நண்பர்காள், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?: துடைப்பான்

 

டேவிட் ஐயா
im1

சுமார் 30 வருடகால இலங்கை தேசிய இனப்பிரச்சினையின் ஆயுதப்போராட்டம், அது சுட்டி நின்ற நியாயமான காரணங்கள், புலிகளின் அழிவோடு முடிவுக்குவந்துவிட்டதாகவும், எனவே இனிமேல் இலங்கை அரசோடு ஒட்டி உறவாடி அது தருகின்ற, அல்லது இன்னறய வாழ்வோடு இரண்டறக்கலந்து வாழ்தலே ‘சுபீட்சமானது’ எனக்கருதும் ஒரு சாரார்.

இல்லை, இல்லை தொடர்ந்து புலிகளின் பாணியில் செல்லுதல், ‘தமிழ் ஈழக்’ கனவு சுமந்து மக்களை இன்னும் மந்தைகளாக இட்டுச் செல்லுதல் என்ற இரண்டாம் நிலைச்சாரார்.

மேற்கண்ட இருநிலைச் சாரார்கள் மத்தியில் செயல்படுகின்ற, மூன்றாம் நிலைச்சாரார்கள் என குறிப்பிடப்படும் ஒரு பகுதியினரின் மனநிலையோட்டம் என்னவாக உள்ளது?.

மூன்றாம் நிலைக்ச்சாரார்கள், இரண்டு நிலைக்ச்சாரார்களின் அரசியல் சித்தாந்த நடைமுறைகளோடு முரண்கொண்டவர்கள். ஒடுக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களின் விடுதலை இன்னும் சாத்தியமாகவில்லை, எனவே வெவ்வேறு போராட்ட வடிவங்களினூடாக இவை முன்னெடுத்து வளர்க்கப்படவேண்டுமென கருதுபவர்கள்.

இவர்கள் மூன்று நிலைகொண்டவர்கள்.

1.தமிழ்ஈழம் சாத்தியமானது. புலிகளின் இராணுவ மயப்பட்ட im2அரசிலைத் தவிர்த்து ஜனநாயக வழிப்பட்ட அரசியல் அமைப்பொன்றின் ஊடாக ஆயுதப்போராட்டத்தை முன் எடுத்தல். இவர்கள் ஆயுதப்போராட்டமே இறுதிவடிவமென கருதுபவர்கள்.

2. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு காணல். ஒடுக்கப்பட்ட தமிழ் , im3சிங்கள ,முஸ்லீம், மலையக மக்களோடு கைகோர்த்து ஒன்றிணைதல். ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை வைத்தல். இலங்கை அரசுக்கு எதிரான அரசியல் கிளாச்சியை ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தல்.

3. ஒனறுபட்ட இலங்கைக்குள் தீர்வு காணல். தமிழ் ,சிங்கள ,முஸ்லீம் ,மலையக மக்கள் மத்தியிலும் சர்வதேச ரீதியிலும் ஜனநாயகப்போராட்டங்களை, மக்கள் எழுச்சிகளை, தாக்கங்களை ஏற்படுத்துதல். ஆயுதப்போராட்டத்தை நிராகரித்தல்.இலங்கை தழுவிய, அரசுக்கு எதிரான வெகுஜன அமைப்புக்களை உருவாக்குதல்.

சமீப நாட்களாக மேற்கண்ட மூன்று நிலை சிந்தனை கொண்ட ,செயற்பட ஆர்வம் கொண்டிருக்கும் பல நண்பர்கள், தோழர்கள் இவை பற்றி என்னோடு உரையாடுகின்றனர். இவற்றின்பால் என் சார்பு, செயற்பாட்டு நிலையை கோருகின்றனர். நானோ???

என் அரசியல் சமூக செயற்பாட்டுவாழ்வு 13வயதில் தொடங்கியது. என் தகப்பனாரும் என் அம்மாவும் அன்றைய தமிழரசுக் கட்சியின் தீவிர அபிமானிகளாக இருந்தனர். காலமும், im4நேரமும் ,பொருளாதாரமும் தமிழரசு கட்சிக்கே தாரைவார்க்கப்ட்டது. சத்தியாக்கிரகப் போராட்டத்தில் என் தகப்பனும் அம்மாவும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதிலிருந்தே இதனை புரிந்துகொள்ளமுடியும். என் அரசியல் சித்தாந்த ஈடுபாடு என் குடும்பத்தோடு முரண்பாடு கொண்டதாகவே அமையப்பெற்றிருந்தது.

சோவியத் ரசிய வெளியீடுகளோடும், நாவல்ளோடும், அப்போது வெளிவந்துகொண்டிருந்த சோவியத் செய்தி பத்திரிகையோடும் என்காலம் கடந்தது. இவற்றின் தீவிர வாசகனாக நான் இருந்தேன். நானும், என் வயதொத்த நண்பர்களும் ‘இளந்தளிர் வாசகர் வட்டம்’ எனும் அமைப்பினைத் தொடங்கி பல்வேறு அரசியல் கருத்தரங்குகளையும், மாணவர் கல்வி சம்பந்தமான இலவச வகுப்புக்களையும், கிராமத்தில் சமூக செயல்பாடுகளையும் முன் எடுத்தோம். அன்றைய காலத்தில் என் கிராமத்தில் என் நண்பர்கள் குழாம் ஊரில் முன் மாதிரியாக காட்டப்பட்டோம். வார்த்தைக்கும் ,வாழ்க்கைக்கும் ,செயலுக்குமான நெருக்கமான உறவை நாம் பேணுவதில் கண்டிப்பாய் இருந்தோம். வெற்றியும் பெற்றோம்.

