொந்த இடங்களில் கொண்டு சென்று விடப்படுகின்றனர். ஆயினும் முன்னர் போன்ற சுமுகமான வாழ்க்கை முறைக்கு மக்கள் இன்றுவரை திரும்பியிருக்கவில்லை. காணிப்பிரச்சினைகள், இறந்துபோன, காணமல்போன குடும்பங்களின் வாழ்வாதார நிலைமைகள் இன்று வரை கவனிக்கப்படாமல் இருக்கின்றன. தடுத்து வைக்கப்பட்டோர், காணமல் போனோர் தொடர்பில் அரசு என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதைத் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.

இங்கு ஆணைக்குழு மக்களிடம் வினாவிய கேள்விகளுக்கப் பதிலளித்த மக்கள், இனி ஒருபோதும் ஆயுத வழியிலான போராட்டத்திற்கு தாம் தயார் இல்லை எனவும் எமது அடிப்படை வசதிகள் முதற்கொண்டு இனப்பிரச்சினை வரை சகலவற்றுக்குமான தீர்வு காணப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ராஜபக்ச அரச இயந்திரத்திடம் தான் மக்களை ஆயுதப் போருக்கு நிர்ப்பந்திக்கிறது.

யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சதந்திரக்கட்சியின் பணிகள் விரைவுபடுத்தப்படுகிறது.

ஸ்ரீலங்கா சதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவராக அன்ரன் தங்துஷாரா நியமிக்கப்பட்டு;ள்ளார். அவருக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் பிரதியமைச்சர் ரோஹண திஸநாயக்காவினால் வழங்கப்பட்டுள்ளது. அங்கு உரையாற்றிய பிரதியமைச்சர், யாழ்.மாவட்டத்திலுள்ள 11 தேர்தல் தொகுதிகளிற்கும் அமைப்பாளாகள் நியமிக்க கட்சி முடிவு செய்துள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் யாழில் ஆறு தொகுதிகளை தமது கட்சி கைப்பற்றுவதில் சந்தேகமில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

கிழக்கமாகாண கல்வியமைச்சில் நிதித்தட்டுப்பாடு

மீளக்குடியறிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளை இயக்க தற்காலிகக் கொட்டில்களை அமைத்துத் தருமாறு கோரியதையடுத்து, கிழக்கமாகாண கல்வியமைச்சில் நிதித்தட்டுப்பாடு நிலவுவதால் மீள்குடியேற்றப்பகுதி பாடசாலைக்கு தற்காலிக கொட்டில்களை அமைத்துக்கொடுக்க முடியாத நிலை நிலவுவதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பாடசாலைப் பணிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.

ராஜபக்ச அமரிக்காவிற்கு செல்வதற்கான செலவு  3 மில்லியன் டொலர்கள்.

ஹெல உறுமயவின் தீர்வு

ஹெல உறுமய, வடக்கு கிழக்கு மாகணாங்களின் தமிழ் மக்களுக்கென தனியான ஒரு அரசியல் திர்வு விடயம் தொடர்பில் தற்போது பேசவேண்டிய அவசியமில்லை. வடக்கு கிழக்குப் பகுதிகளில் விரைவாக மறுசீரமைப்பு பணிகள் செய்யப்பட வேண்டும், அபிவிருத்திப் பணிகள் விரைவு படுத்தப்பட வேண்டும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத்தெரிவித்தள்ளது. அதே வேளை வடக்கு மாகணத்தில் விரைவாக மாகாண சபையை இயங்க வைக்க வேண்டும் எனத்தெரிவிதுள்ள ஹெல உறுமய மாகாண சபை முறைமையில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து சிக்கல்கள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் மாத இறுதிப்பகுதிக்குள் எஞ்சியுள்ள மக்களையும் மீள்குடியேற்றிவிட முடியும்

வடக்கில் ஒக்டோபர் மாத இறுதிப்பகுதிக்குள் எஞ்சியுள்ள மக்களையும் மீள்குடியேற்றிவிட முடியும் என மீள்குடியேற்ற அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தற்போது வடக்கில் 25 அயிரத்திற்கு உட்பட்ட மக்களே இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் தங்கியுள்ளனர் எனத்தெரித்த அமைச்சர், புது மாத்தளன், வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதிகளில் நிலக் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. அப்பணி விரைவாக நிறைவுற்றதும் மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள் எனத்தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றப்படுகின்ற மக்களுக்கு 20 தகரங்கள் மற்றும் 8 சீமெந்து பக்கற்றுக்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் மழைக்காலம் ஆரம்பமாவதற்கு முன் மீள்குடியேற்றப்படுகின்ற மக்கள் வீடுகளை அமைத்துக்கொள்ளும் சாத்தியமும் உண்டு எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வவுனியா கட்டையர் குளம் கிராமத்தில் நிலங்களை அபகரித்து மக்களை வெளியேற்ற அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு.

காடுகளை அழித்து விளைச்சல் நிலமாக மாற்றி அமைத்து மக்கள் வாழ்ந்து வந்த பகுதியே வவுனியா கட்டையர் குளம் கிராமம். வவுனியா நகரத்தின் குடிநீர்த்தேவையை நிறைவு செய்வதற்காக இக்கராமத்தில் பறங்கியாற்றை மறித்து நீர்;த்தேக்கம் ஒன்றை நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரப்பட்டுள்ளன. இத்திட்டம் பற்றி அறிந்த மக்கள் அது பற்றிய அறிய முயற்சிகள் மேற்கொண்ட போதும் சரியான தகவல்களை அதிகாரிகள் வழங்க முன்வரவில்லை

இந்நிலையில் நில அளவைத் திணைக்கள அதிகாரிகள், நில அளவை செய்வதற்கான எல்லைகளை அமைப்பதற்காக புல்டோசர் கொண்டு குடியிருப்புக்காணியொன்றின் வேலிகள் மற்றும் பயிர்களை அழித்தபோது காணி உரிமையாளர் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளார். சம்பவத்தையடுத்து திரண்ட மக்கள்; நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை குடியிருப்புக் காணிகளிற்கு வரவேண்டாம் எனத்தடுத்துள்ளனர்.

நில அளவைத்திணைக்கள அதிகாரிகள், எந்தக் காணிகளையும் அளவை செய்யும் அதிகாரம் தமக்கு இருப்பதாகவும் தம்மை தடுத்தால் ஊர் மக்களை இராணுவம் மற்றும் பொலிஸாரின் துணையோடு அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தியிருக்கிறார்கள். நிலைமையை அறிந்து அங்கு சென்ற வவுனியா பிரதேச செயலாளரும் ஊர் மக்களின் செயற்பாடுகளை கண்டித்திருக்கிறார்.

வன்முறையாளர்கள் ராகபக்ச அரச இயந்திரமே தவிர, மக்கள் அல்ல என்பதை அவர்களுக்கு அடித்துச் சொல்கிறது அரசு.

மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலாநாதனிடம் முறையிடிருக்கிறார்கள்.