தேர்தல் – தமிழ்ப் பகுதிகள் செயலிழக்கும்? : சபா நாவலன்

முள்ளி வாய்க்கால் வரை அழைத்துச் செல்லப்பட்டு சாரி சாரியாகக் கொன்று குவிக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களின் இரத்தம் இன்னும் உறைந்துபோக முன்னர் அவரசர அவசரமாக நிகழ்த்தப்படும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரைப் பொறுத்தவரை எந்த அர்த்தமும் அற்றது.

அறுபது வருட காலம் சிறுகச் சிறுக நடந்த இனப்படுகொலையின் வெளிப்படையான உயர் வடிவம் தான் வன்னி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைத் தாண்டவம். அதன் உள்ளூர்ப் பிரதிநிதிகளே இலங்கை ஜனதிபதித் தேர்தலின் பிரதான வேட்பாளர்களான சரத் பொன்சேகாவும், மகிந்த ராஜபக்சவும். முள்ளிவாய்க்கால் மூலைக்குள் தனது சொந்த மக்கள் துடிக்கத் துடிக்கக் கொன்று போடப்பட்ட மறு நாள் பௌத்த கொடியோடு இலங்கை விமானநிலையத்தில் வந்திறங்கிய போர்க் குற்றவாளி ராஜபக்ச மறு நாளே தலைநகரில் கொலைகளை கோலாகலமாகக் கொண்டாட உத்தரவிட்டவர்.

மனித உரிமை பேசியவர்களை தெருவோரத்தில் கொன்றுபோட்டது இலங்கை அரசு. ஊடகவிலாளர்கள், எதிரணியினர், சமூகப்பற்றுள்ளவர்கள் எல்லாம் தமது வீட்டின் முற்றத்திலேயே கொல்லப்பட்டனர்.

அனகாரிகாவின் வழித் தோன்றல்கள்.

இலங்கை ஒரு பௌத்த நாடு; அதன் பாதுகாவலர்கள் சிங்களவர்கள்; மற்றைய சிறுபான்மையினர் வாழ்வதே அவர்களைப் பாதுகாப்பதற்காக்த் தான் என்ற உணர்வு சிங்கள மக்கள் மத்தியில் அனகாரிக தர்மபாலவினூடாக ஊட்டி வளர்க்கப்பட்டது. பிரித்தானியர்கள் உருவாக்கிய அனகாரிக தர்மபால இலங்கைப் பெருந்தேசிய வாதத்தையும், சோவனிசத்தையும் வளர்ப்பதில் வெற்றிகண்டார். இலங்கைப் பாட நூல்களில் அனகாரிக இன்றும் சிங்கள பௌத்ததின் புனித கதாநாயகனாகச் சித்தரிக்கப்படுகிறார்.

அவருக்காக முத்திரை வெளியிடப்படுகிறது. புனிதமான இலங்கை தேசத்தை பிற்பாடு வந்த தமிழர்களும் முஸ்லீம்களும் அழுக்குபடுத்துகிறார்கள் என்று வெளிப்படையாகவே கூறிய அனகாரிகவின் வழித் தோன்றல்கள் தான் இலங்கை பெருந்தேசிய அரசியல் வாதிகள்.

சரத் பொன்சேகா கனேடியப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அனகாரிகவின் சிந்தனையை உட்கொண்டு உமிழ்ந்திருந்தார்.

கொலைகாரர்களும், போர்க்குற்றவாளிகளுமான இந்த இரு வேட்பாளர்களின் சிந்தனைப் பின்புலமும் பௌத்த சிங்கள மேலாதிக்க வாதத்தின் பிரதியாகவே அமைந்துள்ளது. ஏதாவது ஒரு தந்திரோபாயத்தைப் பிரயோகித்து, கொல்லப்பட்டவர்கள் போக தமிழ்ப் பேசும் மக்களின் எஞ்சிய வாக்குகளை சுருட்டிக்கொண்டு ஜனாதிபதியாக ஆட்சிபீடம் ஏறிவிட வேண்டும் என்கிறார்கள்.