எமது ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான நேசிப்பும் ,விடுதலை ஆர்வமும், மாக்ஸியமே அனைத்துவிடுதலைக்குமான தீர்வு என்ற திடமான நம்பிக்கையும், எங்கள் நண்பர்கள் குழாத்தை ஜனதா விமுத்தி பேரமுன என்ற JVPயிடம் கொண்டுசென்றது. இலங்கையின் வர்க்கப்போராட்டமே தமிழ் பேசும் மக்களுக்கான ஒரே தீர்வு என்று JVP சொன்னது. அவர்கள் வார்த்தைகளை நம்பினோம். எமது நண்பர் குழாம் JVP யோடு சங்கமாயிற்று. சுமார் இரண்டு வருடங்கள் இவர்களோடு தீவிரமாக செயல்பட்டோம். பாசறைகளில் கலந்துகொண்டோம். காலம் முரண்பாட்டை தோற்றுவித்தது. அவர்களின் கோட்பாட்டிற்கும் ,செயற்பாட்டிற்கும் இடையில் பாரிய இடைவெளியை கண்டோம். உட்கட்சி போராட்டங்களை நடாத்தினோம். இறுதியில் தோல்வி நிலையோடு வெளியே வந்தோம். எனினும் அவர்களோடு உறவு கொண்டிருந்த அக் காலங்கள், ஒரு சில நல்ல நட்புக்களை, மாக்ஸிய வழிப்பட்ட கல்வியை தேடல்களை வழங்கியிருந்தன.

மீண்டும் எமது “இளம்தளீர் வாசகர்வட்டத்தை” செயல்படுத்தத் தொடங்கினோம். 1980ம் ஆண்டு காந்திய அமைப்பின் தொடர்பு எங்களுக்கு கிடைத்தது. காந்திய வழிப்பட்ட சிந்தனைகள் மீது அப்போது எங்களுக்கு அவ்வளவு மரியாதை கிடையாது. எனினும் டேவிட் ஐயாவின் வழிகாட்டலில் செயல்பட்ட காந்திய அமைப்பினரின் செயல்பாடுகளும், வேலைத் திட்டங்களும், மலையக மக்கள் மீது குறிப்பாக அவர்களின் கல்வி, im6சமூக ,பொருளாதார மேம்பாடுகளில் கொண்டிருந்த அக்கறை எம்மை அதன்பால் ஈர்த்தது. அதனோடு இணைந்து செயல்படத் தொடங்கினோம். இங்கேதான் தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்கழகம் என்ற புளொட் அமைப்பின் தொடர்பு கிடைக்கப்பபெற்றது. அவர்களின் அரசியல் கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாறல்கள், சந்திப்புக்கள் என தொடர்ந்தன. தமிழ் ஈழம், பிரிவினை என்ற அரசியல் வார்த்தைகளோடு உடன்பாடு அற்று இருந்த எம் நண்பர் குழாத்தை “தேசிய விடுதலைப் போராட்டத்தோடு வர்க்கப்போராட்டம்” என்ற புளொட்டின் போராட்ட சித்தாந்த வடிவம் எம்மை கவர்ந்து இழுத்தது.  . எம்மைத் தொடர்ந்து எமது ஏனைய நண்பர்களும் எம்வழி தொடரலானார்கள்.

இக்காலங்களில் நாங்கள் “இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்” செயல்பாடுகளில், விளையாட்டு முகாம்களில் முக்கிய செயல்பாட்டாளர்களாக இருந்தோம். நிறைய தொடர்புகளையும், நட்புக்களையும் கிழக்கிலங்கை பூராகவும் பெற்றிருந்தோம். பெருவாரியான இந்த நண்பர்கள் எம் மீது நம்பிக்கைகொண்டு புளொட்டினுள் எம்மைத் தொடர்ந்தார்கள். நாங்கள் எல்லோரும் நம்பிக்கையோடு இருந்தோம். ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் விடுதலை கிடைக்குமென நம்பினோம். எமது குடும்பம் ,எதிர்கால தனிப்பட்ட நலன்சார்ந்த வாழ்வு ,கல்வி ,அனைத்தையும் விடுதலையின் பால் கொண்ட நம்பிக்கையினால் தூக்கியெறிந்தோம். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையே எமது வாழ்வு நெறி என பயணித்தோம்.

முடிவில், ஏமாற்றத்தின் விளிம்புநிலையில் கொண்டு விடப்பட்டோம்.

மீண்டும் புகலிடத்தில் நண்பர்களோடு அதேவகைப்பட்ட உரையாடல்கள்…. ! உரையாடல்கள்!! உரையாடல்கள்!!!

என்வாசக நண்பர்காள் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்

30 thoughts on “நண்பர்காள், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?: துடைப்பான்

 1. “சமூகத்தில் நாம் பேசுகின்ற எழுதுகின்ற அக்கறைகளுக்கு ஏற்றவாறு வாழவேண்டுமென்ற கருத்தின் மீது மிகுந்த அக்கறைகொண்டவனாக நான் இருக்கிறேன். இந்த ஐரோப்பிய முதலாளித்துவ சூழலில் இவை மிகுந்த நெருக்கடி நிறைந்த சவாலான சூழல் எனினும் குறைந்த பட்சமாவது நம் அக்கறைக்குரிய சமூக விடயங்களில் நேர்மையும் உண்மையும் கொண்டு வாழ முயலுதல் வேண்டுமென்பதே என் அவாவாகின்றது”.–துடைப்பான்

  தமிழ் ஈழம், பிரிவினை என்ற அரசியல் வார்த்தைகளோடு உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டால் உங்கள் “அ” நண்பர் குழாத்தை ஒன்றிணைத்து“ வர்க்கப்போராட்டத்தை ” முன்னெடுங்கள். கடந்த கால உங்கள் அரசியல் அனுபவங்கள் மற்றும் “ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையே உங்கள் வாழ்வு” எனில் நிறைய தொடர்புகளையும், நட்புக்களையும் கிழக்கிலங்கை பூராகவும் பெற்றிருந்தவர் எனில்.
  கிழக்கலங்கை அரசியலில் ஒடுக்கப்படும் மக்களின் நலனுக்காக போராடுங்கள்.

 2. உங்களிடம் எதிர்பார்ப்பது, கடந்த காலம் மீதான உங்கள் அரசியல் சுயவிமர்சனத்தை. உங்களைச் சுற்றி எதிர்ப்புரட்சி இருந்துள்ளது. இது இன்று நீங்கள் எதிரியாக பார்பாவர்களுக்கு வெளியில் உள்ளது. கடந்த 20 வருடத்தில் புலத்தில் என் புரட்சிகார போக்கு வளரவில்லை. நீங்கள் என்ன செய்திர்கள்.

