நமது குழந் தைகளும் சிறுவர்களும் ஏன் மடிய வேண்டும் – பிடல் காஸ்ட்ரோ.

ஹவானாவில் கம்யூ னிஸ்ட் இளைஞர் லீகின் தேசிய வாரியக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று உரையாற்றிய போது இக் குற்றச்சாட்டைக் கூறினார். உச்சநேர தொலைக்காட்சி நிகழ்ச்சியான வட்ட மேசை யில் இந்நிகழ்ச்சி ஒளிபரப் பப்பட்டது. நிகழ்ச்சியின் போது சாம்பல் நிற பேண்ட் டும் சிகப்புக் கட்டமிட்ட சட்டையும் அணிந்திருந்தார்.1990 களில் கியூபாவில் பயங்கரவாதத் தாக்குதல் களை நடத்தி சுற்றுலாப் பய ணிகள் தங்கும் விடுதிக ளைத் தகர்க்க கியூபா எதிர்ப்பு குழுக்களை அமெரிக்கா ஏவியது. இக்குழுக் களுக்குள் ஊடுருவி, ஒற்ற றிய அனுப்பப்பட்ட ஐந்து கியூப நாட்டவரை அமெ ரிக்கா கைது செய்தது. இவர் களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சிறை யில் அடைத்தது.ஐவரில் ஒருவரான ஜெரார்டோ ஹெர்னாண்ட்ஸ் பற்றி அவர் குறிப்பிட்டார். ஹெர்னாண்டஸ் 1 மீட்டர் அகலமுள்ள அறையில் தனி யாக அடைக்கப்பட்டுள் ளார். அந்த அறைக்கு காற்று புழக்கத்துக்காக ஒரு அடி விட்டமுள்ள துளை மட் டுமே உள்ளது என்று காஸ்ட்ரோ கூறினார். இதே போலவே மற்ற நால்வரும் அடைக்கப்பட்டுள்ளனர். ஹெர்னாண்ட்ஸூக்கும் மருத்துவ உதவி தேவைப் படுகிறது. அமெரிக்கா மருத் துவ உதவியை மறுத்து வரு கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.நிகழ்ச்சியின் இறுதியில் பிடல் காஸ்ட்ரோ இளை ஞர்களுக்கு அறிவுரைகள் கூறினார். கடந்த காலத்தின் உள்ளடக்கத்தையும் நினை வுகளின் பிம்பங்களையும் மனதிற்கொண்டு எதிர் காலத்தில் கவனம் செலுத்த முடியாது. உங்களுடைய கற்பனைகளை உயரப் பறக்க விடுங்கள் என்று அவர் சொன்னார்.அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானுடன் அணுயுத்தத்தை நடத்தவும், தென் கொரியாவில் பதட்டங்கள் மோசமடையயும். நமது குழந் தைகளும் சிறுவர்களும் ஏன் மடிய வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப் பினார்.

2 thoughts on “நமது குழந் தைகளும் சிறுவர்களும் ஏன் மடிய வேண்டும் – பிடல் காஸ்ட்ரோ.”

  1. இன்னும் இளமையாய் இருக்கும் இவனல்லவோ புரட்சிக்காரன் தன்னை நரி என்றூம்,பெருச்சாளீ என்றூம்,நாய் என்றூம் ,மனிதக் கழிவு என்றூம் பேசும் கூச்சலகள பொருட்படுத்தாது தன் பாதையில் தீர்க்கமாக இருக்கிறான்.கடந்த காலத்தில் வாழ்ந்து அதைப் பற்றீயே சிந்தித்து தன் சிந்தனை ஆற்றலை வீணடிக்கும் சிலருக்கு புதுச் செய்தியை இந்த பழைய மனிதர் பேசுகிறார்.கறபனைகள பறக்க விடுங்கள் அதுவே எதிர்காலம்,புதிதாய் சிந்தியுங்கள் அதுதான் வாழ்க்கை.

  2. Our friend Thamilmaran does not know what the word “Purathchi” means? He appears to be reading a lot of Conservative right wing writings criticising Marxists mostly American stuff to justify fascism by pointing out the life of a sober Marxist figure.
    “Karpanaigal paraka vidurathu” is not on a empty head like he seems to be suggesting.

Comments are closed.