நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் : மாரிசெல்வராஜ்

வணக்கம் எனக்கு எட்டு வயசாகும்போது என் கண்முன்னே எங்கள் வீடு எரிந்துகொண்டிருந்த நடு இராத்திரி ஒன்றில் எழுத நினைத்த கடிதம் .வெகு காலதாமதம் ஆகிவிட்டது இந்த இருக்கையும் கணிப்பொறியும் எனக்கு கிடைப்பதற்கு .

தேவர்மகனில் தொடங்கி உன்னைபோல் ஒருவன் வரை பார்த்தாகிவிட்டது உங்கள் பூனூல் முற்போக்குதனத்தையும் அதிகார அறிவின் அட்டகாசத்தையும் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க நான் ஒன்றும் என் அப்பன் செல்வராஜோ என் தாத்தன் நொண்டிபெருமாளோ இல்லை மூன்றாம் தலைமுறை நான்…

சமீபத்தில் நண்பர் ஒருவர் மூலம் இணையதளத்தில் சண்டியர்க்கு ஆதரவாக நீங்கள் போதையில் ஆற்றிய முற்போக்கு உரையை பார்த்தேன் சரி அதற்கு அப்புறம் வருவோம். முதலில்

முற்போக்குவாதி ,பூனூல் துறந்த பிராமணன் , பெரியாரின் கொள்கையை கடைபிடிப்பவர் என்றெல்லாம் சொல்லிகொள்ளும் நீங்கள் பல பிரிவு மக்கள் பல அடுக்கு சாதி கூறுகளுடன் வாழும் நம் நாட்டில் ஒரு சாதி மக்களின் வாழ்க்கை முறையை , அவங்க அரிவாள் பிடித்த முறையை ,அவர்கள் அரிசனனுக்கு சந்தோசமாய் கூழ் ஊத்திய முறையை , மீசை முறுக்கி வளர்த்த முறையை , சாராயம் குடித்த முறையை , சக மனிதனின் சங்கறுத்த முறையை காட்டுகிறேன் என்று “தேவர் மகன் “என்ற தலைபோடு ஒரு திரைப்படம் எடுத்தது ஏன்?

· ஒரு பிரிவு மக்களின் வன்முறையை ஆதிக்கத்தை அவர்களின் அறியாமையை காட்டி அவர்களை உசுப்பேத்திவிடவா இல்லை அவர்களின் சாதிய வேல்கம்புகளுக்கு கூர் தீட்டிவிடவா?

· அல்லது எப்போதும்போல மீசை முறுக்க ஆசைபட்டு பணம் சம்பாதிக்கவா

அது எப்படி “போற்றிப் பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே” இதன் விளைவையும் வலியையும் இன்றுவரை நீங்கள் உணர்ந்ததுண்டா……

சொல்கிறேன் கேளுங்கள் ஒருவேளை நீங்கள் அசட்டுபோதையில் இருந்தாலும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் ……….

· ஆறாம் வகுப்பு மாணவர்கள் கூட பள்ளிகளில் அடித்துக்கொண்டார்கள்,

· திருமண சடங்கு விசேச வீடுகளில் ஏன் கோவில்களில் கூட உங்களின் முற்போக்கு பாடல் ஒலித்து கிராமங்களின் ஒற்றுமையை ஆடவைத்தது.

· வெள்ளரிக்காய் விற்கும் வயதான மூதாட்டிக்கூட வலுகட்டாயமாக பாட வைக்கபட்டாள்.

· எங்களுக்கெதிரான உற்சாகத்துடன் மீசைகள் முறுக்கபட்டன

· வேட்டிகள் மடித்து அதிகார ஆணவத்தோடு கட்டபட்டன

மூன்று மணி நேரம் நீங்கள் மீசை முறுக்கி அரிவாள் தூக்கி கொலைகளையும் செய்து கடைசி மூன்று நிமிடத்தில் “ டேய் அரிவாள்களை கீழ போடுங்கடா” என்று சொன்னது நீங்கள் விரும்பியதை போலவே யாருடைய காதிலும் விழவில்லை போலும் இத்தனைக்கும் பிறகும் எதிர்வினை புரியாமல் இருக்க நாங்கள் என்ன எருமை மாடுகளா….கை ,கால் , உயிர் , உடைமை இழக்கத்தான் செய்தோம் . ஆனால் நீங்களே எதிபார்க்காத ஒரு எழுச்சியை யாம் பெற்றோம். இத்தனைக்கும் பிறகும் உங்கள் சினிமா வாழ்க்கைக்கு பல உதடுகள் உச்சரிக்ககூடிய வெற்றி தேவைபட்டபோது மறுபடியும் மனசு கூசாமல் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்களின் அதே போர்களத்தை தான்.

