தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க மறுத்த ஷோபா சக்தி, லீனா மணி மேகலை கைது?

தமிழகத்தின் ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை இலங்கை அகதிகள் தொடர்பாக செங்கடல் என்ற ஆவணப்படத்தை இயக்கி வருகிறார். ஒரு பிரபல தயாரிப்பாளரின் நிதி உதவியில் இப்படம் தயாராகிவருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக ராமேஸ்வரம் பகுதியில் இந்த ஆவணப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருக்கும் ஷோபா சக்தி எனப்படும் ஈழத்து எழுத்தாளரும் ராமேஸ்வரத்தில் முகாமிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே படபிடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒளிப்பதிவாளர், அவரது உதவியாளர், ஆகியோருக்கு பேட்டா வழங்கவில்லையாம். அவர்கள் அதை ஆவணப்படத்தின் மேனேஜர்கள் வெங்கட், தனுஷ், படத்தின் இயக்குநர் லீனா மணி மேகலையிடம் கேட்ட போது ஒளிப்பதிவாளரையும் அவரது உதவியளரையும் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடும் கோபமடைந்த தொழிலாளர்கள் கேமிராமேன் கனி, வெங்கட் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு படப்பிடிப்புக் குழுவினருடன் விவாதித்திருக்கின்றனர். இந்நிலையில் ஒளிப்பதிவாளர்களுக்கு ஊதியம் வழங்க மறுத்ததால் அவர்கள் படம் பிடித்த கேசட்டை எடுத்துக் கொண்டு ரமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்குக் கிளம்பியிருக்கின்றனர்.

ஆனால் அப்படிக் கிளம்பியவர்களை லீனா மணிமேகலை, ஈழத்து எழுத்தாளரும் முற்போக்கு அறிவு ஜீவியுமான ஷோபா சக்தி, படத்தின் மேனேஜர்கள் தனுஷ் ஆகியோர் சேர்ந்து தாக்கியதாகத் தெரிகிறது. இந்நிலையில் ஒளிப்பதிவாளர் தன் மீதான தாக்குதல் குறித்து ராமேஸ்வரம் போலீசில் புகார் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் லீனா மணிமேகலை, ஷோபா சக்தி, மற்றும் மேனேஜர்களை காவல்நிலையத்திற்கு அழைக்க அவர்கள் மறுத்து வாக்குவாதப் பட்டிருக்கிறார்கள். லீனா போலீசாருடன் விவாதித்ததை தனது செல்போனில் ஒரு போலீஸ் அதிகாரி பதிவு செய்ய அவரது செல்போனையும் பிடுங்கியிருக்கிறார் லீனா , கடுப்பான போலீசார் ஷோபா சக்தியையும், லீனா மணிமேகலையையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல படத்தின் மேனேஜர்களோ தப்பி ஓடிவிட்டனர். தனது மேலிட தொடர்புகளை பயன்படுத்தி லீனாவும் ஷோபா சக்தியும் இப்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது வரை படப்பிடிப்பில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வில்லை.

10 thoughts on “தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க மறுத்த ஷோபா சக்தி, லீனா மணி மேகலை கைது?”

 1. உழைத்து விட்டு ஊதியம் கேட்டவர்களை உதைத்த இந்த மாபெரும் ஜனநாயகவாதி சோபா சக்திதான், புலிகளை ஜனநாயக விரோதிகள் என்று வாய் கிழிய பேசுகிறார்.. சோசலிசம், இடதுசாரி என்ற வார்த்தைகளையெல்லாம் ஓயாது உச்சாடனம் செய்கிறார். இந்த வெட்கங்கெட்டவர்களெல்லாம் மாற்று அரசியல் பேச நாம் அது கேட்டுக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.. கொடுமை

