நக்சலைட்டுகள் திருந்த வேண்டும் : பிரகாஷ் கரத்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளை எதிரியாகப் பார்க்கவும், தாக்குதல் தொடுக்கவும் செய்கின்ற நக்சலைட் குழுக்களை உட்படுத்தி இடது முன் னணியை விரிவுபடுத்த முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.

‘நடப்புக்கால அரசியலில் இடது சாரிகளின் பங்கு’ என்ற தலைப்பில் டில்லியில் புரட்சி சோசலிஸ்ட் கட்சி சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசுகையிலேயே பிரகாஷ் காரத் இவ்வாறு கூறினார்.

நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகள் பொது அரசியல் நீரோட்டத்திற்கு வந்ததைக் கருத்தில் கொண்டு இந்தி யாவில் மாவோயிஸ்ட்டுகள் மற்றும் நக்சலைட்டுகளை உட்படுத்தி இடது முன்னணியை விரிவாக்க வேண்டு மென்று கருத்தரங்கில் சொற்பொழி வாற்றிய புரட்சி சோசலிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பேராசிரியர் டி.ஜே.சந்திரசூடன் கருத்துத் தெரிவித் திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகை யிலேயே காரத் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நிலைபாட்டை தெளிவாக்கினார்.

நேபாளத்தில் ஜனநாயக செயல் பாட்டுக்குள் மாவோயிஸ்ட்டுகள் வந்தது நல்ல விஷயமாகும். இந்தியா வில் உள்ள மாவோயிஸ்ட்டுகளும், நக்சலைட் குழுக்களும் இதிலிருந்து படிப்பினை கற்க வேண்டும். இந்தி யாவில் இத்தகைய குழுக்கள் இப் போது தவறான பாதையில் செல் கின்றன. இதிலிருந்து இவர்கள் எதைப் பெற்றார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தவறைத் திருத்திக் கொண்டு பிர தான அர சியல் நீரோட்டத்திற்கு வந் தால் அத்தகைய குழுக்களுடன் கருத்துப் பரி மாற்றம் நடத்த முடியும். இடதுசாரி கட்சிகளுக்குள் மேலும் ஆரோக்கி யமான விவாதமும் கருத்துப் பரிமாற்ற மும் தேவை. மூன்று மாநிலங்களில் ஆட்சிக்கு வர இந்திய இடதுசாரி இயக்கத்தால் முடிகிறது. இந்த அரசு களிடம் தாங்கள் முன் வைக்கக் கூடிய மாற்று செயல் திட்டம் உண்டு. ஆனால், மக்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க இந்த அரசுகளால் முடியாது. 1960-களிலும் 70-களிலும் போல செயல்பட இடதுசாரி அரசு களால் இன்று முடியாது. உலக மூல தன சக்திகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய அரசுகளின் பிற் போக்குக் கொள்கைகளையும் நிலை பாடுகளையும் எதிர்த்து செயல்பட வேண்டிய அவசியமும் இந்த அரசு களுக்கு உண்டு. மத்திய – மாநில பொரு ளாதார உறவு மாநில அரசுகளுக்கு கூடுதல் நிர்ப்பந்தத்தை ஏற்படுத் துகிறது.

மாநில அரசுகளின் செயல் பாட்டை வலுப்படுத்துவதில் இடதுசாரி கட்சிகளிடையே மேலும் பய னுள்ள கருத்துப் பரிமாற்றமும் விவாதமும் தேவை. மூன்றாவது மாற்று என்ற அமைப்புக்குள் இணைக்க வேண்டிய பிரதேச கட்சிகளை உன்னிப்பாக மதிப்பீடு செய்ய வேண்டும். பிரதேச கட்சிகளுக்கு பிரதேச ரீதியான செயல் திட்டம் மட்டுமே உள்ளது என்பது பழைய கதையாகும்.

அன்னிய மூலதனம், பன்னாட்டுக் கம்பெனிகள், பெரும் தொழில் குழுமங்கள் ஆகியவற்றுடனான உறவு மூலம் பிரதேசத்துக்கு அப்பாலும் அவர்களின் செயல் திட்டம் விரிவடைகிறது. இத்தகைய கட்சிகளு டனான ஒத்துழைப்பு ஒரு பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் பிரகாஷ் காரத் கூறினார்