 3. துடைப்பானின் குறிப்புக்கள் ஆழமான அரசியல் விவாதத்திற்குரியவை. இனமுரண்பாடு தொடங்கி 25வருடங்களுக்கு மேலாகியுள்ளது. ஆனால் யாரிடமும் துடைப்பான் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பற்றி ஆழமான ஆய்வுகள்இவிமர்சனங்கள் இல்லை. விவாதங்களை சரிபிழைகளை விமர்சன பூர்வமாக ஆராயவேண்டும். குண்டுச் சட்டிக்கள் குதிரை ஓட்டுவதைவிடுத்து திறந்த விவாதம் தேவை. கடந்த கால தவறுகள் ஆராயப்படவேண்டும். அப்போதுதான் போராட்டம் தொடர்பான தெளிவான முடிவுகளுக்குஇ சரியான பாதைக்கு வந்தடையலாம்.

 4. துடைப்பான் புலத்தில் உங்கள் எதிர்ப்புரட்சி அரசியலின் தாற்பரிய என்ன? புலத்தில் என்ன புடுங்கின நீங்கள் போங்கடா நீங்களும் உங்கட புலமும் பொத்திக் கொண்டு கிடங்கோ அதுவும் உங்களவில் புரட்சிதான்.

 5. அசோக்,வணக்கம்!

  இதுவரையான உங்கள் அநுபவங்கள் உங்களுக்கான ஆசான்.இதுதாண்டிய வாசகர்-நண்பர்களது பார்வைகள்,எதிர்வினைகளை எது சார்ந்து எதிர்பார்க்கிறீர்கள்?

  தனிநபர் நடத்தையின்பாலான எதிர்பார்ப்புகளா அன்றிச் சமுதாயவாரியான அரசியல் நடாத்தையில்,அதுசார்ந்த மிதிப்பீடுகளுடாக அசோக்கினது பாத்திரம் குறித்த தேடலாகவா?

  இதுள், இரண்டாவது வகைக்குட்பட்ட தெரிவாக உங்கள் எதிர்பார்ப்பு அமையுமானால் நிச்சியம் தோழர் இராயாவினது கோரிக்கையை நீங்கள் ஏற்றாகவேண்டும்.

  இதுவே சரியான தெரிவும்,மக்கள் சார்ந்த-ஒடுக்கப்பட்ட வர்க்கஞ்சார்ந்த செயற்பாட்டின்மீதான நம்பிக்கையை உங்கள்சார்பாகவும் நாம்கொள்ளமுடியும்.

  இஃது, மிகக் கறாராக இருக்கும் ஒரு சரியான தெரிவினூடாக நம்மை இணைக்கவல்ல வழி.

  இதுவன்றி, இத்தகைய எழுத்துக்கள் வெறுமனவேயான பச்சோதாப நடத்தையின்மீதான-உணர்வின்மீதான எதிர்வினையாகக் குறுகி,சுயபச்சோதாப எல்லையில் குப்பர வீழ்ந்து உங்களது நேரத்தையும்,நமது நேரத்தையும் வீணடிப்பதில் முடியும்.

  தேசிய ஒடுக்குமுறைக்குட்பட்ட தமிழ்பேசும் மக்களது அரசியல்வரலாற்றில், நாம் எல்லோருமே ஒவ்வொரு கிராமங்களிலும் ஏதோவொரு வகையில் அரசியல் முன்னெடுப்பை நாம்சார்ந்த இயக்கஞ்சார்ந்து-இயக்கவாதத்துக்குட்படக் காரியமாற்றியுள்ளாம்.கடந்தகாலத்தில் இயக்கங்களில் பங்கெடுத்தவர்கள் எல்லோரும் ஏதொவொரு வகையில் தனிப்பட்ட வாழ்சூழலில் தாக்கத்தை எதிர்கொண்டே அவ்வாறு இயக்கங்களுக்குள் உள்வாங்கப்பட்டும் இருந்தோம்.எனவே,வாழ்சூழலது பாதிப்பும் அதுசார்ந்த சமூக நடவடிக்கையும் பரந்துபட்ட மக்களது தெரிவாக இயங்க முடியாத சந்தர்ப்பத்தில் நாம் இயக்கங்களது வெறும் உறுப்பினர்களாகவே இலங்கைப் போராட்ட வரலாற்றில் பங்களித்துள்ளோம்.

  ஆகையினால்,இஃது, மக்கள் சார்ந்த அரசியலுக்கு எந்தவகையில் கெடுதியானதென்ற சுய விமர்சனத்தை முன்வைப்பதிலிருந்து, மேலும் முன்னேறுவதற்கான பாதைகளைத் திறக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

  நன்றி.

  ப.வி.ஸ்ரீரங்கன்.

  11.07.09

 6. AM LIKE A FATHER SON,HE IS REBEL BEFORE ME.BECAUSE I KNEW I WRIGHT TO VOTE THAN I HAVE NO WRIGHT.

 7. அசோக்!
  புலிகளின் அரசியல் என்பது அற்றுப்போய்விட்டது! மகிந்தப்புலியை> அதன் உள்நாட்டு+வெளிநாட்டு “புலன்பெயர்வுகள” (டக்கிளசுகள்) எல்லாமே மகிந்தாவென்று கோவிந்தா போடுதுகள்! இவையெல்லாம் தமிழ் மக்களின் உதவாக்கரைகளே! தமிழ்மக்களின் விடுதலை> சுயநிர்னய உரிமைப் போர்>மூன்றாவது பாதையின் ஊடாகவே> செல்லவேண்டும்! சிறி ரங்கன் சொல்வது போல்> மாக்கசிச அரசியலை முதன்மைப்படுத்தி> மக்கள் விடுதலைப் போராட்ட மார்கத்தை முன்னெடுக்கும் > ரயாகரன் போன்ற சகலரோடும் ஐக்கியப்படவேண்டும்!