”சண்டியர்” யார் இந்த சண்டியர் நீங்களா ஐயோ! நீங்கள் பரமக்குடி சாஸ்த்திரிகள் ஆச்சே…ஐரோப்பிய அறிவை பெற்ற ஒரே தமிழ் சீர்திருத்த சிந்தனையாளர் ஆச்சே! அப்படியெனில் யார் அந்த சண்டியர் மறுபடியும் அதே ஒரு பிரிவு மக்கள் ஆனால் இப்போது கருப்பு சட்டை முறுக்கு பட்டை ,கறுக்கு அரிவாள் சகிதம் வந்து இது தென் தமிழகத்தில் சாதி கலரவத்தை தூண்டிய “ தேவர்மகனின் இரண்டாவது பாகம் “ என்ற அருவருப்பான அறிவிப்பு வேறு…..சண்டியர் என்ற தலைப்பை தயவுசெய்து மாற்றிகொள்ளுங்கள்” என்று ஒரு பாதிக்கபட்ட ஒரு சமுக மக்களின் சார்பாக அதன் பிரதிநிதி சொன்னதற்கு எவ்வளவு ஆரிய அதிகாரத்தோடு உங்கள் பதிலை சொன்னீர்கள்..

· சண்டியர்னு பேர் வைத்தா கிருஸ்ணசாமி கோவித்துகொள்வார் என்று அதனால கிட்டிவாசல்னு பேரு வைக்கலாமென்றால் அதுக்கும் கோபித்துக்கொண்டால் என்ன பண்ணுவது.

எவ்வளவு அருவருப்பான ஆணவமான நாகரிகம் இல்லாத பதில். நீங்கள் மன்மதலீலை என்று பெயர் வைத்தற்கா அவர் எதிர்த்தார். நீங்கள் தேவர்மகன் என்று பெயர் வைத்தபோதுகூட யாரும் எதிர்க்கவில்லையே.. ஆனால் அதன் மூலம் வந்த விளைவும் ஏற்பட்ட வலியையும் பார்த்து பயந்து பெயரை மாற்றிகொள்ளுங்கள் என்று ஒரு ஒடுக்கபட்ட சமூக மக்களுக்காய் கேட்டதற்காய் இவ்வளவு கொச்சையான பதில் .. சமூக அக்கறை இல்லாதவன் எப்படி கலைஞன் ஆக முடியும். இந்த முற்போக்கு குசும்பும் ஆணவமும் இன்று வந்ததில்லை உங்களுக்கு உங்கள் தாத்தன் முப்பாட்டன் காலத்து ஆரிய குசும்பு என்று எங்களுக்கு தெரியும்…..

· எப்படி ஒரு சினிமாவின் பெயரை மாற்ற சொன்னதால் நாங்கள் கலாச்சார காவலர்களா….மனிதனை கழுவ மரத்தில் ஏற்றி கொன்ற சமண கலாச்சாரம் எங்களுடையதா

யாருக்கு வேண்டும் உங்கள் கலாச்சாரம். உங்களுக்குதான் வேண்டும் எங்கள் கலாச்சாரம் நாங்கள் அடிமையாய் இருந்த கலாச்சாரமும் நாங்கள் அரிவாள் தூக்கிய கலாச்சாரமும் உங்களுக்குத்தான் வேண்டும்.அப்பொதுதானே அதில் உங்களை போல ஆரிய நாட்டாமைகள் குளிர் காய முடியும். அப்புறம் என்ன சொன்னீர்கள்……

· ஐந்து வருடத்திற்குள் மாறிப்போகும் அரசியல்வாதிகளை போல எல்லாமே மாறி போய்விடுமா,,,

திரு .கமல் அவர்களே….

எதுவும் எங்கும் மாறவில்லை. உங்களை போன்றவர்கள் இருக்கும்வரை எதுவும் மாற போவதுமில்லை யாரும் எதையும் மறக்க போவதுமில்லை.

