தைவானில் 500 பேர் மலைச்சரிவுக்கு பலி.

தைவானில் கடந்த சில நாட்களாக வீசிய கடும் சூறாவளிக்காற்றுக்கு ஏராளமானோர் பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

மலையடிவாரக் கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல கிராமங்களை மண்மூடிவிட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் தைவானில் சூறாவளிக்கு 500 க்கும் அதிமானோர் பலியானதாக அந்நாட்டு அதிபர் மா யிங்ஜியோ தெரிவித்துள்ளார். தைவானில் அண்மையில் வீசிய சூறாவளி மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தினால் தெற்கு தைவான் மிகவும் பாதிக்கப்பட்டது.இங்குள்ள பல கிராமங்கள் மலைப் பகுதியால் சூழப்பட்டுள்ளவை என்பதால்,நிலச்சரிவு ஏற்பட்டது.இதில் ஏராளமானோர் சிக்கி பலியாகினர்.இந்நிலையில், இந்த சூறாவளி,மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 500 க்கும் அதிமானோர் உயிரிழந்துள்ளதாக தைவான் அதிபர் மா யிங்ஜியோ இன்று தெரிவித்தார். இதனிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்று தைவான் எதிர்கட்சிகள் குற்றம் சாற்றியுள்ளன.