 8. இங்;கே பாருங்கள் நண்பர்காள்..
  உந்த மூன்றாவது பாதை என்ற பம்மாத்தும் முப்பதுவருசத்துக்கு மேல தொடருது. ஆண்டிகள் மடங்கட்டின கதையத்தவிர அங்கால ஒரு இஞ்சியும் நகரேல்ல. கையாலாகதவையின்ர அங்கலாய்ப்புதான் மூன்றாவது பாதை என்ற முடிவுக்கும் வரலாம். எல்லாரிலயும் பிழைசொல்லி தன்னை சரியான ஆள் என்று குறுக்குவழியில நிறுவமுற்படுகிறபோக்கும் உந்தப்பாதைக்க கிடக்கு. மக்களோட மக்களா வாழாம மக்கள்ள தங்கியிரமை உலக ஏகாதிபத்தியங்களின்ர தயவில தங்கியிருந்துகொண்டு மக்கள் மக்கள் எண்டு பினாத்திறவையும் மக்களின்ர எதிரியள்தான்.

 9. ஐயோ தம்பிமாரே மூண்டாம் பாதை நாலாம் பாதை எட்டாம் பாதை ஒண்டும் வேண்டாங்கோ. எங்களை நிம்மதியாக வாழவிடுங்கோ. இங்க குந்திக் கொண்டு புரட்சி மசிர் பேசிய நிறையப்பேர கண்டிருக்கிறம். ஐஞ்சு காசாவது மக்களுக்காக கொடுத்திருப்பாங்களோ. புலியப் பேசிப் பேசி அரசாங்கத்த பேசிப் பேசி புரட்சி புலுடா என்று தொன் கணக்கில இன்ரநெற்றிக்கு முன்னால குந்திக்கொண்டு குத்திமுறியிறதில ஒரு மசிரும் புடுங்க முடியாது.

 10. ‘இத்தகைய எழுத்துக்கள் வெறுமனவேயான பச்சோதாப நடத்தையின்மீதான-உணர்வின்மீதான எதிர்வினையாகக் குறுகி,சுயபச்சோதாப எல்லையில் குப்பர வீழ்ந்து உங்களது நேரத்தையும்,நமது நேரத்தையும் வீணடிப்பதில் முடியும்.’

 11. 3ம் பாதை கட்டக்கிளம்பியுள்ள தோழர்களே உங்களால் குச்சி ஒழுங்கையைக்கூட
  கட்டமுடியாது. அதற்கான அர்ப்பணிப்பு தியாகம் உங்கள் எவரிடமும் இல்லை.
  சில ஆண்டுகளுக்கு முன் புலத்தில் எத்தனை அமைப்பு சிறு பத்திரிகைகள் வந்தன?
  அவற்றிற்கு என்ன நடந்தது? உங்கள் ஒவ்வொருவருடைய ஈகோ போட்டி பொறாமை நான் நான் என்ற அதிகார மமதை இவைதான் அழிவுக்கு காரணம். ஒருவன் உங்களைவிட மாக்சியம் பேசினால் பொத்திக்கொண்டுவந்துவிடும் உங்களுக்கு பிறகென்ன. பொறுக்கி நாயே பேயே என்று எழுதவேண்டியதுதான். இந்தப்பாதையெல்லாம் கட்டமுதல் உங்களை சுயவிமர்சனம் செய்துகொள்ளுங்கள். இணையத்தளங்களை வாசிப்பது இப்போது அறிவுதேடி அல்ல.செந்தில் வடிவேல் பாணி கொசுப்புக்களை ரசிக்கத்தான். எங்களுக்கும் பொழுதுபோகவேண்டும்.

 12. இணையத்தளங்களை வாசிப்பது இப்போது அறிவுதேடி அல்ல.செந்தில் வடிவேல் பாணி கொசுப்புக்களை ரசிக்கத்தான். எங்களுக்கும் பொழுதுபோகவேண்டும்.

  good comment!

 13. // தமிழ்மக்களின் விடுதலை> சுயநிர்னய உரிமைப் போர்>மூன்றாவது பாதையின் ஊடாகவே> செல்லவேண்டும்! சிறி ரங்கன் சொல்வது போல்> மாக்கசிச அரசியலை முதன்மைப்படுத்தி> மக்கள் விடுதலைப் போராட்ட மார்கத்தை முன்னெடுக்கும் > ரயாகரன் போன்ற சகலரோடும் ஐக்கியப்படவேண்டும்!// msri

  //3ம் பாதை கட்டக்கிளம்பியுள்ள தோழர்களே உங்களால் குச்சி ஒழுங்கையைக்கூட
  கட்டமுடியாது. அதற்கான அர்ப்பணிப்பு தியாகம் உங்கள் எவரிடமும் இல்லை.
  சில ஆண்டுகளுக்கு முன் புலத்தில் எத்தனை அமைப்பு சிறு பத்திரிகைகள் வந்தன?
  அவற்றிற்கு என்ன நடந்தது? உங்கள் ஒவ்வொருவருடைய ஈகோ போட்டி பொறாமை நான் நான் என்ற அதிகார மமதை இவைதான் அழிவுக்கு காரணம். ஒருவன் உங்களைவிட மாக்சியம் பேசினால் பொத்திக்கொண்டுவந்துவிடும் உங்களுக்கு பிறகென்ன. பொறுக்கி நாயே பேயே என்று எழுதவேண்டியதுதான். இந்தப்பாதையெல்லாம் கட்டமுதல் உங்களை சுயவிமர்சனம் செய்துகொள்ளுங்கள். இணையத்தளங்களை வாசிப்பது இப்போது அறிவுதேடி அல்ல.செந்தில் வடிவேல் பாணி கொசுப்புக்களை ரசிக்கத்தான். எங்களுக்கும் பொழுதுபோகவேண்டும்.// ராஜன்

  ராஜன் உங்கள் கருத்து சிந்திக்க் தூன்டுகிறது.

 14. மூன்றாவது பாதை என்றவுடன்>பேய்ப் படங்களில் சிலுவையைக் கண்ட பேய்மாதிரி> வெருண்டு ஓடுதுகள்> சில பேய்க் குஞ்சுகள்! குஞ்சுகளே! அசோக் கேட்டது> பிரபாகர+மகிந்தப் புலிகளின் அரசியலக்கு அப்பால் ஆன மூன்றாம் நிலை பற்றியதே! இன்றைய இலங்கையின் சமகால அரசியல் யதார்த்த நிலை இதையே சுட்டி நிற்கின்றது! இதில் நான் சொல்வது பிழையானால் நீங்கள் உங்கள் யதார்த்த அரசியலை முண்வையுங்கள் நாங்களும் உங்கள் பின்னால் வருகின்றோம்!