இன்றைய சூழலில் கிராமப்புற பள்ளிகளில் உலவும் சாதியின் உருவம் உங்களுக்கு தெரியுமா …….பள்ளி பாடபுத்தகங்களில் முதல் அட்டையிலோ இல்லை வேறு பக்கங்களிலோ தலித் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகைப்படம் இருக்குமெனில் அவரது இரு கண்களும் பேனா முனைகளால் தோண்டி எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறதென்று……உங்களுக்கு தெரியுமா! அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பற்றிய கேள்வி வினாத்தாளில் கேட்டால்கூட அதற்கு பதில் எழுத விரும்பாமல் விட்டுவிட்டு எத்தனை மாணவர்கள் வருகிறார்கள் என்று, இன்றைக்கு சாதியின் பட்டறையை போல் ஆகிப்போன தமிழக சட்டக்கல்லூரிகளில் கல்லூரி பேப்பர்களில் இருக்கும் அண்ணலின் படத்தின் கண்கள் ஆதிக்க விரல்களில் உள்ள சிகரெட்டால் சுடபட்டுக்கொண்டிருக்கிறதென்று…… இந்த நீட்சியின் எதிர்வினையாகத்தான் நடத்தபட்டது சென்னை சட்டக்கல்லூரி பயங்கரம் . அன்றுமா புரியவில்லை உஙகள் முன்னோர் ஆதிகாலத்தில் தொடங்கிவைத்த சாதி கத்திக்கு இரு பக்கமும் கூர்மை என்று…….ஐயா, உலக நாயகரே !

· இன்னும் கண்டதேவி தேர் நடு வீதியில்தான் நிற்கிறது

· இன்னும் உத்தப்புரத்தின் சுவர் மறித்துக்கொண்டு அவமானமான சின்னமாகத்தான் நிற்கிறது.

· கொடியன்குளத்திலும் ஆழ்வார்கற்குலத்திலும் , மேலவளவிலும் ,தாமிரபரணியிலும் நாங்கள் அஞ்சலி செலுத்தி இன்னும் அழுதுகொண்டுதான் இருக்கிறோம்.

· வெண்மனியின் தீ வெக்கையும் அதன் வடுவும் அதுக்குள்ளவா எங்களுக்கு மறந்துபோகும்.

கடைசியாக “உன்னைபோல் ஒருவன்” எப்போதும்போல கடன் வாங்கிய உங்கள் சீர்திருத்த மதியை வைத்து மறுபடியும் தமிழ் மக்களுக்கு ஒரு நாசகார சதியை கற்பிக்கும் ஒரு முயற்சி……..,

· மனிதாபிமானம்

· கொலைக்கு கொலையே தீர்வு

· பிறமொழிகாரனையும் நேசிப்பது.

அடேயப்பா…….உங்கள் மனிதாபிமானத்தை தூக்கி தமிழக அரசின் புகார் பெட்டியில்தான் போடவேண்டும். மனிதாபிமானம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கே அருகதையற்ற சினிமா நடிகர்களில் நீங்களும் ஒருவர் என்பதை மறத்துவிடாதீர்கள் .

· வெண்மனி

· கொடியன்குளம்

· மேலவளவு

· ஆழ்வார்கற்குளம்

· தாமிரபரணி இதையெல்லாம் கூட விட்டுவிடுங்கள் ஈழத்தில்

உன் மொழி பேசும் உன் சகோதரன் கொத்து கொத்தாய் செத்து மடிந்தபோது என்ன செய்து கிழித்துவிட்டீர்கள் என் மனிதாபிமான காவலரே……….ஆமாம் அது என்ன வசனம்….

· பம்பாய்ல எவனுக்கு என்ன நடந்தாலும் நாம இங்க சும்மா இருப்போம். நமக்கென்ன அதைப்பற்றி கவலை அவன் என்ன நம் மொழியா பேசுகிறான் இல்லை நம் சொந்தகாரனா…….

அடங்கொப்புரான ……ஐயா அறிவிஜீவி ! தாமிரபரணியில் பச்சை குழந்தையோடு சேர்த்து பதினேழு பேர் பிணமா மிதந்த போது ஏற்கனவே வறலாற்று பிழைக்காக சுட்டுக்கொள்ளப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை சுட்டுகொள்ள பூனூலோடு புறப்பட்டவர் தானே சினிமாவில் நீங்கள்…….அப்புறம் என்ன?

· கொலைக்கு கொலைதான் தீர்வா

குடிச்சுப்புட்டு தன் கவுரவத்துக்காக இருபதுபேர் சாக காரணமாக இருந்த விருமாண்டிக்கு தூக்கு தண்டனை கொடுக்ககூடாது என்று சொன்ன நீங்கள் ஒரு சிறுபான்மை சமூகத்திற்காக அதன் சமூக நீதிக்காக அறியாமையின் காரணமாக வன்முறையை தேர்ந்தெடுத்து தன் வாழ்வை பணையமாக வைத்து பழிக்கு பழிவாங்கியவர்களை நீதிமன்றமே தண்டனை கொடுத்தாலும் அவர்களை கடத்தி வந்து குண்டு வைத்துதான் கொலை செய்ய வேண்டுமா?

