தீவிரமடையும் இலங்கை அரசு – ஈ.பி.டி.பி முரண்பாடு!

ஈபிடிபி அரசாங்கத்திற்கு கறையை ஏற்படுத்துவதாக யாழ்ப்பாண படைக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.
இந்துக்கல்லூரி மாணவன் கபிலநாத் படுகொலை தொர்பாக சந்தேகத்தின் பேரில் சாவகச்சேரி பொலிஸாரினால், ஈ.பி.டி.யின் தென்மாராட்சி இணைப்பாளர் அலெக்சாண்டர் சூசைமுத்து எனும் சார்ள்ஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வழக்கு தொடர்பாக சாவகச்சேரி நீதிவான் கே, பிரபாரகரனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிறுத்தப்படுவார் என, யாழ்ப்பாண கட்டளைத் தளபதி,தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தி ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்த அவர், மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு கறை சேர்க்கும் நடவடிக்கைகளை ஈபிடிபி மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அரச துணைக் குழுவாகச் செயற்பட்டுவந்த ஈ.பி.டி.பி அமைப்பிற்கும் அரசிற்கும் இடையேயான இந்த முரண்பாடு பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தமிழ்க் கட்சிகளை சுதந்திரக் கட்சியோடு இணையுமாறு மகிந்த குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்து வந்தது தெரிந்ததே. யாழ்பாணத்தில் நடைபெறும் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்கள் இந்த முரண்பாட்டுடன் தொடர்புடையவையா என பலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை இந்திய அரசுகள் பேச்சுநடத்தி வருவது அறியப்பட்டதே.

10 thoughts on “தீவிரமடையும் இலங்கை அரசு – ஈ.பி.டி.பி முரண்பாடு!”

 1. இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிரதேசங்களில் பொதுமக்களுக்கு எதிரான குற்றச் செயல்கள், சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், குற்றச் செயல்களை விசாரணை செய்து தீர்ப்பு வழங்கும் நீதவானுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைக் கண்டித்து, சட்டத்தரணிகள் திங்களன்ற்ரு அடையாள பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தார்கள்.
  இதனால், இந்த நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை. ஆயினும் ஏனைய நீதிமன்ற அலுவல்கள் இடம்பெற்றன.

  ஈபிடிபி உறுப்பினர் கைது

  கடந்த மாதம் சாவகச்சேரி பகுதியில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவன் ஒருவர் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை விசாரணை செய்து வரும் சாவகச்சேரி நீதவானுக்கு ஆயுதந்தாங்கியவர்களினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் தரப்பிலிருந்து கிடைத்த தகவலையடுத்து, அது தொடர்பாக யாழ் மாவட்ட ஆயுதப்படைகளின் தளபதிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

  அத்துடன் அந்தத் தகவல் குறித்து விரிவான விசாரணைகள் நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சாவகச்சேரி நீதவான் பொலிசாரக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பின்னணியிலேயே சட்டத்தரணிகளின் இன்றைய பணிபுறக்கணிப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  இதற்கிடையில், சாவகச்சேரி மாணவன் கபிலநாத்தின் கொலைச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வரும் பொலிசார் ஈபிடிபி கட்சியின் தென்மராட்சி பொறுப்பாளர் சாள்ஸ் எனப்படும் சூசைமுத்து அலக்சாண்டர் என்பவரை கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதையடுத்து, நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருக்கின்றது.

  செய்தியாளர் சந்திப்பு

  இதேவேளை, யாழ் நகரில் இருந்து வெளிவரும் செய்திப்பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்களுடன் யாழ் மாவட்ட ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க அவர்கள் நடத்திய சந்திப்பின்போது யாழ் மாவட்டத்தில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

  யாழ் மாவட்ட நிலைமைகள் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாயா ராஜபக்ச தலைமையில் ஆராயப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் யாழ் பிராந்திய இராணுவத் தளபதி இந்தச் சந்திப்பின்போது செய்தியாசிரியர்களிடம் கூறியுள்ளார்.

