தூதரகத்தை அகற்றும் வரை போராட்டம் தொடரும் சிறைக்கு வெளியே வைகோ.

தமிழக மீனவர்களுக்கு எதிராகப் போராடிய வைகோ, நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யபப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். நேற்று அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது. இந்நிலையில் சிறையில் இருந்து வெளியில் வந்த வைகோ செய்தியாளர்களிடையேப் பேசும் போது, விடுதலையாகி

வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கைப் படையினர் தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும், அடித்தே கொன்றும் அட்டூழியம் செய்து வருகின்றனர். இந்த செயலுக்கு இந்திய அரசும் உடந்தையாக இருக்கிறது. இப்படிப்பட்ட கொலை பாதக செயல்களில் ஈடுபடும் இலங்கை அரசின் தூதரகம் இந்தியாவில் இருக்கக்க கூடாது. குறிப்பாக தமிழகத்தில் இருக்கவே கூடாது. அதை அகற்றியே ஆக வேண்டும். இலங்கை தூதரகத்தை அகற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார் வைகோ.