“வாழ்க உங்கள் ஆரிய ஜனநாயகம்” நீங்கள் சொன்னதுபோல் எந்த ஒரு மனிதாபிமான குப்பனும் சுப்பனும் இந்த காரியத்தை செய்யத்தான் மாட்டான் மிஸ்டர் களவானி காமன்மேன் கமல் அவர்களே உங்களின் ஆரிய முற்போக்கு அறிவின் அடிப்படையில் சமூக போராளிகள் பொறுக்கிக்கு பிறந்தவர்கள் என்ற மோசமான அருவருப்பான கருத்தை நீங்கள் சொல்வதற்க்க்காக”துரோக்கால்” என்ற படம் வரும்வரை காத்திருந்தது ஏன்? அதே போல் ஆரிய மனிதாபிமான கோபத்தை வெளிப்படுத்த ”வெட்னஸ்டே”வரும்வரை காத்திருந்தது ஏன்?…

கடைசியாக திரு. கமலஹாசன் அவர்களே ! நீங்கள் கருப்பு சட்டை அணிவதால் உங்களின் ஆரிய வெள்ளைத்தோல் எங்களுக்கு மறந்துவிடும் என்று நினைக்காதீர்கள்…..பூனூலை நீங்கள் துறந்திருக்கலாம் ஆனால் உங்களின் தலைமுறையின் பூனூல் தடம் உங்களை விட்டு போகவில்லை என்பது எங்களுக்கு தெரியாமல் இல்லை. உண்மையிலே நீங்கள் ஒரு சிறந்த நடிகர் என்பதை எல்லாராலும் ஏற்றுக்கொள்ளபட்டுவிட்டீர்கள் அப்புறமென்ன நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கும் , பாதுகாப்பாய் இருப்பதற்கும் சகலகலாவல்லவனும் அவ்வைசண்முகியும் ,தசாவதாரமும் போதுமே…..உங்களின் ஆரிய முற்போக்கை அம்பலபடுத்தும் உன்னைபோல் ஒருவனும் , சாதி வாழ்வை காட்டி மக்களை பிரித்துக்காட்டும் தேவர்மகனும் , விருமாண்டியும் எதற்கு…

கமல் அவர்களே, உங்களுக்கு திரைகதை சாதாரணமாக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு வாழ்வியலில் நாங்கள் வாழும் வாழ்க்கை முறை அசாதாரணமானது…என்பதை தயவு செய்து கொஞ்சம் கருத்தில் வையுங்கள்

இப்படிக்கு,

இன்னும் சேரி என்ற சொல்லும் வாழ்வும்

உங்கள் நாட்டில் இருப்பதால் சேரிப்பையன்

31 thoughts on “நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் : மாரிசெல்வராஜ்”

 1. 1. இந்த இடுகையை ஏற்கனவே படித்த நினைவு. இது என்ன மறுவெளியீடா? (அச்சமயம் சில பின்னூட்டங்களையும் பார்த்த ஞாபகம்).

  2. உங்கள் பிரச்சினை என்ன? கமலஹாசனின் படங்களா அல்லது அவர் பார்ப்பனராக பிறந்ததா?

  3. தேவர் மகனில் கதாநாயகன், வில்லன், காமெடியன் எல்லோருமே தேவர் சாதியினர். சண்டையே சாதிக்குள்ளேயே கோவில் முதல் மரியாதை போன்ற அற்ப விஷயங்களுக்குத்தான் நடக்கிறது.

  4. பெரிய தேவராக வரும் சிவாஜி கணேசன் உண்மையில் கள்ளர் சாதியைச் சேர்ந்தவர்தான், அதை ஏன் எடுத்துக் கூறவில்லை?

  5. அது ஒரு வணிக நோக்குள்ள படம், அதன் நோக்கம் நல்ல பொழுதுபோக்கைத் தந்து கூடவே தயாரிப்பாளரின் கையையும் சுட்டுக் கொள்ளாமல் இருக்கச் செய்வதே. அதில் வெற்றி பெற்று விட்டது.

  6. முதலிலிருந்தே கமலஹாசன் கத்தி எடுப்பதை எதிர்த்துத்தான் வருகிறார். கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் என்றெல்லாம் இல்லை. கடைசியில் நாசரின் கொலைகூட தற்காப்புக்காக செய்ததே. சுற்றி எல்லோருமே தாங்கள் அப்பழியை ஏற்றுக் கொள்வதாகக் கூறியும் போலீசில் சரணடைவது சாதாரணமாக எந்த சாதிவெறியரிடமும் எதிர்பார்க்க முடியாதது. இம்மாதிரி புது விஷயங்களுக்காகவே படம் ஓடியது.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  1. விமர்சனம் என்னவோ கமலஹாசனின் சினிமாத்தனதில் பொதிந்துள்ள பிற்போக்குக் கூறுகள் பற்றியது.
   தமிழ் சினிமாவால் பார்ப்பனியத்தின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை என்பதற்கான சான்றுகள் சிலவே இங்கு தரப்ப்பட்டுள்ளது. அதை விட, ஆதிக்கச் சாதியமும் பார்ப்பனியமும் உடன்பட்டே செயற்படுகின்றன.
   குறிப்பிட்ட ஒரு படத்தில் கமலகாசன் கத்தி எடுப்பதை எதிர்ப்பதாகச் சொன்னாலும், அப் படத்திலும் அவரது ஏகப் பெரும்பாலான பிற படங்களிலும் காணப் படுவது குரூரமான வன்முறையே. தமிழ் சினிமாவின் பிழைப்புக்கு அதுவும் கீழ்த்தரமான ஆபாசமுமே கை கொடுக்கின்றன.