  ஈழமுத்துக்குமரன்

 2. இச் செய்தி சோபாசக்தியை அறிந்தவர்களுக்கு ஆச்சரியமானதல்ல. சோபாசக்தி தன் வர்க்க குணாம்சத்தை வேறு எப்படி காட்டமுடியும். வேளாள சாதிய திமிர்தனம் இப்படித்தான் தொழிலாளிகளை பழிவாங்கும். இதனை மூடிமறைக்க அ.மாக்ஸ் போன்ற வகையாறாக்களும் பணத்திற்கு பல் இழிக்கும் ஒருசில இங்குள்ள பத்திரிகையாளர்களும் இதனை மூடி மறைத்தாலும் இச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இப் போலிகள் தொழிலாள விரோதிகள் அம்பலப்படுத்தப்படவேண்டும்.

  தனுஷ்கோடியில்
  படப்பிடிப்பு குழுவினரிடையே பணத்தகராறு
  கதாசிரியர் கைது!

  http://www.dailythanthi.com/article.asp?NewsID=538124&disdate=1/4/2010

 3. eventhough we disagree with the politices of shobhashakthi, all democratic forces, human right activities must condemn and raise voice against the taking video in cellphone of Lellamanimakalai by Police Officer inthe premises of police station. Since it may happen anybody who are struggling for justice.

 4. லீனாவின் குறி மனிதாபிமானமோ கலையோ இல்லை. பணம். அதற்காக இதையும் செய்யாவிட்டால்?

 5. இனியொரு இணையத்தில் செய்திகள் வெளியிடப்படும் போது கருத்துகள் முரண்பாடாக இருப்பதைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.பரபரப்புக்காகச் செய்திகளை பிரசுரிப்பவற்றிலிருந்து தேவையானவற்றைப் எடுத்து பிரசுரித்து நீங்கள் தொழிலாளர்களுக்காகப் பரிந்து பேசும் பாவனையைக் காட்ட வேண்டாம்.
  “தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க மறுத்த ஷோபா சக்தி> லீனா மணி மேகலை கைது?” இது பதிவிட்ட கட்டுரையின் தலைப்பு.ஆனால் மேலும் “பிரபல தயாரிப்பாளர் நிதியுதவி” என்று குறிப்பிடுகின்றீர்கள்.ஒரு தயாரிப்பாளர் தான் அதில் வேலை செய்யும் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பது.கதாசிரியர் சம்பளம் கொடுப்பதில்லை.அவரும் சம்பளத்திற்கு வேலை செய்யும் தொழிலாளி தான். ஷோபா சக்தி சம்பவத்தில் குறிப்பிட்ட நபரைத் தாக்கியதற்கு ஆதாரம் அளிக்க உங்களால் முடியுமா? காழ்ப்புணர்ச்சியைத் தீர்த்துக் கொள்ள அருமையான இடம் கிடைத்ததாக பின்னூட்டங்களையும் எழுதுகின்றார்கள்.எல்லாரும் ஊடகத்தை நடாத்தலாம் .ஆனால் தர்மத்துடன் நடாத்துதல் மிகக் கடினம் என்பதை மீண்டுமொரு முறை இனியொருவும் நிருபிக்கின்றது.

 6. பண்பாடு இல்லாத பெண்ணீடம் எதைதான் எதிர்பரர்க்க முடியும்.கவிதையில் தன்னை நிர்வாணமாக காட்டும் மணீமேகலை வாழ்க்கையின் யதரர்த்தம் தெரியாதாவர்.தங்க மாங்கனி என் தன்னை நினைத்து கொல்லுகிரரர் ஆனால் அவர் ஒரு மாட்டுச்சானீ. உலகம் என்ற அழகிய நதியில் அசிங்கம் செய்கிரார்.தன் மலத்தை முகர்ந்து அதுவெ அழகு எஙிரார்.

 7. சம்பளம் கேட்டால் அடி உதை! ’கொரில்லா’ சோபாசக்தி, லீனா அட்டூழியம்!’நுண் அரசியல், தலித்தியம், விளிம்பு நிலை மக்களின் உரிமைகள், மனித உரிமைகள், பெண்ணியம்’ உள்ளிட்ட ஏராளமான ‘புரட்சிகர’ சரக்குகளின் மொத்த வணிகர்களான ’கொரில்லா’ சோபா சக்தி, லீனா மணிமேகலை இருவரும் தாங்கள் ‘எவ்வளவு ஜனநாயகமானவர்கள்’ என்பதை வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர்.

