தீண்டாமை : அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் உண்ணாவிரதம்.

  
ஆலயங்களில் அர்ச்சனை செய்பவர்களிடையே தீண்டாமையை கடைப்பிடிப்பதை கண்டித்து திருவண்ணாமலையில் அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2006 ம் ஆண்டு அறிவித்தது. இதற்காக திருவண் ணாமலை, திருச்செந்தூர், பழனி, மதுரை ஆகிய இடங்களில் சைவ சமய அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளும், ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளும் துவக்கப்பட்டு, அவைகளில் பல்வேறு சாதிகளை சார்ந்த 206 மாணவர்க ளுக்கு ஒன்றரை ஆண்டு காலம் பயிற்சி அளிக்கப்பட்டது. நாட்டில் உள்ள பல் வேறு தரப்பினர்களிடையே இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இந்நிலையில் மதுரை கோயிலை சேர்ந்த பார்ப்பன அர்ச்சகர்கள் உச்ச நீதி மன்றத்தில் இந்த திட்டத்திற்கு இடைக் கால தடை பெற் றனர். பார்ப்பன குலத்தில் பிறந்த சிவாச் சார்யார்கள் மற்றும் பட்டாச் சார்யார்களை தவிர வேறு சாதியில் பிறந்தவர்கள் சாமி சிலை களை தொட்டு அர்ச்சனை செய்தால் அதன் புனித தன்மை கெட்டு தீட்டு ஏற்பட்டுவிடும். இதனால் பல லட்சக்கணக் கான பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் தமிழக அரசால் துவக்கப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளும் மூடப்பட்டன. அரசின் வாக்குறுதிகளை நம்பி பயிற்சி பெற்ற மாணவர் களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப் பட்டது.

எனவே அனைத்து சாதியினரும் அர்ச் சகராகும் திட்டத்திற்கு கடந்த 4 ஆண்டு காலமாக உச்சநீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட் டுள்ள தடையாணையை நீக்க வேண்டும், ஆலயங்களில் தீண்டாமையை கடைப்பிடிக் கும் பார்ப்பனர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவல கம் முன்பு அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ தலைமை தாங்கினார். அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாண வர்கள் சங்க நிர்வாகிகள் அரங்கநாதன், கணே சன், சண்முகம் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

5 thoughts on “தீண்டாமை : அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் உண்ணாவிரதம்.”

 1. “வேறு சாதியில் பிறந்தவர்கள் சாமி சிலை களை தொட்டு அர்ச்சனை செய்தால் அதன் புனித தன்மை கெட்டு தீட்டு ஏற்பட்டுவிடும்.” என்பதை ஏற்கும் நீதிமன்றம் ஒரு நீதிமன்றமா?

  கொலைகார சங்கராச்சாரி சங்கர மடத்துக்கு அதிபதியாய் இருப்பதால் கெடாத புனிதம் வேறு சாதியில் பிறந்தவர்கள் சாமி சிலைகளை தொட்டு அர்ச்சனை செய்தால் கெடுமா?

  யாராண்டாலும் தமிழக அரசு பார்ப்பனியத்துடன் மோதத் தயாரில்லை.

 2. வாக்கு விளயாட்டுக்காக அரசியல்வாதிகள் ஆடுகிற ஆட்டத்தில் அப்பாவி மக்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள் அரசியல்வாதிகள் அடுத்த ஆட்டத்திற்கு போய் விடுவார்கள் அப்பாவி மக்களால் முடியுமே? தார்மீகரீதியாகப்பார்த்தால் கூட படிப்பதால் மட்டும் யாரும் குருக்களாய் வருவதில்லை குருக்களாய் வருவது குடுப்பினை.

  கொலைகள் செய்தவனெல்லாம் சாதித்தலைவனாகி அவனுக்கெல்லாம் சிலை வைத்ததால் சிலைக்கு இருந்த சிறப்பே போய் சிலையாய் போன தமிழன் உயிர்க்க மாட்டானா, தன்னை குறீத்து சிந்திக்கவே மாட்டானா? எனும் உணர்வே மேலெழுகிறது.

  பாரதி கனவு கண்ட சாதியில்லா சமுதாயம் மலரட்டும்.

 3. “குருக்களாய் வருவது குடுப்பினை” என்று சொல்லிச் சொல்லியே –எத்தகைய நடத்தைக் கேடானவர்களாயினும்– ஒரு கூறிப்பிட்ட பிரிவினர் முழுச் சமூகத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்த முடிந்தது.
  அந்தக் கூட்டம் சிதம்பரத்தில் தமிழில் பாட நீதி மன்றம் அனுமதித்த பிறகும் தமிழில் பாட அனுமதி மறுத்தது.
  அதற்கு மக்கள் போரடியே உரிமை வெல்லப் பட்டது.
  இந்துக் கடவுளரையும் மதங்களையும் வர்ணசிரம சாதியத்தில் இருந்து விடுவிக்காமல் இந்தியாவுக்கு விமோசனம் இல்லை.
  சாதியில்லா சமுதாயம் போராடாமல் தானாக மலராது.

 4. அரசின் ஆணையை எதிர்த்து தடையுத்தரவு பெறப்பட்டது.வழக்கு உச்சஃநீதிமன்ற விசாரணையில் இருக்கிறது.அரசு இப்பள்ளிகளை தடையுத்தரவு பெற்ற பின் துவங்கியது. வழக்கில் தீர்ப்பு வருவதை பொறுத்தே அவர்களை பணியில் அமர்த்துவது குறித்து அரசு முடிவு எடுக்க முடியும்.
  இது தெரிந்துதானே அவர்கள் பயிற்சியில் சேர்ந்தார்கள். இப்போதும் தனியார் கோயில்களில் அவர்களை பணிக்கு அமர்த்த தடையில்லை.வழக்கு இந்து சம்ய அறநிலைய துறையின் கீழ்ந்-இர்வகிக்கப்படும் ஆகம விதிகளை அடிப்படையாக கொண்ட கோயில்களில் யார் அர்ச்சகராக இருக்க முடியும் என்பதை பற்றியது. எனவே இந்தப் போராட்டம் அர்த்தமற்றது. பயிற்சி பெற்ற மாணவர்கள் வேலைகளுக்காக அரசைநம்புவதை விட வேறு கோயீல்களில் வேலை தேடலாம். வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டாம்.

  1. போராட்டம் அர்த்தமுள்ளதா இல்லையா என்பது போராட்டத்தின் நியாயத்தை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பற்றியது.
   சட்டம் அநீதிக்குத் துணையாகவே பொதுவாகப் பயன் படுகிறது.
   ஆதிக்கக் காரர்கள் வழக்காடி வழக்காடிக் காலத்தை கடத்துவார்கள்.
   பாதிக்கப்பட்டோர் போராடிப் போராடித் தான் வெல்ல முடியும்.

Comments are closed.