நடந்து முடிந்த யுத்தம் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது:TBC யில் சித்தார்த்தன்.

 

நடந்து முடிந்த யுத்தத்தின் போது தமிழமக்களுக்கு ஒரு அநிநீதி இழைக்கபட்டுள்தை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.ஆனால் அரசாங்கம் அதை யாழ்ப்பாணம் மாநகரசபை ,வவுனியா நகரசபை தேர்தலில் ஏதே ஒருவகையில் வெற்றிபெற்று நியாயபடுத்துவதற்க்காக முயற்சி செய்வதாக  தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும், முன்னாள்  வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ரிபிசியில்(Thamil broadcasting corporation-London ) சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்

சிறுவர்களை விடுதலை புலிகள் பலவந்தமாக படையில் சேர்க்கும் போது பாரளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் அதை நியாம்படுத்தியதன் மூலம் அவர்கடைய அழிவுக்கு துனைபோனவர்கள்  தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் என்பதை மக்கள் மறந்து விடமாட்டார்கள் என  கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்

வவுனியா முகாம்கமில் உள்ள மக்களை பார்ப்பதற்க்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்று குறை கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் அனுமதி கேட்டு ஒரு கடிதம் கூட எழுதவில்லை எனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு அந்த மக்களுக்கு வெளியிலிருந்து கூட ஒரு விதமான உதவியும் செய்யவில்லை எனவும் கூறினார். ஆனால் எமது அமைப்பு நாற்பதாயிரம் சமைத்த உணவு பொட்லங்களை வழங்கியதோடு அம்மைநோயினால் பாதிக்குள்ளான  பத்தாயிரத்துக்கு மேற்பட்ட நோயாளர்களுக்கு பால்கஞ்சியும் பழங்களையும் வழங்கினோம்  எனவும் தெரிவித்தார்.

 ஜனாதிபதி தமிழ் மக்களுக்கான சமஸ்டி முறையிலான ஒரு தீர்வை நோக்கி செல்லமாட்டார் எனவும், ஆனால் 13வது திருத்தசட்ட மூலம் அதிகார பகிர்வினை செய்வதற்க்கு அவரின் கட்சியில் உள்ள முற்போக்கு சிந்தனையாளர்களின் நெருக்குதல் காரணமாக முயற்சி செய்யலாம் எனவும் தெரிவித்தார் .

தமிழர் விடுதலை கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி ஆகிய கட்சிகளுடன் தாம் இணக்கபாட்டுடன் செயற்படுவதாக தெரிவித்த அவர் வவுனியாவில் உள்ள தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர் ஓருவர் கட்சியை விட்டு வெளியேறி அரசு ஆதரவாக செயற்படுகிறார். ஆனால் ஏனைய தமிழர் விடுதலை கூட்டணி  உறுப்பினார்கள எம்முடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளாதாக       கலந்துரையாடலின் போது சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்

One thought on “நடந்து முடிந்த யுத்தம் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது:TBC யில் சித்தார்த்தன்.”

  1. சித்தாத்தர்தன் “யாழ்ப்பாண ஐனாதிபதி” டக்கிளசுவை விட மகிந்தப் பேரினவாதத்தின் போக்குகள் சிலவற்றை யதார்த்தமாக சொல்கின்றார்!

Comments are closed.