அன்னிய சக்திகள்

வன்னிப் படுகொலைகளை நிகழ்த்திய இந்த இரு அரச பயங்கரவாதிகள் உள்ளூர்ப் பிரதிநிதிகள் என்றால் அவர்களின் அன்னிய எஜமானர்கள் இந்தியா, சீனா, அமரிக்கா என்று இலங்கையில் தேர்தல் பனிப்போர் ஒன்றைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

பண உதவி, ஆலோசனை, ஆட்பலம் என்று அன்னிய ஏவல்கள் இரண்டிலொரு அரச பயங்கரவாதியை மக்களின் பிரதிநிதியாக உருமாற்றப் போட்டிபோடுகின்றன. சுப்பிரமணிய சுவாமி தமிழர்கள் ராஜபக்சவிற்கு வாக்களிக்காவிட்டால் இந்தியா தமிழர்களுக்கு உதவி புரியாது என மிரட்டுகின்றார். இந்திய ஆலோசனைக் குழு இலங்கையில் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக முகாமிட்டுள்ளது.

இன்னொரு புறத்தில், அமரிக்காவின் கைதேர்ந்த ராஜதந்திரி, ஆப்கான் படையெடுப்பில் பிரதான பாத்திரம் வகித்தவர்; ஈராக்கிய ஆக்கிரமிப்பின் சூத்திரதாரிகளுள் ஒருவார்; பற்றீசியா பட்டனிஸ் தனது அரசியல் சதுரங்கத்தை போரின் பின்னர் தெளிவாகவே ஆரம்பித்துவிட்டார். நோர்வேயும் அமரிக்காவும் சரத் பொன்சேகாவிற்கு பணபலத்தை வழங்குவதாக வந்த செய்திகள் ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

போராட்டத்திற்கு எதிராக…

ஈழத் தமிழர்கள் உலக அமைப்பின் மீது வெறுப்படைந்திருக்கிறார்கள். கோபம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சார்ந்த புலம் பெயர் தமிழர்களின் அனைத்தையும் தொலைவிலிருந்து செய்வதறியாது திகைத்துப்போய்ப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள். இவையெல்லாம் ஒருங்குசேர்ந்த மக்களின் நினவாற்றல் மறுபடி போராட்டமாக புதிய வீச்சுடன் அரச அதிகாரங்களுக்கு எதிராக முனைப்புப் பெறும் என்பதை அன்னிய சக்திகள் அறியாதவையல்ல. இவ்வாறான சந்தர்ப்பங்களில், மக்களின் கோபத்தைத் தற்காலிகமாகத் தணிப்பதனூடாகவே மக்களைக் கையாள்கின்றன. அழிவுக்குட்படுத்தப்படும் நாடுகளில் ஏகாதிபத்தியங்கள் இதற்காக பல வழிமுறகளைப் பிரயோகிக்கின்றன.

தன்னார்வ நிறுவனங்களை மக்கள் மத்தியில் விதைப்பது என்பது ஒரு புறத்திலும் மறு புறத்தில் ஜனநாயக வழிமுறைகள் என்ற அமைப்பாக்கலை அறிமுகப்படுத்தலும் போர் நிகழ்ந் நாடுகளில் பிரயோகிக்கப்படும் முறைமைகளாகும். ஜனநாய வழிமுறை என்ற அடிப்படையில் உலகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட, அழிவுக்குட்படுத்தப்பட்ட பெரும்பாலான நாடுகளில் போரின் இரத்தம் உறைவதற்கு முன்பதாகவே ஜனநாயக விரோதிகளை வைத்துத் தேர்தலை நடத்துவார்கள். ஈராக்கிலும், ஆப்கானிலும், யூகோஸ்லாவியாவிலும், ருவாண்டாவிலும் கூட இததைத் தான் இவர்கள் செய்திருக்கிறார்கள்.அவசரமாக நிகழ்த்தப்படும் இந்தத் தேர்தல் என்பதன் மறுதலையான உள் நோக்கம் மக்களின் வெறுப்புணர்வு அரச அமைப்பிற்கும் சர்வதேச அரச ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டமாகத் திரும்பிவிடக் கூடாது என்பதுதான்.

ஆயுதப்போராட்டத்தின் தேவை

அறுபது ஆண்டுகள் இனப்படுகொலையின் கோரத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் இன்று அதன் உயர்ந்த பட்ச வடிவத்தைக் கடந்து செல்கின்றனர். ஆயுதப் போராட்டம் முனைப்படைந்ததாகக் கருதப்படும் 80 களில் இருந்த தேவையை விட இன்னுமொரு பங்கு அதிகமாகவே இன்று அதன் தேவை உணரப்படுகிறது.