 2. Ok, most of the bloggers on dalit issue… Why Only target on cinema? Is it for fame…

 3. அப்படி போடு, இவர் சாதி வேண்டாம் என்று சொல்லவில்லை இவருக்கு மேல் இருக்கும் சாதி, அதாவது இவரை பாதித்த சாதி வேண்டாம் என்கிறார். ஆனால் அந்த சாதிக்கும் மேல் சாதியர் ஒருவர் அவருக்கு கீழ் இருக்கும் சாதியின் பெருமையை சொன்னால் இவருக்கு எரிகிறது. என்ன ஒரு சாதி வெறுப்பு. நீங்கள் சொன்ன மாதிரி சாதி வேண்டாம் என்பது சாதி ஒழிப்பு கொள்கையில்லை. சாதிகள் இல்லையடி பாப்பா என்றான் ஒரு பார்ப்பனன். அதை சரியாக புரிந்து கொண்டவர் இந்த பதிவர். 

  இப்படி எழுதக் கூட இவர் எங்கு இருந்து கற்றுக்கொண்டார் என்று கேளுங்கள். மிக அருமையான எழுத்து பிரவாகம். 

 4. கமல் அன்பே சிவத்திலும் நடித்திருக்கிறார், சிவப்பு ரோஜாக்களிலும் நடித்திருக்கிறார், ச்லங்கை ஒலி, புன்னகை மன்னன் என பல படங்களில் பல பாத்திரங்களில் நடித்திருக்கிறார்.தேவர் மகன் வெளியாகி 18/17 ஆண்டு கழித்து இப்படி ஒரு கட்டுரை .உன்னைப் போல் ஒருவன் காமன்மேன் ஒரு பாத்திரம்,அது போல் சக்திவேலும் ஒரு பாத்திரம்.அந்தப் படத்தில் நீ கொலை செய்தாய், இந்தப் படத்தில் ஏன் செய்யவில்லை என்று கேட்பது முட்டாள்த்தனம்.இனியொருவிற்கு சரக்கு இல்லையென்றால் கடையை மூடிவிடலாம். இப்படி எது கிடைத்தாலும் வெளியிடவேண்டாம்.

  ’அடங்கொப்புரான ……ஐயா அறிவிஜீவி ! தாமிரபரணியில் பச்சை குழந்தையோடு சேர்த்து பதினேழு பேர் பிணமா மிதந்த போது ஏற்கனவே வறலாற்று பிழைக்காக சுட்டுக்கொள்ளப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை சுட்டுகொள்ள பூனூலோடு புறப்பட்டவர் தானே சினிமாவில் நீங்கள்…….அப்புறம் என்ன?’

  இது என்ன இழவு. ஹே ராம் மிகவும் வித்தியாசமான படம். தேவர் மகனில் வன்முறைக்கு பதில் வன்முறை வேண்டாம் என்பவனே கடைசியில் கத்தியை தூக்குகிறான்.ஹே ராம் இன்னும் விரிந்த களத்தில் வ்னமுறை,அகிம்சை குறித்து பேசுகிறது.அதைப் புரியாதவர்களுக்கு எல்லம் புரிந்த மாதிரி எழுத மட்டும் தெரிகிறது.

 5. ‘உஙகள் முன்னோர் ஆதிகாலத்தில் தொடங்கிவைத்த சாதி கத்திக்கு இரு பக்கமும் கூர்மை என்று…….ஐயா, உலக நாயகரே !’

  ஆமாம், ஒரு சுபயோக சுபதினத்தில் கமலின் 92வது தாத்தா அதை உங்களுடைய 92வது தாத்தா சாட்சியாக தொடக்கி வைத்தார். அதுதான் உலகின் முதல் கத்தி, தமிழ்க் கத்தி.