  இராணுவத்தின் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டு, பொலிஸ் இராணுவம் இணைந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆயினும் வீதித்தடைகளோ புதிய காவலரண்களோ அமைக்கப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கலந்து கொண்ட மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ் பிராந்திய இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

  அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது உத்தரவுக்கமைய சாவகச்சேரி நீதவானின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் மீதான அச்சுறுத்தல் தொடர்பாக விசாரணைகள்; நடைபெறுவதாகவும் யாழ் செய்திப்பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்களிடம் யாழ் பிராந்திய இராணுவத் தளபதி கூறியிருக்கின்றார்.

 2. யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் யாழ் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பலரதும் விமர்சனத்திற்குரியதோர் இயக்கமாக மாறியுள்ள நிலையில் தமிழ்மிரர் இணையதளம் ஈ.பீ.டீ.பீ செயலாளர் நாயகம் டக்கிளசு தேவானந்தாவுடன் விசேட பேட்டியொன்றை நடத்தியது.

  தனது வீணை சின்னத்தில் மக்கள் முன் செல்லமுடியாமல் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்று இன்றைய அரசாங்கத்தில் பாரம்பரிய கைத்தொழில்,சிறு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சராக பதவி வகிக்கும் டக்கிளசு தேவானந்தாவின் கருத்துக்களை தமிழ்மிரர் இணையதளம் பகிர்ந்து கொள்கிறது.

  இவ் 36 நிமிட ஒளிப்பதிவை கேளுங்கள்:

  http://www.tamil.dailymirror.lk/Videos/2180-ஈ-பீ-டீ-பீ-அரசின்-பங்காளிக்கட்சியா-தமிழ்-மக்களின்-ஜனநாயக-எழுச்சியா

  1. அம்மைச்சரின் பேட்டிக்கான உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களை வையுங்கள்.

 3. யாழ்.நகரில் நேற்று நடைபெறவிருந்த கண்டனப் பேரணி!

  யாழ்.நகரில் நேற்று நடைபெறவிருந்த கண்டனப் பேரணி ஒன்று இனந்தெரியாதவர்களின் அச்சுறுத்தல், மிரட்டல் என்பன காரணமாகக் கைவிடப்பட்டது என்றால் இதன் அர்த்தம் என்ன?

  இதற்க்கு பின்னால் யார் இருக்கிறார்கள்?

  ஏற்கனவே இன்று புலிகளும் இல்லாத நிலையில் முன்பு ஒரு பாராளுமன்ற பிரதிநிதிதுவதுடன் இருந்த டக்கிளசு அவர்களின் கட்சி இன்று மூன்று பாராளுமன்ற பிரதிநிதிதுவதுடன் இருக்கும் போது, அதுவும் யாழில் மேன்மை தங்கிய கவுரவ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்கிளசு தேவானந்தா அவர்களும் அதிகூடிய வாக்குகளில் மக்களால் தெரிவு செய்து மக்கள் நலன்களில் கூடுதல் கவனமெடுத்து செயலாற்றிவரும் நிலையில் அதே யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வரும், ஆள்கடத்தல், கப்பம்கோரல், கொலை, கற்பழிப்பு போன்ற சமூகவிரோத குற்றச்செயல்களை யாழில் யார் செய்கிறார்கள் என்று டக்கிளசு கூட்டம் அறியாத நிலையில் யாழ்.நகரில் நேற்று நடைபெறவிருந்த கண்டனப் பேரணி ஒன்று இனந்தெரியாதவர்களின் அச்சுறுத்தல், மிரட்டல் என்பன காரணமாகக் கைவிடப்பட்டது என்பது பல சந்தேகங்களை கிளப்புகிறது.

  யாழில் அதிகூடிய வாக்குகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட டக்கிளசுவை விட வேறு யார் இவ் மர்ம ஆள்கடத்தல், கப்பம்கோரல், கொலை, கற்பழிப்பு போன்ற சமூகவிரோத குற்றச்செயல்களை செய்கிறார்கள்?