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன

இந்த நிலையில் பிரதான வேட்பாளர்களான இரண்டு அரச பயங்கரவாதிகள் தவிர, கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன என்ற “இடது” வேட்பாளர், வாக்குகளுக்காக மக்கள் முன் பிரசன்னமாகியுள்ளார். இவர் “இடது” பார்வை கொண்ட சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் பெருந்தேசிய இனத்தைச் சார்ந்த வேட்பாளர் என்றே வைத்துக்கொள்வோம். புலிகள் போராட்டத்தைத் தவறாக வழி நடத்துகிறார்கள் என்று தெரிந்து கொண்டும் அவர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழ்ங்கிய விக்கிரமபாகு தமிழ் குறுந்தேசிய வாதத்தின் சிங்கள்ப் பிரதிநிதியாகவே செயற்பட்டார் என்பதும் இன்று வரை அது குறித்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளத் தயாரற்ரவர் என்பது ஒரு புறமிருக்க புலிகளின் ஆதரவு அமைப்புக்கள் கூட இவரைக் கைவிட்டு அரச பயங்கரவாதியான சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்பது வேடிக்கையானதும் கூட.

இங்கு யார் எந்தப் பக்கம் என்பது தவிர, இன்றைய இலங்கைத் தேர்தல் என்பதன் அடிப்படையே கேள்விக்குரியதாகும்.

வன்னிப் படுகொலைக்கு எதிரான போராட்டங்கள்

வன்னிப் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில், தென்னிந்தியாவிலே இளைஞர்கள் தீக்குளித்துச் செத்துப் போயிருக்கிறார்கள். அர்ப்பணத்தோடும், தியாக உணர்வோடும் ஆயிரக்கனக்கானோர் தெருவில் இறங்கிப் போராடியிருக்கிறார்கள். புலம் பெயர் தேசங்களில் லட்சக்கணக்கான தமிழர்கள் தடைகளை மீறி, நகரங்களைச் செயலற்றுப் போகச் செய்திருக்க்கிறார்கள். ஆனாலும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில், வட கிழக்கிலோ, மலையகத்திலோ எந்தப் போராட்டங்களும் இனப்படுகொலையைக் கண்டித்து நிகழவில்லை. ஈராக்கிலும், காஷ்மீரிலும், இராணுவத்தின் இரும்புக்கரங்களுள் இருந்தே இவ்வாறான ஜனநாயக வரம்புகளுக்கு உட்பட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் நிகழ்கின்றன என்றால் ஏன் தமிழ் பேசும் சிறுபான்மையினர் வாழ்கின்ற பகுதிகளில் இவ்வாறான அரச எதிர்ப்புப் போராட்டங்கள் நிகழவில்லை என்று பலர் கேள்வியெழுப்புகிறார்கள். இதற்கெல்லாம் பல காரணங்கள் ஈழத்தின் குறிப்பான புறச் சூழலை ஒட்டி முன்வைக்கப்படலாம்.

சொல்லப்பட வேண்டிய செய்தி

நாங்கள் உலக நாடுகளின் பின்புலமாக அமைய, இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்திய இனப்படுகொலையை போர்க்குணத்தோடு ஒருங்கு சேர எதிர்க்கிறோம் என்று கூற தேர்தல் ஒரு புதிய சந்தர்ப்பம்.

உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளுக்கும், பரந்து கிடக்கும் மனிதபிமானிகளுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், உரிமை மறுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கும் இலங்கையில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்கள் யார் என்பதைப் புரியவைக்க இது ஒரு புதிய சந்தர்ப்பம். ‘நாங்கள் சாகடிக்கப்பட்ட மக்களின் பிணங்களின் மேல் நடத்தப்படுகின்ற தேர்தலை ஏற்றுக்கொள்ளவில்லை’. ‘இலங்கையின் ஒற்றை ஆட்சிக்குள் நடத்தப்படும் இந்த நாடகத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்.’

‘இந்த அமைப்பு முறை எமது உரிமைகளுக்கு எதிரானது. நாங்கள் திட்டமிட்டு இன்னுமொரு முறை ஏமாற்றப்படுகிறோம்’. என்பதை நாம் சார்ந்த உலகத்திற்குக் கூற வேண்டும். தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் வாழுகின்ற அனைத்துப் பிரதேசங்களும் ஒருமித்து தேர்தலைப் புறக்கணித்து,அனைத்தும் செயலிழந்து, தேர்தல் நாளில் தெருக்களும் வெறிச்சோடியிருக்குமானால் நாங்கள் உலகத்திற்கு சொல்ல வேண்டிய செய்தியைச் சொல்லலாம்.

20 thoughts on “தேர்தல் – தமிழ்ப் பகுதிகள் செயலிழக்கும்? : சபா நாவலன்”

 1. யாழ்ப்பாணத்தையும் வன்னியையும் வெறிச்சோடச் செய்யலாம்.
  மற்ற இடங்கள்?
  அவர்களை ஏன் வாக்குச் சீட்டுக்களைப் பழுதாக்கச் சொல்ல மாட்டீர்கள்?

 2. வீட்டை விட்டு வெலியெ சென்ரால் அது தன்மானம் எனநினைக்கிர இல வயது சாப்பாட்டுக்கு வழியில்லை என்ராலும் தன்மானம் என்ருநினைக்கும்.வீட்டிலேயெநின்ரு தன்மானம் காப்ப்தெ புத்தியுல்ல வழி.தமிழரை வோட்டு போடாதெ என்ரு சொல்வதும் இதைப் போன்ரதெ.வலி உண்ர்ந்தவன் பேசுகிரென் வாக்கு போடுவதை தடுக்காதேஎர்.

  1. உணவுக்கான தெரிவு கோழி எச்சத்துக்கும் ஆட்டுப் புழுக்கைக்கும் இடையில் என்றால் அது மனிதருக்கான தெரிவல்ல. புழுக்களுக்கானது.

   தன் மானமென்பதும் மதியூகம் என்பதும் தவறானதைத் தவிர்ப்பதே ஒழியத் தேடிப் போய்த் தவறான ஒன்றைத் தெரிவதல்ல.

   தளபதியார் 13வது சட்டத் திருத்தத்தையே தாண்ட மாட்டாரென்று ஜே.வி.பி. உறுதி கூறுகிறது.
   தளபதியார் மவுனங் காக்கிறார்.
   த.தே.கூ. சொற்கறுக்குத் தடுமாறுகிறது.
   தெரிவென்ன தெரிவு கேடகிறது இந்தத் தேர்தலிலே!

 3. ஒரு முறை செய்வது தான் தவறு என்று சொல்வது.மறுபடியும் செய்வதை,வேண்டுமென்றே செய்கிறார்கள் என்று சொல்வார்கள்.ஊடகமானது மக்களை சரியான வழியில் வழிநடத்த வேண்டும் நல்லது,கெட்டதை சீர் தூக்கிப் பார்த்து மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் கருத்துகள் முன் வைக்கப்பட வேண்டுமேயல்லாது,இன்னமும் நாங்கள் பிணத்தின் மேல் நடாத்தும் தேர்தலை பகிஷ்கரிக்கிறோம்,வாக்குச் சீட்டை பழுதாக்குகிறோம் என்பதெல்லாம் கவைக்குதவாது! இலங்கையில் கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த உச்சக் கட்ட கொடூரம் சர்வதேச சமூகத்துக்கு தெரியாதா என்ன?இன்னமும் மக்களை மாக்களாகவே நினைத்திருக்கிறாரா கட்டுரையாளர்?தேர்தலை பகிஷ்கரிப்பதால் ஒரு நாலு நாளைக்கு சர்வதேச ஊடகங்களில் அது பேசு பொருளாக இருக்கும்,அவர்களும் எத்தனை நாளுக்குத் தான் சந்திரகிரகணம்,சூரியகிரகணம்,கெயிட்டிப் பூகம்பத்தில் ஒரு லட்சம்,அறுபதாயிரம் மரணமென்று அரைத்த மாவையே அரைப்பது?அதன் பின்?மீண்டும் வீதி மறியல்,உண்ணாவிரதம்,உண்ணும் விரதமென்று மழை,வெயில்,குளிரென்று அலையச் சொல்கிறீர்களா?இது அருமையான சந்தர்ப்பம்.மகிந்தர் தன் தலையிலேயே மண் அள்ளிப்போட தேர்தலை(ஜனாதிபதி)முற் கூட்டியே அறிவித்து மாட்டியிருக்கிறார்.சர்வதேசம் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.இருவருமே போர்க் குற்றவாளிகள் தான்,தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான் இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை தான்.ஆனால், நாம் வாக்களிக்கிறோமோ,இல்லையோ தேர்தல்நடைபெறும் ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுவார்.அதிலே நாம் பங்கு கொண்டு கொடூரமான,குடும்ப ஆட்சியை ஒழித்து ஆட்சி மாற்றத்திற்கான எமது வாக்குப் பலத்தை பிரயோகிப்போமாயின்நாளைக்கே சிங்கள மக்கள் மனதில் ஒரு துளி இரக்கம் தோன்றலாமில்லயா?

