தோழர் வரதராஜனைக் காணவில்லை – மனைவி போலீசில் புகார்..

மர்க்ஸ்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவர்களுள் ஒருவரான தோழர் டபிள்யூ. ஆர் வரதராஜனை கடந்த மூன்று தினங்களாக காணவில்லை. தனிப்பட்ட சில பிரச்சனைகள் அவருக்கு இருந்ததாகவும். துணைவியாரோடு சில க்சப்புணர்வுகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிற நிலையில் வரதராஜன் எழுதிய கடிதம் கட்சியின் அலுவலகத்திற்கு வந்திருப்பதாகவும் அதில் தன் உடலை மருத்துவ ஆய்வுக்குக் கொடுத்து விடும் படியும். என் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கட்சி எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், தனது மடிக்கணனியை கட்சிக்கு வழங்குவதாகவும், தனது வீட்டில் உள்ள நூல்கள் எல்லாவற்றையும் தீக்கதிர் அலுவலகத்திற்கு வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் கசிந்திருக்கும் நிலையில் வரதராஜனின் மனைவி சரஸ்வதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் தனது கணவரைத் தேடிக் கண்டு பிடித்துக் கொடுக்குமாறு புகார் மனு ஒன்றை வழங்கியிருக்கிறார். தமிழகம் முழுக்க போலீஸ் உஷார் படுத்தப்பட்டுள்ள நிலையில் தோழர் வரதராஜன் தனிப்பட்ட விவாகரங்களைத் தாண்டி ஒரு தொழிற்சங்க வாதியாகவும், அரசியல்வாதியாகவும் மிக நேர்மையான மனிதராக மாற்றுக் கட்சிகளாலேயே போற்றப்பட்டவர். அவரது நிலை தொடர்பாக ஆழ்ந்த கவலைகள் வெளிப்பட்டுள்ளன.