 15. மூன்றாவது பாதை என்கிறத ஏதோ அசோக் கண்டுபிடிச்சமாதிரி கனவுகாணுறியள். இரண்டுக்கு அங்கால மூண்டாவது அல்ல முப்பதுகருத்தும் இருக்கும். நல்லது இருக்கட்டும். ஆனால் பாருங்கோ இங்ச இருந்துகொண்டு பாதை கட்ட வெளிக்கிடுறது அங்க இருக்கிற சனத்துக்கு பாடை கட்டுறவேலைதான். ஆரைத்தான் ஆசை விட்டுவைக்குது.

 16. இப்ப உங்களைப் போன்ற “சமூக விஞ்ஞானிகளின்” கணடுபிடிப்பு என்னவென்றால்> இங்கே இருந்து பாதை காட்ட வெளிக்கிடுகிற வேலை! வைய பாருங்கோ!> ஆர் இஞ்சை இருந்து பாதை காட்ட வெளிக்கிட்டது! இணைய தளங்களில் கட்டுரைகள் கருத்தாடல்கள் நடைபெறுகின்றுது! இதை நாட்டில் உள்ளவர்களில்; பலரும பார்க்கின்றனர்! கருததுக்களையும் முன்வைக்கின்றனர்! அவ்வளவுதான்! உங்கள் அகராதியில் இது பாதை காட்டலோ? தமிழ் மக்களின் சுயநிர்னய உரிமைக்கான போரை> யாரும் எங்கிருந்தும் ஏற்றுமதி இறக்குமதி செய்யமுடியாது! அதுசரி உங்களிடம் மூனறல்ல முப்பது இருக்கு எனகிறீர்கள் அதல் ஒன்றை சொன்னால் நாங்களும் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்! பின்பற்றலாம!

 17. துடைப்பான்!!!!
  ஊர்வம்பை விலைகொடுத்து வாங்கிறதை விட்டுப்போட்டு உருப்படியாக நீங்க கடந்த 25 வருடமா வீட்டுக்கும் நாட்டுக்கும் என்ன செய்தீங்க என்று கொஞ்சம் யோசிக்கலாமே இப்போதைக்கு நீங்க எல்லாம் அவியாத பருப்பு காலாவதியாகி கன நாளாச்சு .

 18. தமிழர் தரப்பின் சிந்தனைனவாத தன்மை மழுங்கடிக்கப்பட்டுள்ளது இதற்கு காரணம் ஒரு சிலரின்
  தான் தோன்றித்தனமான செயல்பாடுகள் தான் காரணம் அவன் என்ன சென்னால் என்ன நாங்கள் செய்ய
  வேண்டியதை செய்ய வேண்டிய காலகட்டத்தில் செய்யவில்லை எனிமேலாவது அவன் இவனை பாராதீர்கள் உங்களுக்கு சரியானதை செய்யுங்கள் காலங்கள் கடந்துவிடவில்லை முகதுதி வேண்டாம்
  பல பாதையால் சென்றாலும் வந்து சேரவேண்டிய இடம் ஒன்றாக இருந்தால் சரி போராட்டமே வாழ்க்கை வாழ்க்கையே போராட்டம் தமிழருக்கு வழி பிறந்தால் சரி