  1. குடும்ப ஆட்சியை ஒழித்து ராணுவத் தளபதி வந்தால் பேரினவாதம் போய்விடுமா?
   ஒரு பிசாசு கொலை செய்தது. மற்றது செய்வித்தது.
   நம்மையே ஒழிய யாரை ஏமாற்றுகிறோம்?

  2. Yoga நண்பர் கூறுவது 100வீதம் சரி..நாம் இங்கிருந்து கொண்டு[வெளிநாட்டில்] முதல் விட்ட பிலைகலை இனி வரும் காலங்களிலும் விட கூடாது. நண்பர் எங்கிருந்து இக்கட்டுரையை[சபாநாவலன்] எழுதுகிறார் எனதெரியவில்லை.காரணம் பகிஸ்கரிப்பு, உண்ணாவிரதம்,மேடையில் வீரபெய்ச்சுக்கள்,ஊர்வல்ம் என்ற ஏமாற்ற வேலைகள் எல்லாம் கானும்[புலிகள் கூறி] இனியாவது இலங்கை தமிழ் மக்களூக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீன்மையாவது செய்யாமல் இருப்போம் என முடிவு கொள்வோம்…நன்றி..

  3. SIVA நீர் எழுதியது உண்மை. ஆனாலும் இ.தமிழ் மக்களுக்கு ஒரு பிரதிநிதிகள் தெவை தானே? எனது தனிப்பட்ட கருத்து த.தெ.கூட்டமைப்பை நம்பவேண்டிய நிலை இருக்கிறதள்ளவா? நன்றி.

  4. பேணாட் செல்வதில் நியாயமுண்டு.
   ஆனால் நமக்கு முன்னாலுள்ள குப்பையை விலக்காமல் உள்ளதில் ஏதாவதோடு என்றென்றும் மல்லாட முடியுமா?
   பொல்லாத பிரதிநிதிகள் இருப்பதை விட பிரதிநிதிகள் இல்லாமை உத்தமம்.
   நல்ல தலைமைகளை நம்மால் உருவாக்க முடியாதா?
   நமது தெரிவுகளை ஏன் தேர்தல் அரசியலுக்குள் மட்டுப்படுத்த வேண்டும்?
   ஒரு மாற்று அரசியல் பற்றி நாம் ஏன் சிந்திக்கக் கூடாது?

 4. நாங்கள் சாகடிக்கப்பட்ட மக்களின் பிணங்களின் மேல் நடத்தப்படுகின்ற தேர்தலை ஏற்றுக்கொள்ளவில்லை’. ‘இலங்கையின் ஒற்றை ஆட்சிக்குள் நடத்தப்படும் இந்த நாடகத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்.
  இதுவே இலங்கைத் தமிழர் மேற்கொள்ள வேண்டி தீர்மானம். என்பது தமிர்கள் பலரால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு தீர்மானமே.

  ஆனால் அதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படவில்லை.

  த.தே.கூட்டமைப்பினர் மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அவருக்கெதிரான சக்தி என்ற வகையில் எதிர்க்கட்சி பொது வேட்பாளரை ஆதரிக்கக் கோருகின்றனர்.

  இருவரும் – இருவர் சார்ந்து நிற்கின்ற கட்சிகளும் புலிகள் ஒழிக்கப்பட்ட பின்பு தமிழர்களுக்கு பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று வாதிட்டு வருகின்றனர். புலிகளின் அழிவுடன் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளும் அழிக்கப்பட்டு விட்டதாகக் கருதுகின்றனர்.

  இப்போது மதிந்த. சனநாக வாழ்வை ஏற்படுத்தியமைக்கு நன்றிக்கடனாக தமிழர்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்கின்றார்.!! மற்றது அவரது வடக்கின் வசந்தமும்.கிழக்கின் உதயமும் மூலம் நிறைவேற்றப்பட்ட அபிவிருத்திகளுக்காகவும் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்கின்றார்.!!!

  சரத் ஊழலற்ற ஒரு ஆட்சியை அமைப்பதற்காக வாக்குக் கேட்கிறார்.

  இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இவர்களை விட மிகவும் திறம்பட பேசிய – திறமையான வாக்குறுதிகளை வளங்கிய தலைவர்களைப் பார்த்திருக்கிறோம்.

  நாங்கள் உலக நாடுகளின் பின்புலமாக அமையஇ இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்திய இனப்படுகொலையை போர்க்குணத்தோடு ஒருங்கு சேர எதிர்க்கிறோம் என்பதற்கப்பால் வேறு எதனைக் கூறமுடியும்.

  விஜய்

 5. //யாழ்ப்பாணத்தையும் வன்னியையும் வெறிச்சோடச் செய்யலாம்.
  மற்ற இடங்கள்?
  அவர்களை ஏன் வாக்குச் சீட்டுக்களைப் பழுதாக்கச் சொல்ல மாட்டீர்கள்?//
  வாழ்நிலைதான் சிந்தனைப் போக்கைத் தீர்மானிக்கும். அதற்கான செயல்வடிவத்தையும் கூட. மக்களோடு வாழ்கின்ற இலங்கையின் புரட்சிகரக் கட்சிகளும் சமூக உணர்வுள்ளவர்களும் தான் இறுதியான தீர்மானத்தை முன்வைக்க முடியும். புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் இலங்கை மக்கள் சார்பாக முடிவெடுக்க முடியாது. ஆக, புறச் சூழலின் உண்மையான நிலைமைகளின் அடிப்படையில் மக்களின் அரசியல் விழிப்புணர்வையும் கோபத்தையும் மழுங்கடிக்க முனையும் இந்தத் தேர்தலை நிராகரிப்பதற்கான வெகுஜன இயக்கத்தை இலங்கையிலிருப்போர் ஆரம்பிக்க வேண்டிய தருணம் இதுவே.

 6. “புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் இலங்கை மக்கள் சார்பாக முடிவெடுக்க முடியாது. ” என்கிறீர்கள்.
  அது சரியானதே எனினும், புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் இலங்கை மக்களைப் பற்றிய அக்கறையுடையோர். அவர்களில் சிலருக்கு எட்டுகிற சில தகவல்கள் இலங்கையில் உள்ள நமக்கு எட்டுவதில்லை.

  எனவே வெளியிலிருந்தும் தொடர்ச்சியான ஆக்கமான விமர்சனங்கள் தேவை. புதிய சிந்தனைகளும் தேவை. பயனுள்ள ஆலோசனைகளும் தேவை.

  இலங்கையிலுள்ள சில மூத்த அறிஞர் பெரியோரை நினைத்தாலே நடுங்குகிறது.

 7. இப்போதாவது யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்!புலம் பெயர் தமிழர்கள் தங்கள் கருத்துக்களை எங்கள் மேல் திணிக்கவில்லை.என்ன செய்யலாம்,என்ன செய்யக் கூடாது என்று தங்கள் கருத்துக்களை சொல்லுகிறார்கள்!அவ்வளவே.இதனை எப்படி திணிப்பது என்று சொல்ல முடியும்?தீர்வு என்று ஒன்று ஏற்படும் பட்சத்தில் அவர்கள் அதிலே உள்ளடக்கப்பட மாட்டார்களா என்ன?அவர்கள் எங்கள் மக்கள் இல்லையா?ஏன் இப்படி விட்டேத்தியாக நடந்து கொள்கிறீர்கள்?இது கூட ஒரு வகை ஒடுக்கு முறை தான் என்பது தெரியவில்லையா?அல்லது அப்படி நடிக்கிறீர்களா?அவர்களின் கூக்குரலால் தான் இன்று மேற்குலகு உங்களுக்கு என்ன பிரச்சினை என்றாவது கேட் கிறார்கள்.மேலும்,தமிழ் தேசிய கூட்டமைப்பு தடுமாறுகிறது,தளபதி மவுனம் காக்கிறார்,ஜே;வி பி பதிமூன்று மைனஸ் என் கிறது என்று கூசாமல் சொல்கிறீர்கள்.யாராவது ஒருவர் நீங்கள் குறிப்பிடுவன பற்றி சொன்னதாக ஆதாரம் உங்களிடமுண்டா?பேசியதெல்லாம், தமிழ் மக்களின் உடனடி இயல்பு வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுப்பது பற்றித் தான்!படிப்படியாகத் தான் ஏனைய விடயங்களில் கவனம் செலுத்தப்படும்.ஒரே இரவிலோ,இருபத்து நாலு மணி நேரத்திலோ தீர்க்கப்படக் கூடிய பிரச்சினையல்ல இது.புரையோடிப் போன புண்ணுக்கு மெது,மெதுவாகத் தான் மருந்து போட்டு குணமாக்க வேண்டும்!!!எவ்வளவோ மூத்தோரெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டார்கள்!!கவலைப்படாதீர்கள்,இவர்களும் சில நாளில் போய் விடுவார்கள்!!!!!!

