தோழர் பொ.மோகனின் இறுதி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி!

mogancomதோழர் பொ.மோகனின் இறுதி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், மதுரை மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப் பினருமான தோழர் பொ.மோகன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக் குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

மத்திய அமைச்சர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், தோழர்கள், அனைத்து தரப்பு பொது மக்கள் என காலை முதல் மாலை வரை பல்லாயிரக்கணக்கானோர் தோழர் மோகன் உடலுக்கு மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடல் வைக்கப்பட்டிருந்த அலுவலகம் அமைந்துள்ள மதுரை மக பூப்பாளையம் பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கட்சி உறுப் பினர்களது குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும், தொழிலாளர் தோழர்களும் தோழர் மோகன் உடலை பார்த்து கதறி அழுதனர்.

மதுரை மாநகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், தென் மாவட்டங்கள் அனைத்திலிருந்தும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வேன்களிலும் இதர வாகனங்களிலுமாக தோழர் மோகனுக்கு தங்களது இறுதி அஞ்சலியை செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் அணி அணியாக வந்த வண்ணம் இருந்தனர்.

மாலை சுமார் 4.30 மணியளவில் கட்சி அலுவலகத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது. நகரின் முக்கிய சாலைகள் வழியாக வந்த ஊர்வலம் சுமார் 6 மணியளவில் தத்தனேரி மயானத்தை அடைந்தது. வழி நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று தங்களது மனதை கவர்ந்த தலை வருக்கு இறுதி மரியாதையை செலுத்தினர்.

இறுதியில் தத்தனேரி மின் மயானத் ல் தோழர் மோகனின் உடல் எரி யூட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. அண்ணாதுரை தலைமையில் இரங்கல் கூட்டம் நடந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் வெ.சுந்தரம், திமுக மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி எம்எல்ஏ, மதிமுக மாவட்டச் செயலாளர் பூமி நாதன், ஜனதா தளம் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்தினர்.

One thought on “தோழர் பொ.மோகனின் இறுதி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி!”

  1. பொ.மொகனின் இழப்ப ஈடுசெய்யமுடியாதது. . பல்லயிரக்கண்க்கானவர்கலள்நஞசலி டெச்லுதியவர்களைக்கன்டுதெரிந்துகொள்ள்லாம். அவ்ரைப்பொலெஒருஅன்பரைப் இனி பார்க்க முடியா து

Comments are closed.