தென்கொரியாவுக்கு கொம்பு சீவுகிறது அமெரிக்கா.

 

வடகொரியாவுடன் முரண்பட்டுள்ள கொண்டுள்ள தென்கொரியாவுக்கு ஐக்கியத்தையும் ஆதரவையும் தெரிவிக்கும் வகையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண் டனும் பாதுகாப்பு அமைச் சர்ராபர்ட் கேட்ஸூம் ஆயுதம் ஏந்திய தென் கொரிய வீரர்கள் நிற்கும் எல்லை யைப் பார்வையிட்டனர்.கடந்த நான்கு மாதங்க ளாக இப்பகுதியில் பதட் டம் நிலவி வருகிறது. தென் கொரிய போர்க்கப்பல் ஒன்று நான்கு மாதங்க ளுக்கு முன் மூழ்கியது. அதை ஏவுகணை செலுத்தி வடகொரியா மூழ்கடித்து விட்டதாக, அமெரிக்காவும் தென்கொரியாவும் கூச்ச லிட்டன.அமெரிக்க அமைச்சர் கள் இருவரும் இருநாடு களின் எல்லைகளுக்கிடை யில் உள்ள ராணுவமற்ற பகுதியையும் வடகொரிய எல்லை வீரர்களையும் பைனாகுலர்கள் மூலமாக பார்த்தனர். கண் காணிப்புச் சாவடிக்குச் செல்லும் வழியின் இருமருங்கிலும் துப்பாக்கி ஏந்திய தென்கொ ரிய வீரர்கள் ராணுவமற்ற பகுதியின் வனங்களுக்குள் குறிவைத்த வண்ணம் நின் றனர்.அமெரிக்க வெளியுற வுத்துறை அமைச்சர் ஹிலாரி காபூல் மாநாடு முடிந்தவு டன் ஹனோய் செல்லும் வழியில் சீயோல் வந்தார். ஹனோயில் அவர் தெற்கு ஆசிய நாடுகள் அமைப் பின் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இரு அமைச் சர்களும் தென்கொரியா வின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச் சர்களைச் சந்திக்கின்றனர்.ராணுவப் பயிற்சிகள்தென்கொரிய கிழக்கு கடல்பகுதிகளில் அமெ ரிக்க, தென்கொரிய நாடுக ளின் விமானம் மற்றும் கப்பல் படைகள் அடுத்தவா ரம் ராணுவப் பயிற்சிகளில் ஈடுபடும் என்றும் அறிவிக் கப்பட்டது. கடந்த மாதம் நடைபெறவேண்டிய பயிற் சிகளை இருநாடுகளும் ஒத்திவைத்திருந்தன.1950-53 கொரிய யுத்தத் துக்குப்பின் தென்கொரியா வில் 28,500 அமெரிக்க வீரர் கள் நிறுத்தப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் ஏற்பட்ட பின்னரும் இன்று வரை போர் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்படவில்லை.