  யாழில் அதிகூடிய வாக்குகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட டக்கிளசுவை விட வேறு யார் இவற்றை கண்டித்து “மக்கள் சத்தி” என்ற அமைப்பால் கண்டனப்பேரணி ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் தொலைபேசி அழைப்புகளில் பேரணியை நடத்தக்கூடாது என்று அச்சுறுத்தல் விட்டார்கள்?

  யாழில் அதிகூடிய வாக்குகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட டக்கிளசு….. மக்கள் நலம் சார்ந்த டக்கிளசு ஏன் அடுத்த மாகான சபை தேர்தலில் இன்னும் அதிகூடிய வாக்குகளில் மக்களால் தெரிவு செய்யப்பட (எத்தனை வீதமான வாக்குகளால் என்று என்னைக் கேட்காதீர்கள்) இவ் கண்டனப்பேரணியை தான் முன் நின்று நடத்தியிருக்கக் கூடாது?

  இதற்கிடையில் முன்பு தீவகத்தின் பொறுப்பாளராகவிருந்த, தற்போதைய யாழ்.மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) காரைநகர் ஒளிச்சுடர் விளையாட்டு கழக மைதானத்தில் மின்னொளியில் மாபெரும் கரப்பந்தாட்ட இறுதிப்போட்டியையும், பரிசளிப்பு நிகழ்வையும் சம்பிரதாயப்பூர்வமாக ஆரம்பித்து வைத்து பேசும் போது, “செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்கிளசு தேவானந்தா அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் மக்கள் நலன்சார்ந்த பணிகளை சகித்துக்கௌ;ள முடியாதவர்கள் அவர் மீதும் ஈ.பி.டி.பியின் மீதும் பல விதமான சேறு பூசும் நோக்கில் வேண்டத்தகாத அவதூறான பொய்ப் பிரச்சாரங்களை ஊடகம் என்ற போர்வையில் நின்றுகொண்டு எமது கட்சின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவருகின்றதை யாவரும் அறிவீர்கள்.

  எனவே எமது பணிகள் இவர்களால் மேற்கொள்ளும் பிரச்சாரங்களினால் நின்றுவிடப் பேவதில்லை அது இன்னும் உட்வேகம் கொண்டு முன்னெடுக்கப்படும்” என்றும் தெரிவித்துக் கொண்டார்.

  ஆனால் இந்த தீவகத்தின் பொறுப்பாளராகவிருந்த, தற்போதைய யாழ்.மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) யார், இவரின் பின் புலம் என்ன என்று யாவரும் அறிந்ததே. இவர் தீவகத்தின் பொறுப்பாளராகவிருந்த காலத்தில் தீவகத்தில் நடந்தவை சான்றுகளாக உள்ள நிலையில் இன்று இவர் யாழ்.மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அமைப்பாளராக பதவி உயர்த்தப்பட்ட நிலையில் யாழில் நடக்கும் சம்பவங்கள் என்னத்தை சொல்கிறது என்பதை மக்களே சிந்தியுங்கள்.

  யாழில் 721,359 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அதில் 168,277 வாக்காளர்களே வாக்களித்த நிலையில் டக்கிளசுவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வீணை சின்னத்திலேயே போட்டியிட முடியாத நிலையில் வெற்றிலையில் போட்டியிட்ட நிலையில் 47,622 வாக்குகளையே பெற்ற நிலையில், அதிலும் டக்கிளசு பதிவு செய்யப்பட்ட 721,359 வாக்காளர்களில் 28,855 வாக்காளர்கலாளையே தெரிவு செய்யப்பட்ட நிலையில் வெறுப்படைந்த நிலையில் தமக்கு வாக்களிக்காத மக்களை பழி வாங்குகிறாரா?