  1. உலக நாடுகளின் கவனத்தால் தமிழர்கட்கு ஒரு நன்மையும் கிட்டவில்லை. கிட்டியதெல்லாம் தீமையே.

   புலம் பெயர்ந்தோரின் உதவியின் பேரால் சுய லாபம் தேடுகிற கூட்டங்கள் பற்றி நாம் மிக எச்சரிக்கையாய் இருக்க வேண்டியுள்ளது.
   அந்தக் கூட்டம் தான் அமெரிக்காவை நம்பு, ஐ.நாவை நம்பு என்று சொல்லி 300,000 பேரை முட் கம்பி வேலிகளின் பின் தள்ள வழி செய்தது.
   30,000 வீண் சாவுகட்கு வழி செய்தது.
   அந்தக் கூட்டம் தான் இன்னமும் அமெரிக்காவின் பின்னால் தமிழ் மக்களை அலையச் சொல்கிறது.

   ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள். இங்குள்ளோர் எல்லா உதவிகட்கும் நன்றியுடையோர். ஆனால் தங்களை வைத்து வணிகம் நடப்பதையோ தங்கள் போராட்டம் அன்னியருக்குக் காட்டிக் கொடுக்கப் படுவதையோ ஏற்க ஆயத்தமாக இல்லை.

   இழக்கப் படுவன இங்குள்ளோரின் உயிர்கள், உடைமைகள், வாழ்வுகள். எனவே எங்கள் சார்பாக உங்கள் பாட்டில் முடிவெடுக்காதீர்கள்.

   முடிவுகளால் பாதிக்கப் படப் போவோரின்நிலையை யோசித்துச் செயற்படுங்கள். அவர்கட்காக முடிவெடுக்க யாருக்கும், த.தே.கூ. உட்பட, யாருக்கும் அதிகாரம் இல்லை.

   எல்லாரதும் கருத்துக்களும் வரவேற்கத் தக்கவையே. ஆனால் உதவி என்ற பேரில் சுய லாபம் கருதி உபத்திரவத்தையே தேடித் தருவோர் பற்றிப் புலம் பெயர்ந்தோர் விழிப்புடன் இருப்பது நல்லது.

   புண் இங்கே. மருந்தை எங்கேயோ போடாதீர்கள்.

 8. கடந்த கால அனுபவங்களில் இருந்தாவது தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் பாரம் பரியத்தை உருவாக்க நாம் பலர் வயது வேறுபாடின்றி அர்ப்பணிப்பதை விட்டுவிட்டு
  வீணான விவாதம் வேண்டாம்.

  1. தனிப்பட்ட தாக்குதல்களையும் பொய்களையும் தவிர்ந்த நூறு, ஆயிரம் கருத்துக்கள் வெளி வரட்டுமே.
   சரியானதைத் தெரியாமல் எதற்காக எவரும் அர்ப்பணிப்பது?

 9. கட்டுரையாளரின் உணர்வை மதிக்கிறேன். ஆனால், இன்றைய நிலையில் ஈழத்தமிழர்கள்  சரத்பொன்சேகா சாதாரண அரசியல்வதியல்ல; அதோடு அவர் இலங்கையில் சகல் அதிகாரமும் கொண்ட அதிபர் ஒருவரின் கீழ் ( ஜே.ஆர் முதல் மகிந்த வரை) கடமையாற்றிய ஓர் இராணுவ அதிகாரி என்னும் கோணத்தில்தான் அவரது கடந்த கால நடவடிக்கைகளை அணுகவேண்டும். இவையனைத்துக்கும் மேலாக, அவர் எந்தக்கட்சியையும் சாராது தனித்துப் போட்டியிடுவதால் அவருக்குக் குறிப்பிட்ட ஓர் கட்சியின் வளர்ச்சிக்காக செயலாற்றும் நிர்ப்பந்தம் இன்றிச் சுதந்திரமாக முடிவுகளை மேற்கொள்ளும் வசதி உள்ளது.எனவே, அவர் தெரிவு செய்யப்பட்டால், இப்போது ஆட்சியில் உள்ள மகிந்தாவைவிட தமிழருக்கு அதிகம் தீமைசெய்ய வாய்ப்பில்லை. ஏற்கனவே குற்றுயிரும் குறை உயிருமாய்க்கிடக்கும் ஈழத்தமிழினம் தன்னை மீண்டும் ‘உரிமைக்கான போராட்டங்களை’ நடாத்துவதற்கேனும்  தயார்செய்யும் வாய்ப்பினை அளிப்பதற்கு  பொன்சேகாவின் வெற்றியே அதிகம் வாய்ப்பினைத் தரும்.எனவே ஈழத்தமிழர்கள் அவரை ஆதரிப்பதே நன்மை அளிக்கும்.

