தேசிய உற்பத்தியை ஊக்கப்படுத்த உதவிக் கோரிக்கை

Latter page 1ஒரு இனம் அல்லது தேசியம் என அடையாளப்படுத்த மொழி, கலாசாரம், தன்னிறைவான பொருளாதாரம் என்பன அடிப்படையான அம்சங்களாகும். இதில் தற்போது எமது பொருளாதாரம் பல வழிகளில் முடக்கப்பட்டு வருகின்றமையை தாங்கள் அறிந்திருப்பீர்கள். யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது விவசாயம் மற்றம் கடல் ஆகும். இதில் விவசாயத்திற்கு பெயர் போனது வலிகாமம் பகுதி.

கடலின் பெரும்பகுதி அல்லது முக்கிய பகுதி மீன்பிடிக்க இயலாமல் உள்ளது. எமது மயிலிட்டி துறைமுகம் விஸ்தரிப்பு என்ற பெயரில் முடக்கப்பட போகும் நிலமையையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றோம். தற்போதுள்ள எமது அரசியல் தலைமைகள் இதற்கு வழிவகுத்து துணை நிற்பது மிகுந்த மனவேதனையைத் தருகின்றது.

வலிகாமம் பகுதி விவசாயம் நிலத்தடி நீர் கழிவு ஒயிலால் மாசடைந்து விவசாய விளைச்சல் சில முக்கிய இடங்களில் குறைந்துள்ளது. அதன் பிரச்சினையும் தாங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றோம்.

Land cleanig Photo 1மேலும் குடாநாட்டில் வேலையின்மை, சமூக அக்கறையின்மையால் போதைப்பொருள் பாவனை, கலாசாரத்திற்கு பங்கம் விளைவித்தல், ரவுடி கும்பலாக இளைஞர்கள் மாறுகின்ற இந்த அனைத்து நிலமையிலும் பற்றையாக கிடந்த 60 பரப்பு தரிசு நிலத்தை விளைநிலமாக்கி வேலை வாய்ப்பையும் தமது பகுதி மக்களின் பசியை போக்கவும் போசாக்கு மட்டத்தை உயர்த்தவும் முயற்சிக்கின்ற இப்பகுதி இளைஞர்களுக்கு உறுதுணையாக உபகரணங்களை வழங்கி விவசாயம் செய்ய உதவி புரியுங்கள் என்று தயவாகவும் அன்பாகவும் கேட்டுக் கொள்கின்றோம். தாங்கள் வழங்கும் 512,700.00 ரூபாவில் ஒரு தமிழ் சமூகம் உயர உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எஸ் சுதாபரன் 0776982593 , majuran522@gmail.com

நன்றி

இணைப்பாளர்

ம.ராஜமேனகன் Rajamenakan Menakan menakanaction@gmail.com 0772334186 ஏழாலை மேற்கு ஏழாலை