 6. This man who wrote this artcle seems to be racist, Kamal made sevaral films, Devar Magan just tells the story of an village in the southern tamil nadu, just that, any one who portait Kamal as a a person who beleve and promote caste need treatment. Virunmpandi and Devar magan are two of the master piece from Kamal.I am an indian origin tamil from Ceylon, my great grand father came from an village in the tamil Nadu, his name was Muthiah devar, we never called us as devar, we see us an indian tamil in Sri Lanka, and above all a human being.
  Pls dont charactor assainate Kamal.

 7. இது ஏற்கனவே காட்சி பதிவில் வந்த பதிவு தான், மீள் பதிவு என நினைக்கிறேன். அதே பின்னூட்டத்தை திரும்பவும் பதிவு செய்கிறேன்.
  அதே கமல் தான் உன்னால் முடியும் தம்பியில் தலித்தும் உயர்ஜாதியினரும்  திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளார். அதே சினிமாவில் தான் கர்நாடக சங்கீதம் தலித்துக்களையும் சேரும் என்று கூறி உள்ளார் (உடனே சொல்லாதீர்கள் அது ராஜ் கமல்ஸ் தயாரிப்பு அல்ல என்று, கமல் தேவர் சார்பு எண்ணம் கொண்டவராய் இருந்தால் , இந்த படத்தில் நடிக்க மாட்டேன்  என்று சொல்லி இருப்பார்.)
  நாயகனில் ஒரு நாயக்கரும், இஸ்லாமியரும், பார்ப்பனரும் நண்பர்களாக இருப்பார்கள். அவ்வை சண்முகியில் ஒரு இஸ்லாமியர் உயர் சாதி வீட்டில் சமைத்தல் ஒன்றும் தீட்டு அல்ல என்று சொல்லி இருப்பார்.சாதி மத ஒற்றுமையை வலியுறுத்தி பல படங்கள் உள்ளன- மைகேல் மதன காம ராஜன், வெற்றி விழா. அன்பே சிவம்.
  இன்னும் சொல்ல போனால், தேவர் மகன் நெல்லை சென்ட்ரலில் முதல் கட்சி பார்க்க மாவட்ட பொறுப்பாளர் அருள் இளங்கோ (நாடார்), பணகுடி ரவி (கோனார்), பொருளாளர் (ராம்ஜி யாஹூ) , கருங்குளம் ஒன்றிய செயலாளர் (எ எஸ் மணி – கோனார்), கருங்குளம் ஒன்றிய தலைவர் (மூர்த்தி- தலித்து) ஆகியோர் ஒரே வரிசையில் அருகருகே அமர்ந்து பார்த்தோம்.
  கோளாறு உங்கள் பார்வையிலும், மனத்திலும் உள்ளது நண்பரே.
  டோண்டு சொல்லி இருப்பது போல, தேவர் மகனிலோ, விருமாண்டியிலோ தேவருக்கும் தலித்திற்கும்  சண்டை என்று ஒரு காட்சியில் கூட இல்லை.

 8. premraj:
  Can you please explain what you mean by ‘racist’?
  Do not tell me that caste is not playing a role in Hill Country Tamil affairs in Sri Lanka. Even the preference for identity as ‘Indian Tamil’ has implications of class and caste today.

  கன் வாச்கன்:
  The criticism is based on K’s role as a whole, and his pretences about being ‘progressive’ and ‘left’.
  K has been associated with violence as entertainment in Tamil movies in a big way.

  1. karam Masala Can u pls give me details about how caste is playing a role in Hill Country Tamil affairs in Sri Lanka:

   I
   also wih to state that
   my I dentity as an indian tamil doses put me among the lowest,

  2. Hill Country Tamil politics is dominated by the upper castes who control much of the wealth and positions in the leading parties. Most of that is self evident if one takes a close look at the leadership rivalries. There are token ‘Dalits’ who do not make much of a difference.
   I have first hand reports of caste rivalries and of upper caste parents not wanting their children attended to by lower caste staff in nurseries. I asm sure that you would have come across a few instances.
   Much has been written on the subject, which I cannot reproduce here.

   Those who prefer to use the term ‘Inthiya vamsaavalith Thamizar’ are the elite groups wanting to distance themselves from the plantations. The rest prefer ‘Malaiyakath Thamizar’.

   1. when I said I am an indian Tamil, i ment am an tamil from estate, I was born and schooled in estate and its suroundings, the term indian tamil includes every body who has an recent indian tamil ancestory. When I was in Colombo I usually tells any one that I am from en estate. The word indian tamil mainly refers to plantation tamils, like me. Its true caste is there in the up country, it is disapperaing, my sister married a Nadar, another one married a agampdaiyar, brother a one whose catse I dont know. I my self married a girl I met in upcountry but she comes from Batticaloa, whose caste I dont know. If we stick to rules to marry with in our caste we will end up either as batchelor or homo.