  இவர் எடுத்த 28,855 வாக்குகளில் தீவகத்திலேயே கூடுதலான வாக்குகளைப் பெற்ற நிலையில் தீவக பொறுப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) இன்று யாழ் மாவட்டப் பொறுப்பாளராக போடப்பட்ட மர்மம் என்ன?

  தீவக பொறுப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) இன்று யாழ் மாவட்டப் பொறுப்பாளராக போடப்பட்ட பின் யாழில் தலை தூக்கியிருக்கும் ஆள்கடத்தல், கப்பம்கோரல், கொலை, கற்பழிப்பு போன்ற சமூகவிரோத குற்றச்செயல்களை யாழில் யார் செய்கிறார்கள்?

  எல்லாம் ஆதாரத்துடன் இருக்கிறது.

  மக்களே! மாக்களாக இல்லாமல் சிந்தியுங்கள்!

  வவுனியாவில் இராணுவத்திற்கும் புலிகளிற்கும் இடையில் மக்களுக்கு பாதுக்காப்பாக அரணாக இருந்த புளொட் அமைப்பினரை கடந்த நகர சபை தேர்தலில் வெல்ல விடாமல் இவர்கள் செய்த சதிகள் யாவரும் அறிந்ததே!

  மக்களே விழித்தெழுங்கள்!

  மக்கள் சக்தியே மாபெரும் சக்தி!

  இவர்கள் இன்று அலுவலகம் அமைத்து இருக்கும் ஸ்ரீதர் தியட்டர் யாருடையது? வாடகை கொடுக்கிறார்களா?

  மக்களே திரண்டேளுங்கள்!

  போலிகளை இனம் காணுங்கள்!

  போலிகளை முற்றுகையிடுங்கள்!

  முன்னர் தீவகப் பொறுப்பாளராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த ஊர்காவத்துறையை சேர்ந்த மதனராசா தற்போது எங்க?

  இவரின் காலத்திலும் தீவகத்தில் இவர்கள் மக்களுடன் நடந்த விதம் மறக்கமுடியுமா?

  பொறுத்தது போதும் மக்களே திரண்டேளுங்கள்!

  போலிகளை இனம் காணுங்கள்!

  போலிகளை முற்றுகையிடுங்கள்!

  எல்லாவற்றிக்கும் ஒரே வழி ஸ்ரீதர் தியேட்டரை முற்றுகையிடுவதா?

  மக்களே சிந்தியுங்கள்!

  போலிகளை இனம் காணுங்கள்!

  போலிகளை முற்றுகையிடுங்கள்!

  மக்கள் சக்தியே மகா சக்தி!

  புதிய எழுச்சி எழட்டும்!

  எல்லாவற்றிக்கும் மனித நேயமும்; மனிதாபிமானமும் வேண்டும்!

 4. முன்னாள் மீன்பிடி அமைச்சரான பீலிக்ஸ் பெரேரா தற்போது சமூக சேவைகள் அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார். மீன்பிடி அமைச்சினை பாரமெடுத்துள்ள அமைச்சர் ராஜித சேனாரட்ண முன்னாள் அமைச்சர் தனது அமைச்சின் வாகனங்களை திருப்பி அளிக்கவில்லை எனக் கூறியபோது, தனது புதிய அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தனது அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களையும் யாழ் கொண்டு சென்றவிட்டதாகவும் அவை திருப்பியளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

  இந்நிலையிலேயே ஜனாதிபதி அமைச்சர்கள் அனைவரும் வாகனங்களை உரிய முறையில் உரிய அமைச்சுக்களுக்கு பாரமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

 5. இது ஈ.பி.டி.பியை வழிக்குக் கொண்டுவரும் உபாயமா அல்லது கை கழுவிவிடும்நோக்கமா என்று சொல்வது கடினம்.
  ஈ.பி.டி.பி. இந்திய ஆலோசனை கேட்காத கூலிப் படை.
  த. தே. கூ. இந்திய ஆலோசனை கேட்கும் கூலிப் படை.
  அவ்வளவு தான் வேறுபாடு.

