தேர்தல்கள் ஆணையாளரின் தலைக்கு குறிவைத்து துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தப்பட்டது? : மங்கள சமரவீர

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவுத்தலைவர் மங்கள சமரவீர அநுரதப்புரம், மாத்தளை மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட செயலகங்களில் வாக்கு எண்ணுபவர்கள் பலர் துரத்தப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் வாக்குப்பெட்டிகளை தம்மால் பாதுகாக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளரின் தலைக்கு குறிவைத்து துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தப்பட்டதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
முதல் தடவையாக, தேர்தல் முடிவுகளை வெளியிடும் முறை ஒன்று தேர்தல்கள் திணைக்களத்தில் அமைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய மங்கள சமரவீர முதல் தடவையாக தேர்தல்கள் ஆணையாளரின் கையொப்பமில்லாமல் தேர்தல் முடிவுகள் மின் அஞ்சலில் அனுப்பப்பட்டு வாசிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளர்.