தைவானுக்கு நவீன ஆயுதங்கள்: சீன – அமெரிக்க உறவு பாதிக்கப்படும் சீனா எச்சரிக்கை!

11.10.2008.

சீன – அமெரிக்க நாடுக ளுக்கு இடையேயான உயர் மட்டத் தொடர்புகள் நிறுத் தப்படும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையி லான இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படும் என்றும் சீன ராணுவ செய்தித் தொடர் பாளர் தெரிவித்தார்.

சர்ச்சைக்கு ஆளா கியுள்ள தைவானுக்கு நவீன ஆயுதங்களை விற்க தை வானுடன் அமெரிக்கா ஒப் பந்தம் செய்துள்ளது.

1949 முதல் தைவான் சீனாவுடன் இணையாமல் தனியாக நிற்கிறது. தேவைப்பட்டால் ராணுவ வலிமையைப் பயன்படுத்தி தைவானைச் சீனா இணைத் துக் கொள்ளும் என்கிற யதார்த்தத்தை அது புரிந்து கொள்ள வேண்டும் என்று சீனா கூறி வருகிறது.

கடந்த வாரம் 650 கோடி டாலர்களுக்கான ஆயுத விற்பனை ஒப்பந்தம் தைவா னுடன் செய்துள்ளதாக அமெரிக்கா அறிவித்தது.

இதையடுத்து அமெரிக் காவுடனான ராணுவ பயிற்சிகளை சீனா குறைத்து விட்டதாக அமெரிக்க பாது காப்பு தலைமையகம் பென் டகன் கூறியது.

சீனாவுடன் இணைவது பற்றிய பேச்சுவார்த்தைக ளில் கடுமையான நிலை பாட்டை எடுப்பதற்கு தைவானுக்கு இது உதவும் என்று சீனா கருதுகிறது.

சீனாவின் எதிர்ப்பு களைப் புறக்கணித்து விட்டு தைவானுக்கு ஆயுத விற் பனை செய்யும் ஒப்பந் தத்தை அமெரிக்க காங்கி ரசுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை சீன – அமெ ரிக்க ராணுவ உறவுகளைப் பாதிக்கும் என்று சீனப் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹூவாங் சூபிங் கூறினார். உயர்மட்ட ராணுவ தொடர் புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரிமாற்றங்க ளையும் ஒத்துழைப்பையும் இது இடையூறு செய்யும் என்றும், அதற்கு அமெரிக் காவே பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.