    Up coutntry politics in today dominated by dalits, like Thigambaram mp Puthirasigamany x mp minister, Sathasivam, x mp, Rajan x mp, arulsamy except Thondaman and Sivalingam rest belong to dalit.

 9. நான் நினைத்த மாதிரியே இப்பதிவு ஏற்கனவே வெளியானது, ஆனால் இன்னொரு வலைப்பூவில். இரண்டிலும் நீங்களே எழுதியுள்ளீர்கள். பார்க்க: http://kaattchi.blogspot.com/2010/03/blog-post_21.html

  அங்கு 120 பின்னூட்டங்கள் வந்துள்ளன.

  ஒரு பதிவு மீள்பிரசுரம் செய்யப்படுகிறதென்றால் அதை வெளிப்படையாக சொல்வதில் என்ன பிரச்சினை உங்களுக்கு? நான் இதை சந்தேகத்துடன் குறிப்பிட்ட போதும் எந்த எதிர்வினையும் இல்லை உங்களிடம்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன் 

 10. டோண்டு ராகவன்,

  கட்டுரை அதன் முன்னைய பதிவு குறித்த விபரம் குறிப்பிடப்படாமல் இனியொருவிற்கு அனுப்பிவைக்கப்பட்டதன் விளைவே இது.

 11. கமல் பத்தி பேச யாருக்கும் தகுதி இல்லை,படம் புரியலேன்னா யதையாவது எழுத வேன்டியது

  1. anand சார்
   அப்படீயே சுப்ரீம் கோர்ட்டு ஆர்டர் ஒண்ணையும் எடுத்துடுங்க.
   அப்புறம் யாருமே ஒங்க கமலைப் பத்தி வாயே தொறக்க மாட்டாங்க.

 12. கமல் மட்டுமல்ல எவரைப்பற்றியும் பேசவும் எழுதவும் நமக்கு உரிமையுண்டு!

  அதுவும் கமல் ஒரு கலைஞராக இருப்பதால் கண்டிப்பாக விமர்சனத்திற்கு உள்ளாகியே வேண்டும். கமலின் படங்களில் பல குப்பைகள் உண்டு.

  கள்ளர்,தேவர்,அகமுடையார்,வன்னியர்,நாடார்,கோனார்,பள்ளர்,பறையர் என்றெல்லாம் பிரிந்து நிற்கும் நம் தமிழ் சமுகத்தை தூரத்திலிருந்து பார்த்தால் எல்லா சாதிகளிலும் ஏழைகள் ஒரேமாதிரிதான் இருப்பதை காண முடிகிறது.

  ஆனால் அவர்களுக்குள் காலங்காலமாக ஊட்டப்பட்ட சாதி துவேசத்திற்கு அவர்களும் பலியாகியிருக்கிறார்கள்.
  தன்னை உயர்வாகக் காட்ட நினைக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் தனக்கு தாழ்வான ஒரு அடிமை தேவைப்படுகிறான்.ஒரு அடிமை இன்னொரு அடிமையை தனது
  அடிமையாக கருதும் அவலஇது. அது மட்டுமில்லாமல் ”அய்யருக்கு அடுத்தது நாங்கதான்’ என்று பெருமையில் மிதக்கும் அவலத்திற்கும் தள்ளப்படுகிறான்.
  சரி தேவர் சாதியில் ஏற்றத்தாள்வு இல்லையா?
  பெரும் தனம் படைத்த நாடார் பனை ஏறும் ஏழை நாடாரை இழிவாகத்தானே கருதுகிறார். ‘கோனார் உரை’ போட்ட ஒரு சமுகம் இன்று யாதவ் முகமூடிப் போடக்காரணம் கோனார் என்பதில் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மைதானே? ஏன் பள்ளர்கள் பறையர்களை இழிவாய் கருதுவதும் இருவரும் அருந்ததியினரை ஒதுக்கிவைப்பதையும் என்னவென்று சொல்வது…?

 13. தேவர்மகன் படம் பற்றி 2005ல் நான் எழுதிய பதிவு கமலின் சாதீயமும் சமூக பொறுப்பும்
  தென்மாவட்டங்களிலே சில ஆண்டுகளுக்குமுன் வரை (ஏன் இன்றும் கூட) எல்லா கோவில் திருவிழாக்களிலும், சுப துக்க நிகழ்ச்சிகளிலும் “போற்றிப்பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே” என்ற பாடல் போடப்படாமல் இருந்ததில்லை, இது எத்தனை எத்தனை சாதிக்கலவரங்களுக்கு ஆரம்பமாக இருந்த்திருக்கின்றது. இதற்கு கமல் என்ன செய்வார் அது அவர்கள் தவறு என ஜல்லியடிக்க வேண்டாம், ஒரு மன முதிர்ச்சியடையா சமூகத்திலே (மொத்த தமிழ் சமூகத்தையும் சேர்த்துதான் சொல்கின்றேன்) இப்படி தேவர்மகன் என்ற படைப்பு என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்கியுள்ளது. இதிலே கமலின் பங்களிப்பு ஒன்றுமேயில்லையா??
  இதே தேவர்மகன் என்கின்ற படைப்பை ஒரு பண்ணையார் மகன் என்றோ அல்லது சாதிபெயர் வைக்காமல் வேறு பெயர் வைத்து எடுத்து வெற்றிபெற்றிருக்க முடியாதா?