  ’செங்கடல்’ எனும் திரைப்படத்தை லீனா தயாரித்து இயக்குகிறார். ’கொரில்லா’ சோபாசக்தி வசனம் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இராமேஸ்வரம் பகுதியில் நடந்தது. படத்தின் ஊழியர்கள் பலருக்கு லீனாவின் தயாரிப்பு நிறுவனம் சம்பளம் தரவில்லை. பல கடை நிலை ஊழியர்களுக்கு படிப் பணம் (பேட்டா) கூட தரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த சில தொழில்நுட்பக் கலைஞர்கள் படத்தின் படப்பதிவு சுருளை எடுத்துச் சென்றனர். இச் சம்பவத்திற்குக் காரணம் உதவி ஒளிப்பதிவாளர் தீபக்தான் எனக் கருதி, ’கொரில்லா’ சோபாசக்தி தீபக் மீது பாய்ந்து அவரைத் தாக்கினார். ‘மனித உரிமைக் காவலர்’ லீனா தன் சகாக்களுடன் நின்றுகொண்டு தீபக் அடிபடுவதை ரசித்திருக்கிறார்.

  தீபக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ’கொரில்லா’ சோபாசக்தி கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மீது காவல்துறை இச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தது. கைது செய்யப்பட்ட ’கொரில்லா’ சோபாசக்தி பிணையில் வெளியே வந்துள்ளார். அவர் மீது, கையால் அடிப்பது, ஏசுதல், கொலை முயற்சி ஆகிய குற்றச் சாட்டுகளின் பேரில் மூன்று சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  மருத்துவ சிகிச்சைக்குப் பின், தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வந்திருந்த தீபக்கை ‘நம் தேசம்’ இணையத்திற்காக சந்தித்தோம்.

  நம்தேசம்:

  செங்கடல் படம் எதைப் பற்றியது?

  தீபக்:

  இப்படத்தின் கதைக்கு, ஈழம், தமிழக மீனவர்கள் ஆகிய இரண்டும் அடிப்படைத் தளங்கள்.

  நம்தேசம்:

  இப்படம் எதற்காக எடுக்கப்படுகிறது? வணிக நோக்கமா அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்தவா?

  தீபக்:

  கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான் லீனா மற்றும் சோபாசக்தி ஆகியோரின் நோக்கம். மற்றபடி விழிப்புணர்வு ஏற்படுத்துவது இவர்கள் நோக்கம் என்று நான் நினைக்கவில்லை.

  நம்தேசம்:

  இந்தப் படத்தின் தயாரிப்பாளர் லீனா மட்டும்தானா? வேறு யாரும் உள்ளனரா?

  தீபக்:

  ஆரம்பத்தில் இயக்குனர் சமுத்திரகனிதான் இப்படத்தைத் தயாரித்தார். அவரது ‘பிலிம் பார்மர்ஸ்’ நிறுவனம்தான் படத் தயாரிப்பைத் தொடங்கியது. ஆனால், மிக விரைவிலேயே சமுத்திரக்கனி விலகிக்கொண்டார். அதன்பிறகு, லீனா-ஜெரால்டின் டூரிங் டாக்கீஸ் நிறுவனம்தான் முழுத் தயாரிப்புப் பொறுப்பையும் ஏற்று நடத்துகிறது.

  நம்தேசம்:

  ஊழியர்களுக்கு சம்பளம் தரவில்லை என்ற சிக்கல் சமுத்திரக்கனியின் தயாரிப்பு நிறுவனத்திலிருந்தே தொடங்கியதா?

