நடிகர் ஜெயராம் வீடு தாக்கப்பட்டது : ‌சீமா‌ன் ‌மீது வழ‌க்கு

நடிகர் ஜெயராம் தனது வீட்டில் வேலை செய்யும் பெண்மணியை கறுத்து தடித்த எருமை போன்ற தமிழச்சி என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டார். இது குறித்து அவரை தொடர்பு கொண்டவர்களிடம் காமெடிக்காக அப்படி குறிப்பிட்டதாக பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சென்னையிலுள்ள ஜெயராமின் வீடு தாக்கப்பட்டது.
‌வீடு தா‌க்க‌ப்ப‌ட்ட‌து தொட‌ர்பாக இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் ‌மீது கா‌வ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து‌ள்ளன‌ர்.

வ‌ன்முறையை தூ‌ண்டியதாக ‌சீமா‌ன் ‌மீது வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து‌ள்ள காவ‌ல்துறை‌யி‌ன‌ர் ‌‌தீ‌விர விசாரணை நட‌த்த‌ி வரு‌கி‌ன்றன‌ர்.

ஜெயரா‌ம் ‌வீடு தா‌க்க‌ப்ப‌ட்டது தொட‌ர்பாக ‘நா‌ம் த‌மிழ‌ர் இய‌க்க‌த்தை சே‌ர்‌ந்த 12 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். மேலு‌ம் பலரை காவ‌ல்துறை‌யின‌ர் தேடி வரு‌கி‌ன்றன‌ர்.

மேலு‌ம் தா‌க்குத‌ல் நடைபெறாம‌ல் இரு‌க்க ஜெயரா‌ம் ‌வீ‌ட்டு‌க்கு கா‌வ‌ல்துறை‌யின‌ர் பாதுகா‌ப்பு ப‌ணி‌க்கு ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இத‌னிடையே தா‌க்குதலை தடு‌க்க தவ‌றியதாக கூ‌றி வளசரவா‌க்க‌ம் காவ‌ல்துறை ஆ‌‌ய்வாள‌ர், உத‌வி ஆ‌ய்வாள‌ர் ஆ‌கியோ‌ர் இடமா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இலங்கை இனப்படுகொலைகளின் பின்னர் தமிழகத்தில் மலையாளிகளிற்கு எதிரான உணர்வு தமிழ்த் தேசியவாதிகளிடையே மேலோங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

One thought on “நடிகர் ஜெயராம் வீடு தாக்கப்பட்டது : ‌சீமா‌ன் ‌மீது வழ‌க்கு”

  1. தமிழகத்திற்கு மலையாளீகள் தேத்தண்ணீ பேணீயோடு வந்து இன்றூ ஐந்துநட்சத்திர விடுதிகளூக்கே சொந்தக்காரர்கள். கூட்டிக் கொடுப்பதும், காட்டிக் குடுப்பதும் குலத் தொழில்.இன்றூநீல்கிரி மற்றூம் கோவையில் பெரும் கோடீஸ்வரர்கள்.தமிழ்ரிடையே ஊடுருவி உள்ள விசக்கிருமிகள்.மலையாள சினிமா தோறூம் கிழவர்களே தொடர்ந்தும் கீரோக்கள் தடித்த குண்டானவர்கள் என்றூநாம் கிண்டல் செய்தால் மலையாலி தாங்குவானா?

Comments are closed.