 19. துடைப்பானின் குறிப்புக்களைப் பார்த்தேன். மனச்சாட்சியுள்ள ஒரு ஆத்மாவின் அல்லற்படுதலாகவே அதனைக் காண முடிகிறது. டால்ஸ்டாய் புத்துயிர்ப்பில் சொல்வது போல மனச்சாட்சியுள்ள மனிதன் அவ்வாறு தான் இருத்தல் சாத்தியம். தொடங்குதலும் செயற்படலும் தவறு எனக் காணும் போது தூக்கியெறிதலும் மீளவும் தொடங்குவதும் என அது தொடரும். இது அரசியல் தனிப்பட்ட வாழ்வு சமூகவெளி எதற்கும் பொருந்தும். துடைப்பானை அவ்வாறான ஒரு மனிதராகவே என்னால் உணர முடிகின்றது.
  இந்த உலகில் தவறிழைக்காதவர் என்று எவரையும் சொல்வது சாத்தியமில்லை. அப்படித் தவறிழைக்காதவர் யாராயிருக்ககூடும் எனில் எவ்வித செயற்பாடுமற்று இருக்கும் ஒருவரே தவறேதும் இழைக்காமல் இருக்க முடியும். (யாராவது ஒருவர் தேவையான போதுகளில் தேவையானபடி செயற்படாமல் இருப்பதே ஒரு தவறு என்று யாராவது வாதிடக் கூடும்.)
  ஆனால் நாங்களோ எங்களைத் தவிர மற்ற பெரும்பாலானவர்களை தவறிழைத்தவர்களாகவே தவறானவர்களாகவே இனம் காண்கிறோம். இது ஒரு நைந்து போன குட்டிப+ர்ஷ{வாப் பார்வை.
  இது இடதுசாரி இயக்கங்களாக தம்மைக்காட்டிய இயக்கங்களிடமும் இருந்தது என்பது தான் மிக முக்கியமானது. அது அவர்களின் தவறுமல்ல. நமது சமூக அடித்தளம் குட்டிப+ர்ஷ{வா அடித்தளத்தைக் கொண்டது.
  உதாரணமாக இரயாகரனையோ அல்லது சிறிரங்கனையோ துடைப்பானையோ என்னையோ எடுத்துக் கொள்ளுங்கள். நமது வர்க்க அடித்தளம் எது? குட்டிப+ர்ஷ{வா அடித்தளம் தானே?
  அடித்தளத்தில் உள்ளது தானே மேலே வரும். அதற்கு நல்ல உதாரணம் இரயாகரனும் சிறிரங்கனும் துடைப்பானிடம் சுயவிமர்சனம் செய்யக் கோருவது. அவர்கள் இருவரும் சுயவிமர்சனம் செய்து கொண்டதாக நான் எங்கும் அறியேன்.
  இந்தக் குட்டிப+ர்ஷ{வா விளையாட்டு இடதுசாரி இயக்கங்கள் எல்லாவற்றிடமும் போதியளவுக்கு இருந்துள்ளன. சுயவிமர்சனம் என்பதை அவர்கள் புரிந்து கொண்டது இரண்டு வடிவங்களில். தமது வீரப்பிரதாபங்களை முன்வைப்பதற்கும் தமது செயற்பாடுகளுக்கான நியாயங்களை நிலை நிறுத்துவதற்கும் சுயவிமர்சனத்தைப் பயன்படுத்தினார்கள். இதனைப் புரிந்து கொள்ளாத மனச்சாட்சியுள்ள தோழர்கள் உண்மையில் தமது தவறுகளை தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த தவறுகள் உட்பட அனைத்தையும் நெக்குருகி மனம் ஒப்பினார்கள்.
  இறுதி விளைவு என்னவென்றால் ஏன் இப்படி ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கினோம் என அவர்கள் வருந்துமளவிற்கு இந்த குட்டிப+ர்ஷ{வாத் தலைமைகள் அதனைத் தனிப்பட்ட ரீதியில் பயன்படுத்தியது தான்.
  அதே குட்டிப+ர்ஷ{வாத் தலைமைகள் தான் இப்போது துடைப்பானிடம் சுயவிமர்சனம் கோருகின்றன.
  துடைப்பான் அந்த குட்டிப+ர்ஸ{வாப் பார்வையிலிருந்து சற்று விலகியிருப்பது அவரது எழுத்தில் தெரிகிறது. அவருடைய எழுத்தில் “நண்பர்களே நாம் என்ன செய்யலாம்” என்று கலந்துரையாடுவதற்கான ஒரு அழைப்புத் தெரிகிறது. ஆனால் இரயாவிடமும் சிறிரங்கனிடமும் குட்டி ப+ர்ஷ{வாத் தலைமைக்கேயுரிய “நீ முதலில் சுயவிமர்சனம் செய்” என்கிற அதிகாரத் தொனி தெரிகிறது.
  விடுதலை என்பது முதலில் தன்னளவில் இருந்தே ஆரம்பிக்கிறது. பல பலஅர்த்தங்களிலும் பல பல தளங்களிலும்.
  இனிமேலாவது எமது சுட்டுவிரல் ஒருவரை நீக்கி நீளும் போது நான்கு விரல்கள் எம்மையே சுட்டுகின்றன என்கிற மிகச் சாதாரண உண்மையையாவது புரிந்து கொள்வோமா? – பெரிய பெரிய விடயங்களைப் பேசுமுன்.

 20. RAVI – SAINT GALLEN on July 14, 2009 1:31 pm துடைப்பான் புலத்தில் உங்கள் எதிர்ப்புரட்சி அரசியலின் தாற்பரிய என்ன? புலத்தில் என்ன புடுங்கின நீங்கள் போங்கடா நீங்களும் உங்கட புலமும் பொத்திக் கொண்டு கிடங்கோ அதுவும் உங்களவில் புரட்சிதான்.//

  துடைப்பான்!!!!
  ஊர்வம்பை விலைகொடுத்து வாங்கிறதை விட்டுப்போட்டு உருப்படியாக நீங்க கடந்த 25 வருடமா வீட்டுக்கும் நாட்டுக்கும் என்ன செய்தீங்க என்று கொஞ்சம் யோசிக்கலாமே இப்போதைக்கு நீங்க எல்லாம் அவியாத பருப்பு காலாவதியாகி கன நாளாச்சு //

  ரவித் தம்பி இவங்களால எந்தப் புரட்சியும் செய்யமுடியாதுதான் ஆனால் உங்கட கிழக்கின் விடிவெள்ளி பிள்ளையானாலும் உங்கட ஆலோசகரும் பிள்ளையானின் கூலிக் குழுவின் ஆலோசகரும் அரச அடிவருடியுமான சின்ன மாஸ்ரர் ஸ்ராலின் நிறைய புரட்சி பண்ணுவாங்க பாத்துக் கொண்டிருங்க. ரவித் தம்பி உங்களால ஆளுக்காள் சிண்டுமுடியுற புரட்சியைத் தவிர வேறென்னதான் செய்ய முடியுது. ஒருதரம் கண்ணாடி முன்னால் உங்கட குள்ள முகத்தை பாருங்கோ. இவ்வளவு காலமா பிள்ளையானைப்பற்றி சின்னமாஸ்ரரைப்பற்றி யாராவது எழுதினாலே உங்களுக்கு பொத்திக் கொண்டுவந்துவிடும். நீரொல்லாம் ஒரு மனிசனே!

 21. மணி நீங்கள் ரவி -செங்காழான் என்று வந்த கொமன்ஷ் யார் எழுதியிருப்பார் என்று தோணுகிறதா?
  அது சுவீஷ் ரவி என்ற பெருமகன்தான். நானும் இந்த ஐரோப்பா நாடு ஒன்றில்தான் வசிக்கிறேன். இன்றுதான் இணையத் தளங்களை படிக்க முடிகிறது. வேலை வேலை. வேலைக்கு போகாவிட்டால் அதோ கதிதான். ஆனால் வேலைவெட்டி இல்லாமல் பிள்ளையானுக்கு தூக்குக்காவடி தூக்கி அவருடைய கொலை கொள்ளை அடாவடியலுக்கு பிரான்சிலிருந்து மாதத்திற்கு குறைந்தது இரண்டு தடவை விமானப் பயணம் பண்ணிய ஞானத்தை (ஷ்ராலின்) இந்த சுவீஷ் ரவி கேள்விகள் கேட்கமாட்டார். வேலைவெட்டி இல்லாத ஞானம் எப்பபிடி பிரான்சில் சொகுசாய் வாழ்கிறது.? இதல்லாம் சுவீஷ் ரவிக்கு பிரச்சினை இல்லை. தனக்கு உறவாக உள்ள எவனும் என்ன அயோக்கியமும் செய்யலாம். இவருடைய கண்ணில் இதெல்லாம் படாது. பிள்ளயைhன் சனநாயக சக்தி இந்த பிழைப்புவாதிக்கு. எங்கையாவது பிள்ளையானை ஞானத்தை பற்றி இவர்களுடைய சனநாயக விரோத செயல்களைப்பற்றி இந்த சுவீஷ் ரவி மூச்சு விட்டுள்ளதா? இல்லவே இல்லை. பிள்ளையான் குழு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நேரத்தில் இந்த சுவீஷ் ரவி ஞானத்தை பிள்ளையானை கண்டித்து ஒரு வார்த்தை சொன்னாரோ? தன்னுடைய தனிப்பட்ட பிழைப்புவாத உறவுகளுக்காக வாழ்க்கை நடாத்தும் சுவீஷ் ரவி சமூகத்தைப்பற்றி கதைப்பதற்கு எந்த அருகதையும் அற்றவர்.

