தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்ட கால ‘ஷார்ப்வில் படுகொலை’யின் ஐம்பதாவது நினைவு நாள்!

 தென்னாப்பிரிக்காவில் ஷார்ப்வில் என்னும் இடத்தில் அமைதியாக ஊர்வலத்தில் ஈடுபட்ட கறுப்பினத்தவரை பொலிஸ்காரர்கள் சுட்டுக்கொன்ற சம்பவத்தின் 50வது ஆண்டு நிறைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி, பாஸ் புத்தகங்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்ற விதியை ஆட்சேபித்து ஷார்ப்வில்லில் மக்கள் ஊர்வலம் நடந்தபோது நிராயுதபாணிகளை பொலிஸ்காரர்கள் சுட்டுக்கொன்றிருந்தனர்.

அதில் 69 பேர் கொல்லப்பட்டார்கள், குறைந்தது 180 பேர்வரை காயமடைந்தார்கள்.

தென்னாபிரிக்க விடுதலைப்போராட்டம் சந்தித்த மிகவும் கொடூரமான படுகொலைத் தருணம் அது.