  1. சரத் பொன்சேகாவின் பதவிக்கால உரைகளை நாம் மறந்துவிட முடியாது.
   அவரை ஆதரிக்கும் இரு கடசிகளும் பேரினவாதக் கடசிகளே.
   13ம் சட்டத்திருத்தத்தையே ஏற்காத ஜே.வி.பி. சொன்ன எதையுமே சரத் பொன்சேகா மறுக்கவில்லை.
   த.தே.கூ.வுடன் ஒருவிதமான வாக்குறுதியோ உடன்படிக்கையோ இல்லை.
   எதை நம்பி ஆதரிப்பது?
   அடிப்படை எதுவும் இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள். அதன் பின்னபு ஆராயலாம்.

   “மீண்டும் ‘உரிமைக்கான போராட்டங்களை’ நடாத்துவதற்கேனும் தயார்செய்யும் வாய்ப்பினை” சரத் பொன்சேகா எப்படித் தருவார்? கடுமையான ராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலமா?

   50 வருட அரசியல் சூதாட்டம் போதும்.
   சிறுபான்மைத் தேசிய இனங்கட்கும் சிங்கள மக்களுக்கும் ஒரு மாற்றுப் பாதை தேவை. அதற்கான தொடக்கப்புள்ளியாக நிராகரிப்பு அமைய முடியும். அது ஒதுங்கி நிற்பதல்ல. சபா நாவலன் சொல்வது போல உணர்வு பூர்வமாக மறுப்புத் தெரிவிப்பது.

 10. ஆனால் அதைநினைத்துக் கொண்டு இருப்பதாலும் எதையும் சாதித்து விட முடியாது.விழுந்தால் எழுந்து தடைகலை தாண்டி ஓட வேண்டிய தடகள ஓட்டமிது.இங்குநிற்பதற்குநேரமிலை.னின்றால்நாம் தோற்றவராகி விடுவோம்.

  1. “னின்றால்நாம் தோற்றவராகி விடுவோம்.”
   தவறானவர்களுடன் சேர்ந்து நடந்தாலும் ஓடினாலும் நாம் அ தினும் தோற்றவராகி விடுவோம்

 11. டக்ளஸ் இருக்கும் இடத்தில் தாங்கள் போனால் தங்களுக்கு வாய்ப்பில்லை என்று கூட்டமைப்பு>மறுபக்கம் போயிருக்கிறார்கள். இருவரும் தமிழர் அரசியலின் தலைமையைப் பிடிப்பதற்கே போட்டியிடுகிறார்கள். தமிழ் மக்களின் நலன் பற்றி பேசுவதும் அங்கிருந்துதான். பிரபாகரனிடமிருந்து மீண்ட மக்களை இவர்களிமிருந்தும் மீட்க மாற்று அரசியல் தேவைப்படுகிறது. ஜனாதிபதியாக யார இருக்கிறார் என்பது எம்முடைய பிரச்சினையில்லை. அது இந்த முழு நாட்டின் பிரச்சினை. இலங்கை உலக வல்லதிக்க சக்திகளிடமா? பிராந்திய வல்லாதிக்க சக்தியிடமா? நாங்கள் யாருக்கு வாக்குப் போடுகிறோம் என்பது அதைத்தான் தீர்மானிக்கிறது. வாக்குப் போடாமல் விடுவது என்பதும் ஒரு ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாம் துணை செய்கிறோம். இலங்கை அரசுக்கு எம்மீது இல்லாத அக்கறை சர்வதேசத்திற்கு இருக்கும் என்று எதிர்பார்த்து செயற்படுவது முட்டாள்தனம் என்பதை இன்று வரை உணரமல் இருப்பவர்கள் பற்றி என்ன சொல்வது?

Comments are closed.