  தீபக்:

  இல்லை. அவரது நிறுவனத்தில் பணியாற்றியவரை அந்தச் சிக்கல் இல்லவே இல்லை. லீனாவின் நிறுவனம் பொறுப்பேற்ற பிறகுதான் எல்லாக் குளறுபடிகளும் தொடங்கின.

  நம்தேசம்:

  சோபாசக்தி உங்களைத் தாக்கிய சம்பவத்தை விவரிக்க முடியுமா?

  தீபக்:

  இந்தப் படத்தில் நான் உதவி ஒளிப்பதிவாளராக மட்டும் இல்லை. நிர்வாகப் பணிகளையும் செய்து வந்தேன். பணியாளர்கள் அனைவருக்குமான சம்பளம், படிப் பணம் ஆகியவற்றை வாங்கித் தருவது என் பணிகளில் ஒன்றாக இருந்தது. இதனால், லீனாவின் மேலாளர்கள் வெங்கட், தனுக்ஷ் ஆகியோர் என் மீது வெறுப்பு கொண்டனர். படப்பிடிப்பு முடிந்தது. பலருக்கும் சம்பளம், படிப் பணம் தரவில்லை.

  கடைசி நாளாவது தருவார்கள் என எதிர்பார்த்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் ஆத்திரமடைந்த ஒளிப் பதிவுக் கருவி உதவியாளர்கள் கனி, வெங்கட், யூசுப் ஆகியோர் படப் பதிவுச் சுருளை எடுத்துச் சென்றுவிட்டதாகத் தகவல் பரவியது.

  அவர்கள் இப்படிச் செய்ததற்குக் காரணம் நான் என்று முடிவு செய்துவிட்டு, லீனா என்னை அவர் தங்கியிருந்த இடத்திற்கு வரச் சொன்னார். அப்போது இரவு மணி 11 இருக்கும். லீனாவின் ஆட்கள் என்னை அழைத்துச் சென்றனர். அங்கே லீனாவோடு, சோபாசக்தியும் இருந்தார். எல்லாருமே குடி போதையில் இருந்தார்கள். நான் பேசுவதற்குமுன்பே, சோபாசக்தி என்னை அடிக்கத் தொடங்கிவிட்டார். லீனாவின் மேலாளர்கள் இருவரும் என் கைகளை விரித்துப் பிடித்துக் கொண்டனர். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

  படப்பிடிப்புக்கு வாகன் ஓட்டிகளாக இருந்த உள்ளூர் ஓட்டுனர்கள் அந்த வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் ஓடி வந்துதான் என்னைக் காப்பாற்றினர். அந்த நேரத்தில், லீனாவின் மேலாளர் என் கைபேசியைப் பிடுங்கி வைத்துக் கொண்டார். நீண்ட நேரத்த்றிகுப் பிறகுதான் அதைத் திருப்பிக் கொடுத்தார்.

  நான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். பிறகு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.

  இவ்வாறு தீபக் தெரிவித்தார்.

  ’கொரில்லா’ சோபாசக்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் நபர். ’விடுதலைப் புலிகள் ஜனநாயம் அற்றவர்கள்’ என்பது அவரது பிரபலமான ’கண்டுபிடிப்பு’ ஆகும். சம்பளம் கேட்டால் குடித்துவிட்டு அடிப்பதுதான் ஜனநாயகம் போலிருக்கிறது. அப்படிப்பட்ட ஜனநாயகம் விடுதலைப் புலிகளிடம் இல்லை என்பதுதான் ‘கொரில்லா’ சோபாசக்தியின் விசனமோ!

  லீனாவைப் பொறுத்தவரை, அதிகார மையங்களுக்கு நெருக்கமாக இருந்துகொண்டு ‘முற்போக்கு’ பேசுவது அவரது ’புரட்சிகர’ நடவடிக்கைகளில் ஒன்று. இந்த இருவரும் ‘இணைந்து’ ஈழம் பற்றியும் மீனவர்கள் பற்றியும் படம் எடுக்கிறார்களாம்!

