நடிகர்களைக் காண தமிழ் மக்கள் ஆசைப்படுகிறார்களாம் – சொல்கிறார் சல்மான்கான்.

இந்தி நடிகர் சல்மான்கானின் ரெடி என்ற இந்தி படத்தில் மலையாள நடிகையான அசின் ஹிரோயினாக நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவிலும் முன்னணி ஹிரோயினாக உள்ளார். ரெடி படத்தின் படப்பிடிப்பிற்காக அசின், சல்மான்கான் ஆகியோர் இலங்கை சென்றுள்ளனர். இதில் சல்மான்கான் நேற்று செய்தியாளர்க்ளிடையே பேசும் போது “தமிழ் மக்கள் தமிழ் சினிமா நடிகர்களைப் பார்க்க ஆசைப்படுகிறார்கள். மக்களின் ஆசைக்கு விரோதமாக ஏன் இவர்கள் தடை போடுகிறார்கள் என்றார் சல்மான்கான். இந்நிலையில் தடியை மீறி இலங்கை சென்ற அசினுக்கு தென்னிந்திய சினிமாக்களின் நடிக்க குறிப்பாக தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்படும் எனத் தெரிகிறது. இது தொடர்பாக நடிகர் சங்க செயலாளர் ராதாரவியிடம் கேட்கப்பட்டது.அதற்கு பதில் அளித்த ராதாரவி கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை அசின் மீறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி கூட்டமைப்புடன் கலந்து பேசி முடிவு செய்வோம் ” என்றார்.

One thought on “நடிகர்களைக் காண தமிழ் மக்கள் ஆசைப்படுகிறார்களாம் – சொல்கிறார் சல்மான்கான்.”

  1. சல்மான் கான் மானை வேட்டையாடி உள்ளே போக வேண்டியவ்ர் வெளீயே இருக்கிறார்.அஸ்வர்யாவால் விரட்டப்பட்டபோது வீதியில் கிடந்தவ்ர்.அவர் ஒரு மனனோயாளீ விடுங்கப்பா.

Comments are closed.