  1. மசாலா அண்ணே!

   அங்கை ஒரு முரணும் இல்லை.

   ஈ.பி.டி.பி. இந்திய ஆலோசனையை மகிந்தவூடாக கேட்கும் கூலிப் படை.

   த. தே. கூ. இந்திய ஆலோசனையை மகிந்தவூடாகவும் கேட்கத் துடிக்கும் கூலிப் படை.

   அவ்வளவுதான்.

   இது எஞ்சி நிற்கும் எல்லாத் தமிழ் அமைப்புகளுக்கும் பொருந்தும்.

  2. வாதம் அண்ணை
   நீங்கள் சொல்லுகிறது மெத்தச் சரி தான்.

 6. இன்றைய செய்தியின்படி, யாழ்.சாவகச்சேரி நீதிவான் கே.ஜே.பிரபாகரனுக்கு பாதுகாப்பு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா உறுதியளித்துள்ளார்.

  இதனை அடுத்து வட மாகாண சட்டத்தரணிகள் மேற்கொண்டுவந்த பணிப் பகிஷ்கரிப்பு இன்றுடன் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமையுடன் தமது பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்தது.

  யாழ். சாவகச்சேரி வர்த்தகர் மகனின் படுகொலை தொடர்பில் மேற்படி நீதிவான் வழக்கு விசாரணைகளை நடத்தியிருந்தார். இந்நிலையிலேயே, குறித்த நீதிவானுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இதனை அடுத்து யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களின் சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

  இந்நிலையில் நீதிவானுக்கு அச்சுறுத்தல் விடுத்ததான சந்தேகத்தின் பேரில் யாழ். மாநகரசபை பிரதி மேயர் இளங்கோ (றீகன்) மற்றும் ஈ.பி.டி.பி.யின் தென்மராச்சி இணைப்பாளர் சாள்ஸ் என்றழைக்கப்படும் அலக்ஸாண்டர் சூசைமுத்து ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  இதே நேரம் “ஈ.பி.டி.பி. மீது களங்கம் ஏற்படுத்தும் தீய சக்திகளின் முயற்சிகள் கப்பம் கோருவோர் அச்சுறுத்துவோர் தொடர்பில் அவதானமாக இருக்கவும்!” என்றும் அறிக்கை விடுகிறார்கள்.

  அறிக்கை:
  “ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில தீய சக்திகள் திட்டமிட்ட வகையில் தொலைபேசியூடாக பொதுமக்களிடம் கப்பம் கோரியும் பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்தும் வருவதாக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

  எமது மக்களுக்கான நேர்வழியைக் காட்டி எமது மக்களை கடந்தகால துன்ப துயரங்களில் இருந்து மீட்டெடுக்கும் எமது கட்சியின் மக்கள் நலன்சார்ந்த பணிகளைப் பொறுத்துக் கொள்ளாத எமது மக்களைத் தொடர்ந்தும் துன்ப துயரங்களில் ஆழ்த்தி அதன்மூலம் தங்களது குறுகிய சுயலாப அரசியலை மேற்கொள்ள விரும்பும் சில தீயசக்திகள் குழப்பிய குட்டைக்குள் மீன்பிடிக்கும் நோக்கில் எமது கட்சியின் மீது பல்வேறு வழிகளிலும் சேறு பூசும் குறுகிய எண்ணத்துடனும் அதேநேரம் ஒரு கல்லில் இரு மாங்காய் என்ற ரீதியில் பணம் பறித்துக் கொள்ளும் நோக்கத்துடனும் திட்டமிட்டு செயற்பட்டு வருவதை இவ்வாறான செயற்பாடுகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

  இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் யாழ் மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அமைச்சர் அவர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். எச்சந்தர்ப்பத்திலும் எந்த நிலையிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் எந்தவொரு நபரிடம் இருந்தும் எவ்வித நிதியும் அறவிடுவதில்லை என்பது எமது மக்கள் அறிந்த விடயமாகும்.