 22. ஒன்று மட்டும் உண்மைதாங்க …
  இந்த பிரான்சிலை இருக்கிறவங்கள் மட்டும் எல்லாத்திலையும் ஆக்டிவ்வா இருக்கிறீங்க. லா சாப்பால் என்கிற இடத்தில கொ;ளையெல்லாம் நடக்கிறது என்று ஒரு தமிழ் வலையில் பார்க்கமுடிந்தது. அனைத்துவகையிலும் பிரான்ச கலக்குது சாரே!
  பணம் சம்பாதிக்காம பிளைட்டில பறக்கிறீங்க
  அறிவில்லாவிட்டாலும் தமிழநாட்டில வந்து நெசறய்யப் பேசுறீங்க
  அடிப்படையில் எதுவும் இல்லாவிட்டாலும் அரியல் பண்ணிறீங்க…

  ஆனா கூட்டிக் கழிச்சு பாக்கையில மொத்தமா ஒரு பத்துப்பேருதான் மாறி மாறி பின்ர்ட்டம் விடுறீங்கண்ணு மொதப் பின்னூட்டம் படிக்கையில தெரியுது.
  என்னவோ போங்க

 23. நண்பர்காள் நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் பார்த்தேன்.

  இலங்கையின்; சமூகஇ பொருளாதர நிலையில் மிகப் பெரும் மனித அவலங்கள் தோன்றி வருகின்றன.. எல்லா மட்டத்திலும் சமூக அநீதி நிலவுகிறது. எல்லா மட்டங்களிலும் சாதாரண மக்களின் வாழ்வு ஒடுக்கப்பட்டு வருகிறது. அது ஒரு பொதுவிதியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதொன்றாக ஒன்றாக மாற்றப்பட்டு வருகிறது. ஆனால் இச்சமூக அநீதிக்கெதிரான போராட்டங்கள் மிகக் குறைந்தளவில் நடைபெறுகிறது.

  பாராhளுமன்றப் பாதையின் இறுதி இழிநிலையை இலங்கை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். கட்சி அரசியல் என்பது அழிக்கப்பட்டு வருகிறது. ஒரு ஆதிக்க கும்பல்கள் என்ற நிலையில் பாராளுமன்ற வாதிகள் அணிசேர்ந்து செயற்படுகின்றனர். அதிகாரத்தில் – நாட்டின் சொத்தில் ஏதாவது ஒரு பங்கு என்று அணிதிரள்கிறார்கள் – அணி திரட்டப்படுகிறார்கள்.

  அவர்களுக்கு “சிங்கள் பௌத்தர்களின் விடுதலை” என்பது ஒரு ஆயதம் மட்டுமே. மக்களை கவர்வதற்கான தமக்கெதிராக புலிகளை அழிப்பதற்கான ஒர ஆயுதம். மற்றப்படி மக்கள் ஒடக்குமுறையே அவர்கள் அரசியல். சிங்கள பௌத்தர்கள் தமது உரிமைகளுக்காகப் இந்த அரசுக்கெதிராக போராடுகiயில் தமிழ் மக்கள் மீதான அல்லது புலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகளையே பிரயோகிப்பார்கள்.

  மக்கள் அணிதிரண்டு போராடும் வரை சிங்கள மக்களின் காவலர்களாக வேசம் போடலாம்..

  இவர்களிடம் தான் ஒரு பெரும் இராணுவ எந்திரமும் கேள்வி கேட்க முடியாத அதிகாரமும் குவிந்து வருகிறது. எல்லா அரசாங்க இயந்திரமும் அவர்கள் காலடியில் மண்டியிட்டுக் கிடக்கிறது.

  கொஞ்சம் சுதந்திரமாகச் செயற்படுகிற ஊடகம்இ நீதித்துறை போன்றவற்றின் மீது இறுதித் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறார்கள். அவையும் அதிகாரக் கும்பல்களுக்கு பணிந்து சேவகம் செய்யும் நிலைக்கு இட்டுச் செல்லப்படும்.

  மக்கள் ஒன்று திரட்டப்படவோஇ அரசியல் மயப்படுத்தப்படவோஇ சமூக அநீதிக்கெதிராக போராடச் செய்யவோ படாத நிலையே உள்ளது.

  தமிழ் மக்கள் இனரீதியான ஒடுக்குமுறையையும் துணைப்படைகளின் அடக்குமுறைகளையும் சேர்த்து அனுபவிக்க வேண்டியிருக்கிறது. தமிழ் மக்களின் அடக்குமுறைக்குட்பட்ட வாழ்வு ஒரு சமூக அநீதியாக தொடர்கிறது. வெளிப்படையாகத் தெரிகிற அரசின் யுத்த அழிவுகள்இ இராணுவ அடக்கு முறைக்குள்ளான நிலைகளுக்கப்பால் மக்கள் கொடுர அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

  இந்த அரச அமைப்புள் இலங்கை மக்களின் விடுதலைக்கான இ சமூக முன்னேற்றத்திற்கான தீர்வைத் தேட முடியாது. தமிழர்களின் இன விடுதலைக்கான தீர்வையும் தேட முடியாது.

  இச்சமூக அவலங்களே நாம் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உண்டு என்பதை காட்டுகிறது.