 14. படம் நன்றாக உள்ளது இதை தவறுகள் ஏதும் இல்லை

 15. கமலோட  சாதிக்காரங்க சொல்ராங்க  அந்தாளு எங்க  சாதியில்லேனு
  கள்ளர் சாதிக்காரங்க சொல்ராங்க  அந்தாளு எங்க  சாதியில்லேர்ந்து சிவாஜிய காசு கொடுத்து வாங்கிட்டார் கமலு  என்ன பெரிய ….. ன்னு
  தேவர்  சாதிக்காரங்க சொல்ராங்க  அந்தாளு எங்க  சாதியில்லே உள்ள பலகீனத்த புலப்படுத்திட்டாரு  கமலு  என்ன பெரிய ….. ன்னு
  மற்ற சாதிக்காரங்க சொல்ராங்க  அந்தாளு எங்க  சாதி  அழிக்க பிறந்தாருன்னு…

  மேல் சாதிக்காரங்க  கீழ் வரைக்கும் கண்ணோட்டம் இருந்தாலும்
   கீழ் சாதிக்காரங்க மேல்  வரைக்கும் கண்ணோட்டம் இருந்ததில்ல (புரிதலில் கோளாறு)
  இது 
  பார்வையில் நேர்  – புரிதலில் கோளாறு. ,இதை மாற்றி
  புரிதலில் நேர் – பார்வையில் கோளாறு (பல்வகை கண்ணோட்டம்) இத கத்துக்கிட்டா 
  சாதி ஒரு பிரச்சனை இல்ல
  எட்டு வயதோ, இருக்கையும் கணிப்பொறியும் கிட்டும் காலமோ தேவையில்லை யாருக்கும்

  எண்ணிப்பார் – சாதி வெறியன் கட்டுரையாளரா?  கமலா என்று?

 16. என்ன கொடும சார்!,
  மாரி அவர்களே தேவர்மகன் படத்தில் கமல் மூன்றுமணி நேரம் அரிவாள் தூக்குகிறார் என்பது அப்பட்டமான பொய்,
  இதிலிருந்து என்ன தெரிகிறது மாரி அவர்கள் தேவர்மகன் படத்தை கலை நோக்கத்துடன் பார்க்கவில்லை!, அப்படி மூன்றுமணி நேரம் மீசை முறுக்கி அரிவாளை தூக்கி கொலைகளை செய்த படம் “சீவலபேரி பாண்டி”,
  இப்போது புரியும் இந்த படத்தை பற்றி தேவர்மகன் வெளிவந்து இரண்டு வருடங்கள் கழித்து தான் சீவலபேரி பாண்டி வெளிவந்தது ,

  ஆகையால் , நீங்கள் உடனே நெப்போலியன் அவர்களுக்கு கடிதம் எழுதுங்கள் ,
  /// எனவே தேவர்மகன் ஒரு கலையை சார்ந்த படமே, ஒரு தரமான் படத்தை எத்தனை முறை அவதூறு கூறினாலும் அது அவதூறு ஆகாது!
  இப்படிக்கு உண்மையுள்ள கலையின்
  ரசிகன் லட்சுமணன்.///

 17. தயவு செய்து இது போன்ற தரமற்ற படைப்புகளை வெளியிட வேண்டாம்.

 18. தேவர் மகன் படத்திற்கு முன்பு தமிழ்நாட்டில் சாதி கலவரமெல்லாம்நடந்ததே இல்லயா? என்ன சின்னபுள்ள தனமா இருக்கு?

 19. உங்க அப்பா உங்களை எதாவது தவறு செய்யும் போது அடித்து கண்டித்தால் இது வன்முறை இவ்வாறு செய்யக் கூடாது என்று கண்டிப்பீர்களா? அதே போல் அட்ன் வன்முறையை அந்த சமுதாயாத்தில் ஒருவனாக இருந்து வெளிப்படையாகவும் யதார்த்தத்தை காட்டியுள்ளார்.

 20. பாதிக்கப்பட்டவர்கழுக்குதான் வலி புரியும்.

Comments are closed.