  இந்த நிலையில் எமது கட்சியின் பெயரைப் பயன்படுத்தி இவ்வாறான சமுக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் வதந்திகளைப் பரப்புவர்கள் தொடர்பில் எமது மக்கள் விழிப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவதுடன் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது 021 2229824 – 0112503467 – 0777781891 எனும் தொலைப்பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு எமக்கு உடனடியாக அறிவிக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.”
  – ஊடகச் செயலாளர்

  இப்படியும் அறிக்கை விட காணாமல் போதலும், கொலைகளும் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன….

  அடுத்ததாக “ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் றீகன் கைது செய்யப்படவில்லை, அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை நிரூபிக்க நாமே அவரை பொலிஸாரிடம் விசாரணைக்காக ஒப்படைத்தோம் என கைத்தொழில் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேக செயலாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.”

  சாவகச்சேரி நீதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள றீகன் கைது செய்யப்பட்டமை தொடர்பாகக் கேட்ட போதே ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார்.அதேவேளை, றீகன் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என நிரூபிக்கவும் அவரைக் கூடிய விரைவில் விடுதலை செய்யவும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.” என்று அடுத்த அறிக்கை/ செய்தி.

  இவற்றில் இன்று உயிருக்கு உத்தரவாதமில்லாமல்… பாதுகாப்பிலாமல் இருக்கும் மக்கள் யாரை நம்புவது?

  யாழில் அதிகூடிய வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று தம்பட்டம் அடிப்பவரை நம்புவதா? ( 7 இலட்சம் பேரில் எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்று கேட்காதீர்கள்) அல்லது அரசாங்கத்தை நம்புவதா?

  அறிக்கைகளுக்கு மட்டும் பஞ்சம் இல்லை.

  அதுக்கை இன்று கிளிநொச்சிக்கு வேற கொண்டாட்டத்திற்கு சென்றுள்ளார் என்றும் செய்தி ( http://www.athirady.info/2010/05/14/75297 )

  என்னதான் நடக்குது உலகத்திலே என்று பாடுவதா….. எல்லாம் அரசியல் என்று நடப்பதைப் பார்த்துக் கொண்டு…. சகித்திதுக் கொண்டு இருப்பதா….

  * ஒரே நாடு…. ஒரே மக்கள் என்று ஜனாதிபதி அவர்கள் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும்.

  * ஐரோப்பிய, வட அமெரிக்க பாடசாலை விடுமுறைகளிர்க்கு தாயகம் செல்ல இருந்தவர்கள் தமது பயணத்தை இரத்து செய்துகொடு இருக்கிறார்கள்.

  * இவர்களை தாயகத்திற்கு வரவலைப்பதன் மூலம் அந்நிய செலவாணியை ஈட்டுவது மட்டுமல்லாமல் புலிகளும் அற்ற நிலையில் இன்றைய உண்மையான யதார்த்தைதை இவர்கள் தாமாகவே அறியக்கூடிய வாய்ப்பை கொடுக்கலாம்..

  * இதற்க்கு ஜனாதிபதி தலைமயிலான அரசாங்கம் எழு இலட்சம் மக்களில் 40 ,000 இற்கு உட்பட்ட மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒருவரின் நிலையை பரிசீலனை செய்ய வேண்டும்.

 7. அதிக வாக்குக்களால் தெரியப்பட்டவரென்ற டக்ளசின் தம்பட்டத்துக்கும் தாங்களே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற த.வி.கூ. தம்பட்டத்துக்கும் என்ன வேறுபாடு?
  வாக்குக் கணக்கைப் பார்த்தால் இரண்டு கதையும் ஒன்று தான்.
  தமிழ் மக்கள் தங்கள் முன் தெரிவு எதுவும் இல்லை என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.
  பாராளுமன்ற அரசியல் தகிடுதத்தங்கட்கு வெளியே ஒரு நல்ல மாற்று வழி பற்றிப் பேசுவோமா?

Comments are closed.