  சமூக அவலங்கள் குறித்து அக்கறையுடன் வாழ்வோம்.

  அவற்றை வெளிக்கொண்டு வருவோம்.

  சமூக அவலங்களுக்கான காரணங்களை இணங்காண முயல்வோம்.

  சமூக அவலங்களிலிருந்து விடுபடுவதற்கான மக்களின் போராட்டங்களை அறிவோம்.

  போராடும் மக்களுடன் இணைவோம்.

  போராட்டத்திற்கான பாதையும் போரட்டமும் தொடரும்.

  இன்று முட்கம்பி வேலிகளுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ள மக்களின் அவலங்கள் குறித்தும் அவர்களின் வாழ்வுக்குரித்தான உரிமைகள் குறித்தும் பேச வேண்டும்.

  மக்களின் அழிப்பிற்கு காரணமாக இருந்துவர்களை – அவர்களின் மக்கள் விரோதச் சிந்தனைகளை அம்பலப் படுத்த வேண்டும்.

  அவர்களே இலங்கை மக்களை ஒடுக்குபவர்கள்.

  சாத்தியமான வழிகளில் மக்கள் விரோதிகளிற்கு – மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட வேண்டும்.

  சமூக நீதி நிலை நாட்டப்படுவதற்காக இணைவோம். செயற்படுவோம்.

  இலங்கையின் வட கிழக்கில் – ஈழத்தில் – பல்லாண்டு ஒரு யுத்தச் சூழ்நிலை அதன் அழிவுகள் நிலவிய போதும்இ மகிந்த ராஜபக்ச அரசு தொடுத்த போரில் முழு அழிவை சந்தித்த போதும் இ அரசுடன் இணைந்தள்ள டக்ளஸ்இ கருணா போன்றோர் சரணாகதி அரசியலைப் பேசி நிற்கிற போதும்இ தொடர்ந்தும் மக்கள் போரடியே தங்கள் உரிமைகளைப் பெற முடியும். மக்கள் தங்கள் உரிமைகளுக்காக தங்களுக்குத் தெரிந்த – தங்களுக்குச் சாத்தியமான வழிகளில் எல்லாம் போரடியே வாழ்கிறார்கள்.

  நட்புடன்

  வி.ஆர்

 24. how can Tamils live with muslim? They talk tamil and claim that they are sunnny and Arab who never invented anything because they are so stupids. They are not real muslims and they converted Tamils into islam for money. you can purchase them for money.they dont love islam but money.

  2nd Eelam war started because army killed muslims. these bastards joined the LTTE and fight for army. Praba sacked all of them.

  they were in jaffna and selected targets for army. There were expelled because pRABA WAS A KIND PERSON AND DID NOTWANT TO INDENITFY AND EXECUTE THEM.

  MUSLIM SHOULD LEAVE NORTH AND EAST AND GO AND LIVE IN COLOMBO. THEY WILL SEE ANOTHER 1914. EITHER SUPPORT TA,IL EELAM AND GO TO HELL

 25. we have nothing agains muslims and what was said here is wrong and its trobling the peace among us.every one have right to claim their own and live by their own.we in a civilized world not in the dictator word.please think before you comment.
  bramins who make muslims a bad people and budda was killed by them,in sithambaram nanthanar was murderd by them too.
  we tamil and our way of life is saivam bramins have nothing to do with but they been controled us,rule us,we been slave by bramins.we need to open our eyes to see a world and find how we get locked by them.
  muslims is our brothers and they dont challenge our way of life,is bramins still cost us trouble.

 26. நட்புடன் அசோக்கிற்கு,

  உங்கள் (துடைப்பானின்) குறிப்பில் செங்காழன் ரவி என குறிப்பிடப்பட்ட பின்னூட்டத்தை நான் இடவில்லை. ஏற்கனவே ரவி என்ற பெயரிலும்கூட பின்னூட்டமிடப்பட்டிருந்ததையும் நான் பொருட்படுத்தியிருக்கவில்லை. இந்தமாதிரியான எழுத்தை பின்னூட்டமிடுமளவிற்கு நான் இல்லை. உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதோ இல்லையோ தெரியாது என்றபோதும் அதை ஒருமுறை உங்களிடம் கூறிவிடவேண்டும் என்று நான் கருதியதால் இதை எழுதியுள்ளேன். பிற பின்…
  நட்புடன் ரவி

 27. வணக்கங்க
  ஈ என் டி எல் எப்பு கட்சி தற்போது நம்ம பிரதமரிடம் பேசியிருக்கிறாங்க.

  இதில இந்த வெப்சைட்டுக் காரங்க என்னத்தை nhசல்ல வாரீங்க
  ஒண்ணுமே போடலியே.

  எனக்கென்னமோ ஈழத்தமிழங்க எல்லாத்தையும் கையவிட்டு நிக்கிறதக் காட்டிலும்
  இந்தியாவோட சேந்து அமதிப்படய அழெச்சி உங்க மண்ணயாவது காப்பாத்தலாமா

  அப்பிடிப்பாரத்தா ஈ என் டி எல் எப்ப சரிதாண்ணு தொணுதுங்க

 28. வெட்ரி,உங்களுக்கு தமிழ்னாட்டுத்தமிழ் சரியாக வரவில்லை.எனவே விட்டுவிட்டு உங்கள் வரண்ட கருத்துக்களை உங்க லங்கா ட்கமிழிலேயே சொல்லுங்க.

 29. இராவணா
  என்னுடைய வரண்ட கருத்துக்கள் கிடக்கிறது போங்க…
  நீங்களாவது கொஞ்சம் தண்ணி விட்டிருக்கலாமே?
  இந்த பின்னூட்டத்தில எங்கயுமே ஒங்களைக் காணோம்
  எனக்கு மட்டும் பதில் சொல்ல ஓடியாந்தீட்டிங்க?
  இடிக்குதில்ல…
  அதான் தள்ளி நில்லய்யாங்கிறேன்…
  ………..
  ராவணனாம் அதான் …………………………….ரசபக்ச அடிச்சுத் துவைச்சிட்டாம்ல.. பிறகவு என்ன வேண்டிக்கிடக்கு

Comments are closed.