  விதியே விதியே

  என்செய்ய நினைத்தாய்

  தமிழ்ச் சாதியை!

  http://namthesam.com/?p=857

 8. சூரியதீபன்(கீற்று ):-உரிமைகளுக்காக நின்ற ஒருவரை – கதவுகளை இறுக மூடிவிட்டு அறைக்குள் போட்டுத் தாக்கிய இராமேஸ்வரம் புகழ் ஷோபாசக்தி கருத்துரிமை, சனநாயகத்திற்கான இன்னொரு சாட்சி. சிவில் சமூக கலாச்சாரத்தின் வேரையே பொசுக்கிய கொடுங்கோலர்கள் புலித்தலைமைகள் என்று பாய்கிற ஷோபாசக்தி சொந்தவாழ்வில் கடைப்பிடித்த சனநாயகம் தமிழக மக்களின் மூக்கில் நாறுகிறது.

  ‘செங்கடல்’ என்ற பெயரில் ஈழ அகதிகள் பற்றி விவரணப்படம் எடுக்கிறார் லீனா மணிமேகலை. படப்பிடிப்பு ராமேசுவரத்தில்; கதை வசனம் ஷோபாசக்தி. பத்து நாட்களாக யூனிடடில் பணியாற்றிய உதவியாளர்களுக்கும் ஒளிப்பதிவாளர் தீபக்குக்கும் ஊதியம் கொடுக்கவில்லை. செலவுக்குக் காசில்லாமல் தவித்தார்கள். விரக்தியடைந்த உதவியாளர்கள் “புட்டேஜ்” எனப்படும் படச் சுருளை எடுத்துக்கொண்டு சென்று விட்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒளிப்பதிவாளர் தீபக் தான் பின்னணி எனக்கருதி, தீபக்கை அறைக்குள் அடைத்து அடித்துத் துவைத்திருக்கிறார்கள் ஷோபாசக்தியும் இன்னும் ஆறேழு பேரும். வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்மியளவும் மனித உரிமைகளுக்கோ, சனநாயக நெறிகளுக்கோ இடம் தராதவர்கள் புலிகள் என்று, புலிகளுக்குப் பாசிசப் பட்டம் கட்டுகிற இராமேசுவரம் புகழ் ஷோபாசக்தி எனும் சனநாயக குமாரன் இம்மியளவும் சனநாயகவாதியாக இல்லை என நிரூபித்திருக்கிறார். சுதந்திரம், சனநாயகம், சமத்துவம் என்ற வாசகங்கள் எங்கிருந்து பெறப்பட்டதோ, அந்த தேசத்தில் புகலிடம் அடைந்தவர் – அந்த வாசகத்துள் புகலிடம் அடையவில்லை. அவர் நையப்புடைத்தது தீபக் – என்ற ஒளிப்பதிவாளரை அல்ல இந்த வாசகங்களை.

  போராளிகள் சனநாயகத்திற்காக, மனித உரிமைகளுக்காக நின்றார்களோ இல்லையோ, அவைகளை மீட்டெடுக்கும் கடப்பாடும் சாத்தியமும் உடையவர்கள். போர்க்குணத்திலிருந்து கழன்று விட்ட உதிரிகளுக்கு சனநாயகத்தோடு எந்த சங்காத்தமும் இல்லை. ஈழப்பிரச்சனையில் கருத்துச் சொல்ல எவருக்கும் உரிமை கிடையாதெனவும், தாங்கள் மட்டுமே ஈழத்துக்கான எல்லா வெளிச்சத்தையும் சுமந்து வருவதாகவும் எண்ணுகிற போக்கு உரையாடல் களத்துக்குப் பொருந்தாது.
  http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2332:2010-01-20-16-48-34&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

 9. பேச்சிலும்,எழுத்திலும் கூவமாய் ஓடும் சோபாசக்தி தமிழகத்தின் இன்னொரு கூவம் சாருநிவேதாவுடன் கலந்துநாற்றம் சேர்க்கிறது.

Comments are closed.