தீர்ப்பளிக்கப்பட்ட உடதலவின்ன படுகொலைச் சம்பவத்தின் குற்றவாளிகள் விடுதலை!

உடதலவின்ன படுகொலைச் சம்பவத்தின் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவப் படையதிகாரிகளை விடுதலை செய்வதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஏற்கனவே குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக மேன்முறை செய்யப்பட்டது.
~pராணி பண்டாரநாயக்க, கே.ஸ்ரீபவன் மற்றும் சீ.ஏக்கநாயக்க ஆகிய நீதியசர்கள் அடங்கிய குழு இந்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது, குறித்த இராணுவப் படையதிகாரிகள் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்துள்ளது.
 
 
  போதியளவு சாட்சியங்கள் வழங்கப்படாதமையினால் இவர்களை விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த மற்றும் அவரது புதல்வர்களான லொஹான் மற்றும் மஹேன் ஆகியோர் ஏற்கனவே குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

விஜேரட்ன முதலிகே ரஞ்சித் பண்டார, ஹெட்டிய மிரான்கே சந்திரசிறி, கமால் விஜேரட்ன, அனுர குமார மற்றும் திஸநாயக்க முந்தியன்சேலாகே புத்தி சாரங்க ஆகியோரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த 10 ஆதரவாளர்களை படுகொலை செய்ததாக அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த, அவரது புதல்வர்கள் மற்றும் 5 படையதிகாரிகளுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பாதுகாப்பு அமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும், படையதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

அன்றய காலப்பகுதியில் பெரும் பரபரப்பையும் இனரீதியான பதட்டத்தையும் ஏற்படுத்திய இந்தக் கொலைகளை அப்போதய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்தவின் ஆசீர்வாதத்துடன் படையினர் மேற்கொண்டிருந்தார்கள் என்பதனை உடத்தலவின்ன மக்கள் முழமையாகவே நமிபியிருந்ததோடு அதற்கான ஆதாரங்களையும் திரட்டியிருந்தனர்.

இதேவேளை முன்னைய பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த தற்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமானவர் என்பது கவனத்தில்கொள்ளத்தக்கது.