தொடரும் ஊடக அடக்குமுறை : இணையங்களுக்குத் தடை

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் இத்தருணத்தில் இலங்கையில் இயங்கும் இணையத்தளங்கள் முடக்கப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

லங்காஈநியூஸ், இன்போலங்கா உள்ளிட்ட சில இணையத்தளங்கள் இணைய வழங்குநர்களால் முடக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மக்களின் கருத்தறியும் சுதந்திரத்தை இந்த நடவடிக்கை பெரிதும் பாதிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது